நீச்சல் வீராங்கனை
ஜென்னா (Jenna) (23)
தனது இரண்டாவது வயதிலேயே நீந்தக் கற்றுக்கொண்ட இந்த வீராங்கனை தனது ஏழாவது வயதில் அதன் நெளிவு சுழிவுகளைக் கற்றுத்தேர்ந்தார். 5 அடி 8 அங்குல உயரமுடைய ஜென்னõவின் நீண்ட உடல் அவயவங்கள் தண்ணீருக்குள் ஓசையின்றி நீந்த உதவுவதுடன் அவரது கைகள் மூன்றரை நிமிடத்திலான 750 நகர்வுகளுக்கு நம்ப முடியாதளவும் பெரிதும் உதவுகின்றன. ஒல்லியான தோற்றமும் காருண்யப் பார்வையும் கொண்ட அவர் தனது உடல் அமைப்பை உரியவாறு பராமரித்து வருவதுடன் நீச்சல் தடாகத்தில் பத்து மணித்தியாலங்களை கழித்து வருவதுடன் வாரத்தில் ஆறு நாட்கள் தேகப்பயிற்சியிலும் ஈடுபட்டு வருகின்றார். ஜென்னாவுக்கு அப்பம் தோசை என்றால் அந்தளவுக்கு பிரியமாம். காலை உணவாக அவர் அப்பத்துடன் சீமைக் கோழி (வான்கோழி) யும் இரவு உணவாக பெரிய பஸ்டா (Pasta) வும் எடுத்து வருகின்றார்.
ரசெல் கோதோர்ன்
(Rachel cawthorn) (23)
(படகோட்டல் வீராங்கனை)
கில் போர்ட்டில் பிறந்த ரசெல் தனது 15 ஆவது வயதில் முதன் முதலில் எஸ்கிமோக்கள் பாவிக்கும் ஒரு வகைப்படகைச் செலுத்தக் கற்றுக் கொண்டார். ஆயினும் தவறி வீழ்ந்த அனுபவத்தையும் பெற்றார். இருந்த போதிலும் அது அவரைக் கைவிடவேயில்லை. அந்த நாள் தொட்டு படகு செலுத்தும் போட்டிகளில் பதக்கங்களைச் சுவீகரிக்கும் முதலாவது பிரித்தானிய வீராங்கனையாக விளங்கி வரும் ரசெல் ஐரோப்பிய மற்றும் உலக சம்பியன்ஷிப் போட்டிகளில் முறையே தங்கப் பத்கத்தையும் வெண்கலப் பதக்கத்தையும் தனதாக்கிக் கொண்டார்.
அவரது உடற்கட்டு இறுக்கமானதாகவும் நெகிழ்வõனதாகவும் அமைந்துள்ள அதேவேளை, அவரது 5 அடி ஒன்பது அங்குல உயரமானது அவரை நீண்ட நேரம் தண்ணீரில் போராட வைக்கப் பேருதவி புரிகிறதாம். காலை உணவாக அவர் யோகர்ட் மியூஸ்லி மற்றும் பழங்களையும் கொழுப்பை நீக்குவதற்கென தேன் பூசி சாப்பிட்டு வருகின்றார்.
டோனியா கௌச்
(சுழியோடி) (Tonia Couch)
பிளவுமவுத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட 23 வயதான டோனியா கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக சுழியோடியாக விளங்கி வருகின்றõர். தனது முழங்கை விலகிப் போனதன் பின்னர் அவர் தேகப்பயிற்சி செய்வதை நிறுத்தியிருந்தார். பிரித்தõனிய அதி கூடிய வெற்றி வாய்ப்புகளைப் பெற்ற பிரித்தானிய மகளிர் இரட்டையர் ஆட்டக்காரர்களாக டோனியாவும் சாரா பரோவுமே விளங்குகின்றனர்.
கடந்த 74 வருடங்களின் ஐரோப்பிய சம்பியன்ஷிப் போட்டியில் டோனியா தங்கப் பதக்கம் வென்றதுடன் நாளொன்றுக்கு ஆறு மணி நேரம் என்ற கணக்கில் வாரத்தில் ஆறு நாட்கள் பயிற்சியை அவர் எடுத்து வருகின்றார். தான் உண்பவற்றை அவதானித்து வரும் அவருக்கு சீனத்தயாரிப்புகள் மற்றும் மக்டொனால்ட்ஸ் நிறுவனத் தயாரிப்புகள் என்றால் மிகவும் பிடிக்குமாம்.
