Sunday, April 8, 2012

திரைக்குவராதசங்கதி 28


சத்யா ஸ்ரூடியோவில் மக்கள் திலகம் எம்ஜி.ஆரின் "மீனவ நண்பன்' படத்தின் கடைசிக் கட்டப்படப்பிடிப்புநடைபெற்றுகொண்டிருந்ததுகவிஞர்முத்துலிங்கம்மக்கள்திலகத்தைசந்திப்பதற்காக சத்யா ஸ்ரூடியோவுக்குச்சென்றார். முத்துலிங்கத்தைக் கண்ட எம்ஜி.ஆர். அவரை அன்புடன் வரவேற்று ""இந்தப் படத்தில் நீ எழுதிய பாடல் எதுஎன்றுகேட்டார்.""நான்எழுதவில்லை'என்று ஒரு வரியில்பதிலளித்தார் முத்துலிங்கம். எம்.ஜி.ஆருக்கு அதிர்ச்சியாக இருந்தது"ஏன் எழுதவில்லை' என்று எம்.ஜி.ஆர்கேட்ட போது"என்னையாரும்கேட்கவில்லலைஎன்றார்முத்துலிங்கம்.
கவிஞர் முத்துலிங்கத்தின் பாடல்கள் எல்லாம் மிகப் பிரபல்யமான வேளையில் தனதுபடத்தில்அவரைபாட்டெழுதயாரும்கேட்கவில்லைஎன்பதைஅறிந்தஎம்.ஜிஆருக்குகோபம்அதிகமாகியது. படப்பிடிப்புத் தளத்தில் நின்ற புரொடக்ஷன் மனேஜரைக் கூப்பிட்டு ""முத்துலிங்கத்தை வைத்துபாட்டு எழுத சொன்னேன். ஏன்அவரைக்கேட்கவில்லைஎன்றுகோபத்துடன்கேட்டார்.""நாங்கள் தேடும் போது அவர் இல்லை''என்று புரொடக்ஷன் மனேஜர் கூறினார்""இப்போது வந்து விட்டாரே. இவரைவைத்து ஒரு பாடலை எழுதுங்கள்'' என்றுசற்றும்தாமதியாதுகூறினார்எம்.ஜி.ஆர்.
"மீனவ நண்பன்' படத்துக்குத் தேவையானபாடல்கள் அனைத்தும் படமாக்கப்பட்டுவிட்டன. புதியதொரு பாடலைச் சேர்ப்பதற்கு சந்தர்ப்பம் இல்லை. படப்பிடிப்பு இறுதிகட்டத்தை அடைந்து விட்டது. புதிதாகப்பாடலை சேர்க்க முடியாது என்று புரொடக்ஷன்மனேஜர் கூறினார்எம்.ஜி.ஆர். சமாதானமடையவில்லைதயாரிப்பாளர் சடையப்ப செட்டியாரையும்,இயக்குனர் ஸ்ரீதரையும் அழைத்து வரும்படிகூறினார். அவர்களிடம் கவிஞர் முத்துலிங்கத்தைக் காட்டி இவரது பாடல் ஒன்றைப்படத்தில் சேர்க்க வேண்டும் என்று கூறினார்.படப்பிடிப்பு முடிவடையும் கட்டத்தை
நெருங்கி விட்டது. தவிர பாடல் ஒன்றைஇணைக்கக் கூடிய சிற்றுவேசன் இல்லைஎன்று தயாரிப்பாளரும், இயக்குனரும் கூறினார்கள்.கதைக் காட்சிக்கு சிற்றுவேசன் தேவையில்லை. இவருடைய பாடலை ஒலிப்பதிவுசெய்த பின்னர் கூறுங்கள் அதன் பிறகு படப்பிடிப்பை நடத்தலாம் என்று எம்.ஜி.ஆர்.கண்டிப்பாகக் கூறி விட்டார் . எம்.ஜி.ஆரைச் சந்திக்க வந்த இடத்தில் ஏற்பட்ட இந்தப் பிரச்சினையால் செய்வதறியாது திகைத்து நின்றார் கவிஞர் முத்துலிங்கம். எம்.ஜிஆரின்கோபத்தால்உருவானபாடல்மிகப்பிரபலமானது"தங்கத்தில்முகமெடுத்துசந்தனத்தில் உடலெடுத்துமங்கையென்று வந்திருக்கும் மலரோ நீமாலை நேரம் பொன் மஞ்சள் நிலவோ'என்ற அப்பாடல் இன்று கேட்கும் போதும்இனிமையாக உள்ளது
.பாரதிராஜாவின் வெற்றிப் படங்களில்ஒன்று "கிழக்கே போகும் ரயில்' அப்படத்தில்இடம்பெறும் மாஞ்சோலைக் கிளிதானோ, மான்தானோ, வேப்பந்தோப்புக் குயிலும் நீதானோ' என்ற பாடலை ஒன்றரைமணி நேரத்தில் எழுதினார். அந்தப் பாட்டுக்காக1978 / 79 ஆம் ஆண்டின் சிறந்த பாடலாசிரியர் விருதைமிழகஅரசுஇவருக்குவழங்கியது"வயசுப்பொண்ணுஎன்றபடத்துக்கு பாடல்எழுத சந்தர்ப்பம் கிடைத்த போது,"காஞ்சிப்பட்டுடுத்தி' என்று ஆரம்பிக்கும்படி இயக்குனர் கே. சங்கர் அடியெடுத்துக்கொடுத்தார். இயக்குனர் சங்கரின் விருப்பப்படி"காஞ்சிப்பட்டுடுத்தி கஸ்தூரிபொட்டுவைத்துதேவதைபோல்நீநடந்துவரவேண்டும்அந்ததிருமகளும்உன்அழகைப்பெறவேண்டும்'என்றபாடலைஇரண்டுமணித்தியாலயத்தில்எழுதினார்மெல்லிசைமன்னர்எம்.