Tuesday, April 10, 2012

திரைக்குவராதசங்கதி 29


திரைப்படங்களைத்தயாரிப்பதில்ம‌ட்டுமல்ல,அவ‌ற்றுக்குப்பெயர்பதிலும்ஏ.வி.எம். நிறுவனம் பல புரட்சிகளைச் செய்துள்ளது.தமிழ்த் திரை உலகின்உயர்ந்த இடத்தில் இருப்பவர்நடிகர் திலகம். ஏ.வி.எம்.தயாரித்து, நடிகர் திலகம் நடித்த படத்தின்பெயர்உயர்ந்தமனிதன்.தமிழ்த்திரைஉலகின்உயர்ந்தமனிதன்நடிகர்லகம்தான்என்பதைசொல்லாமல்சொல்லியுள்ளது
அப்படம்.ஏ.வி.எம். மின் இன்னொரு படம் சகல கலாவல்லவன். இது படத்தின் கதைக்கானதலைப்பு அல்ல.கமலை மனதில் வைத்துஇப்பெயர் சூட்டப்பட்டது. அதுபோல் இன்றும் சகல கலாவல்லவனாகத் திகழ்கின்றார்கமல்.மனிதநேயம் மிக்க ரஜினியை மனதில்வைத்து மனிதன் என்று தலைப்பிட்டார்கள்மனிதன் என்ற ஒரு படம் வெளியாகி1953ஆம்வெளியாகி படுதோல்வியடைந்தது. இந்த மனிதனும் அப்படித் தோல்வியடையும். ஆகையால் பெயரைமாற்றும்படி ஒரு சிலர்அறிவுறுத்தினார்கள்.ஆனால்ரஜினியின்மனிதத்தன்மையைவெளிஉலகுக்குக் காட்டவேண்டும்என்பதில்பிடிவாதமாகஇருந்தஏ.வி.எம்.மனிதன்என்றுபடத்துக்கு பெயரிட்டது.உயர்ந்தமனிதன்,சகலகலாவல்லவன்,மனிதன்ஆகியமூன்றுபடங்களும் வெற்றிப் படங்கள்.அவை வெளியான காலங்களில் அவை வசூலிலும்சாதனை
செய்தன..

உத்தர புருஷ் என்ற வங்க மொழிப்படத்தை தமிழில் தயாரிக்க முடிவுசெய்தது
ஏ.வி.எம். அப்படத்தின் உரிமையை வாங்கிஜாவார்சீதாராமன்மூலம்திரைக்கதை
அமைத்து யாரை நடிக்க வைக்கலாம் என்றுவிவாதித்தார்கள்.ஏ.வி. மெய்யப்பச் செட்டியாரின் மகனானசரவணன் நடிகர் திலகத்தை நடிக்க வைத்தால்நன்றாக இருக்கும் என்றார். மறு பேச்சின்றி அவரதுதகப்பன்ஒப்புதல்அளித்தார்.ஏ.வி.எம். முக்கும் சிவாஜி கணேசனுக்கும்சிறிது மனக் கசப்பு இருந்தது. அதைஎல்லாம் மனதில் வைக்காமல் சரவணன்,குமரன், முருகன் ஆகிய மூவரும் நடிகர் தில
கத்தின் அன்னை இல்லத்துக்குச் சென்றனர்.உத்தர் புருஷ் படத்தைப் பார்த்த நடிகர் திலகம் இப்படத்தின் கதாநாயகனாக நடிப்பதற்குஎனக்குவிருப்பமில்லை. டாக்டர்வேடத்தில் நடிக்கிறேன். சின்ன வேடம்தான்.கெஸ்ட்டாக நடிக்கிறேன் என்றார்.சரவணன் விடவில்லை. நீங்கள் தான் கதாநாயகனாகநடிக்கவேண்டும் என வற்புறுத்தினார். வேண்டா வெறுப்பாகத்தான் அதில்நடித்தார்நடிகர்திலகம். உயர்ந்த மனிதன்வெள்ளி விழா கொண்டாடியது. நடிகர் திலகத்தின் நடிப்பு ரசிகர்களினால் வியந்துபோற்றப்பட்டது.