ஆன் கியோதாவொங்
(Anne keothavong)
(டென்னிஸ் வீராங்கனை)
தனது ஏழாவது வயதில் டென்னிஸ் விளையாட ஆரம்பித்த பின்னரும் முழங்காலில் இரு தடவைகள் அச்சுறுத்தும் சத்திர சிகிச்சைகள் செய்வித்த பின்னரும் கூட லண்டனைப் பிறப்பிடமாகக் கொண்ட ஆன் தற்போது பிரித்தானியாவின் இரண்டாம் தர வீராங்கனையாக வலம் வருகின்றார். 5 அடி ஒன்பது அங்குல உயரங் கொண்ட 28 வயதான அவர் கால்களுக்குச் சக்தியூட்டும் பயிற்சியை எடுத்து வருகின்றார்.
மோ ஃபாரா (Mo Farah)
நெடுந்தூர ஓட்ட வீரர்
சோமாலியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட 29 வயதான வீரர் மோ தனது எட்டு வயதில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தனது நாட்டை விட்டு வெளியேறி பிரித்தானியாவில் குடியேறினார். லண்டனில் உள்ள பாடசாலை விளையாட்டுப் போட்டிகளில் ஓடத் தொடங்கிய அவர் இளையோருக்கான ஐந்து பட்டங்களை வென்றார். குறுந்தூர அதிவேக ஓட்டத்தில் பிரபல்யம் பெற்றுள்ள அவர் ஒரு மைல் தூரத்தை 5.4 என்ற சராசரி நிமிடக் கணக்கில் ஓடி முடித்ததுடன் வாரமொன்றில் 120 மைல் தூரத்தை ஓடி முடிக்கின்றார். 5 அடி ஒன்பது அங்குல உயரமுடைய வீரர் மோவுக்கு கண்டிப்பான சாப்பாடென்று எதுவுமில்லை. ஆயினும் ஓட்டப் பந்தயமொன்றுக்கு முன்னர் அவர் மாச்சத்துள்ள உணவுகளை எப்படியும் எடுத்து
விடுவாராம்
.ரொம் ஜேம்ஸ் (Tom James)
படகோட்டல் வீரர்
"கார்டிவ்' எனும் இடத்தைச் சேர்ந்த 28 வயதான ரொம் கடந்த 2008 இல் சீனத் தலைநகர் பீஜிங்கில் நடைபெற்ற படகோட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார். கேம்பிரிட்ஜ் உடனான படகோட்டப் போட்டியிலும் வெற்றியடைந்துள்ளார். ஆறடி இரண்டு அங்குலம் உயரமுள்ள அவர் பின்பக்க தசைகளை முறுக்கேற்றி படகு வலிக்கும் யுக்தியைக் கொண்டவர். கிறிஸ்மஸ் தினத்திற்கு முன்னர் இருதய நோயால் பீடிக்கப்பட்டிருந்த போதிலும் போதிய சிகிச்சையும் கவனிப்பும் அவரைத் தொடர்ந்தும் போட்டிகளில் விளையாட அனுமதித்துள்ளன.
ரொம்மைப் போன்ற படகோட்ட வீரர்கள் பொதுவாக ஓட் (Oat)) எனும் தானியத்தை போட்டி தொடங்குவதற்கு மூன்று மணித்தியாலங்களுக்கு முன்னர் எடுப்பது வழக்கம்.
பிரையொனி ஷோ
(Bryony Shaw)
லண்டனைப் பிறப்பிடமாகக் கொண்ட பிரையொனி தனது 29 ஆவது வயதில் கடந்த 2008 இல் நடைபெற்ற ஒலிம்பிக் அலையாடல் போட்டியில் Windsurfingவெண்கலப்பதக்கம் வென்ற ஒரேயொரு பிரித்தானிய வீராங்கனையாவார். தனது ஒன்பதாவது வயதிலேயே அலைச்சறுக்கல் கற்றுக்கொள்ள ஆரம்பித்த அவர் கடந்த 2004 இல் கட்டிடக் கலை பற்றிய தனது பல்கலைக்கழகப் பட்டப்படிப்பை அலைச்சறுக்கலில் முழு நேரமாக ஈடுபடும் பொருட்டு ஒத்திப் போட்டார். 5 அடி 4 அங்குல உயரமுடைய அவர் அலையாடலில் ஈடுபட சிறிய தோற்றத்தைக் கொண்டவராயினும் இல்லையென்ற அளவுக்கு சமநிலை வாய்க்கப் பெற்றவர். காலையுணவாக அவர் கஞ்சியை அல்லது தானிக் கூழையே பாவிப்பதுடன் மதிய போசனத்திற்கென பழ வகைகளையும் இராச் சாப்பாட்டிற்கென உயர் புரதச் சத்துள்ள உணவுகளையும் எடுத்து வருகின்றார். போட்டிகள் முடிவுற்றதும் கோழி டிக்கா கூடிடுடுச் மசாலாவையே பெரிதும் விரும்பிச் சுவைக்கின்றார்
மெட்ரோநியூஸ்31/08/12
No comments:
Post a Comment