எஸ்விஸ்வநாதன்அப்பாடலுக்குமுக்கால்மணிநேரத்தில்இசையமைத்தார்பாடலின்இசைஎல்லோருக்கும்பிடித்துவிட்டதுஅப்படத்துக்குப்பணஉதவிசெய்தஅடையப்பவள்ளலுக்குபிடிக்கவில்லை.பாட்டில்வேகம்இல்லை. பாட்டை மாற்றுங்கள் எனக் கூறினார். மெல்லிசை மன்னர் விடாப் பிடியாகநின்றுபடத்தில்அப்பாடலைஇடம்பெறச்செய்தார்படம்படுதோல்வியடைந்தது. பாடல்பெரு பெற்றி பெற்றது. தவிர அந்தஆண்டும் தமிழக அரசு கவிஞர் முத்துலிங்கத்தை சிறந்த பாடலாசிரியர் எனத் தெரிவுசெய்து விருதுவழங்கியதுதமிழ்ரசிகர்களால்மறக்கப்பட்டபடம்"எங்கஊருராசாத்தி' அப்படத்தில்கவிஞர்முத்துலிங்கம்எழுதிய"பொன்மானைத்தேடிநானும்பூவோடுவந்தேன்நான்வந்தவேளைஅந்தமானங்குஇல்லை'என்றபாடல்சோகத்தின்ஒவொருகணத்தையும்வெளிப்படுத்துகிறது
எம்.ஜி.ஆர்.சிவாஜிபடங்களில்மட்டுமல்லகமல்,ரஜினிபடங்களிலும்கவிஞர்முத்துலிங்கத்தின்பாடல்கள்இடம்பெற்றுபெரும்புகழடைந்தனகமல்முதன்முதலாககதாநாயகனாகநடித்த"உணர்ச்சிகள்' என்றபடத்திலும் இவரின் பாடல்கள் இடம்பெற்றன'காக்கிச் சட்டையில்' பட்டுக் கன்னம்தொட்டுக் கொள்ள, 'காதல் பரிசில்' காதல்மகராணி கவிதை பூ விரித்தாள்"இராணுவ வீரன்'"மூன்று முகம்',"தங்கமகன்',"நல்லவனுக்குநல்லவன்'"நாட்டுக்குஒருநல்லவன்ஆகியபடங்களில்இவரின்பாடல்கள்இடம்பெற்றனதங்கமகன்படத்தில்இடம்பெற்றவாவாபக்கம்வாஎன்றபாடல்பெரும்வரவேற்பைப்பெற்றபாடல்கே.விமகாதேவன்எம்.எஸ்விஸ்வநாதன்எம்.எஸ்சுப்பையாநாயுடுடி.ஆர்.பாப்பா,சங்கர்கணேஷ்,இளையராஜாகங்கைஅமரன்தேவா,லட்சுமிகாந்தபியாரிலால்,மனோஜ்கியான்மரகதமணி, ஷயாம்போன்ற முப்பதுக்கும் மேற்பட்ட இசையமைப்பாளர்கள் இவரின் பாடல்களுக்குஇசையமைத்துள்ளனர்ஒரு இடத்தில்இருந்துகொண்டுபாடல்எழுதஇவருக்குசிந்தனைவராது. நடந்துகொண்டே சிந்திப்பார். 1100 பாடல்களுக்குமேல் எழுதியுள்ள இவர் அதிகமானபாடல்களைநடந்துகொண்டேசிந்திக்கிறார்நடந்துகொண்டும்சுருட்டுப்புகைத்துக்கொண்டும்இருந்தால்இவரது சிந்தனைவெள்ளோட்டமாக வெளிவரும்.மொழிமாற்றுப் படங்கள் பலவற்றுக்கும் இவர் பாடல்கள்எழுதியுள்ளார். உதட்டசைவைவைத்துக் கொண்டு அதற்குரிய சொற்களைத்தேர்ந்தெடுத்து பாடல் எழுதுவது இலகுவானதல்லபுகழ்பெற்ற பாடல்கள் சிலவற்றைக் கேட்கும் போது கவியரசு கண்ணதாசனா, வைரமுத்துவா, வாலியா யார் எழுதிய பாடல்என்ற கேள்விஎழும்ஆனால் அப்பாடல்முத்துலிங்கம் என்ற கவிஞர் எழுதியது என்பது ஒரு சிலருக்குத்தான் தெரியும்ராகதீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோமணி ஓசை கேட்டு எழுந்து, சங்கீத மேகம்தேன் சிந்தும் நேரம், கூட்டத்திலே கோயில்புறா, ராகவனே ரமணா ரகு நாதா, சின்னச்சின்ன ரோஜாப் பூவே, சின்னஞ்சிறு கிளியேசித்திரப் பூவிழியே, ஆறும் அது ஆழமில்லை, டாடி டாடி ஓமை டாடி, இதழில்கதை எழுதும் நேரமிது போன்ற ஹிட்டானபாடல்கள் கவிஞர் முத்து லிங்கத்தின் புகழைச்சொல்லும் ஆவணங்களாக உள்ளன.


ரமணிமித்திரன்27/09/2006
87

1 comment:

Anonymous said...

உண்மையிலேயே இந்த பாட்டெல்லாம் வைரமுத்து/வாலி எழுதினதுன்னு இது வரைக்கும் நினைச்சுகிட்டு இருந்தேன். அற்புதமான பாடல்கள்.