சுட்டாலுஉன்னாருஜாக்கிரதாஎன்றதெலுங்குப்படத்தின்உரிமையைவாங்கியஏ.வி.எம்அப்படத்தில் ரஜினியைநடிக்கவைக்கவிரும்பியது.இதுபற்றிரஜினியுடன்கதைத்தபோதுயையோ அந்தப்படத்தைநான்ஏற்கனவேபார்த்துட்டேன்அதுஎனக்குச்சரிப்பட்டுவராது.நீங்கள்கமலைவைத்துஎடுங்கள்என்றார்.சரவணன்விடவில்லைநீங்கள்தான்நடிக்கவேண்டும்எனவற்புறுத்தினார்.அப்படத்தைவிசுவுக்குப்போட்டுக் காட்டிஅதில்உள்ளநல்ல,யஅம்சங்களைஆராய்ந்தார்கள்.விசுவின்ஆலோசனைப்படி கதையில்மாற்றம் செய்யப்பட்டது.அப்படம்தான் ""போக்கிரிராஜா''என்றபெயரில் வெளியாகி 100 நாள் ஓடியது. ப்படத்தில்நவரசத்திலகம்முத்துராமன்வில்லனாக நடித்தார். படப்பிடிபின் இடையில்அவர் மரணமானார்.இராம ரங்கண்ணரோடும் இன்னும் இருவருடனும் இணைந்து ஏ.வி.எம். மெய்யப்பச் செட்டியார்தயாரித்த படம் பச்சைவிளக்கு. புகை வண்டி சாரதியாக சிவாஜியும் அவரது நண்பராக நாகேஷும் என்றஅடிப்படையில் ஒரு கதையை உருவாக்கிபடப் பிடிப்பை நடத்தினார்கள். படம்பாதிமுடிந்துவிட்டதுஆனால்அதற்குபெயர்வைக்கவில்லை.
சரவணன் ஸ்டூடி÷யாவுக்குச் செல்லும் வழியில் ஒரு ரயில்வே கேட் ருந்தது. அதன்அருகே மூன்று கட்அவுட்களை வாடகைக்குவாங்கி ""சிவாஜி நடிக்கும் எனஎழுதிபச்சைவிளக்குபடம்வரைந்துஅதன்கீழேவருகிறதுஎனவிளம்பரப்படுத்தினார்.
ஏ.வி.எம். தயாரிக்கும் படம். சிவாஜி நடிக்கும் படம். றெயின் சம்பந்தப்பட்ட படம்என்று பலரும் பேசிக் கொண்டார்கள். படத்தின்பெயர் என்ன என்ற விவாதம் வந்தபோது பல பெயர்களைக் கூறினார்கள்பச்சை விளக்கைப் போட்டு வருகிறது எனவிளம்பரப்படுத்தியுள்ளீர்களே பச்சை விளக்கு தான் படத்தின் பெயர் என்று இயக்குனர்பீம் சிங்கும் வேறு சிலரும் கூறினார்கள். மக்களின் விருப்பப்படியே அப்படத்துக்குபச்சை விளக்கு எனப் பெயர் வைக்கப்பட்டது.பாதிப் படம் முடிந்த நிலையில் ஏ.வி. மெய்யப்பச் செட்டியார் படத்தைப் பார்த்தார்.அவருக்கு பிடிக்கவில்லை. வேறு கதைதயார்படுத்தும்படி கூறினார். அதன் பின்னர்தான் ஏ.வி.எம். ராஜன், புஷ்பலதா ஆகியோரின் பாத்திரங்கள் சேர்க்கப்பட்டன.
ரமணி
மித்திரன்
08/10/2006
88



No comments: