லண்டன் 2012 ஒலிம்பிக் நீச்சல் போட்டிகளில் நான்கு தங்கப்பதக்கங்களைத் தனதாக்கிக் கொண்டதை நினைவு கூரும் முகமாக ஒலிம்பிக் வளையங்களை அமெரிக்க நீச்சல் வீராங்கனை மிசிம்பிராங்ளின் பச்சை குத்திக் கொண்டுள்ளார்.
ஏனைய நீச்சல் வீரர்களான மைக்கேல் பெல்ப்ஸ் மற்றும் றியான் லொச்டே ஆகியோருடன் இணைந்தே அவர் பச்சை குத்தும் கழகத்தில் இணைந் துள்ளதாக தனது டுவிட்டர் இணையப் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளார்.
அனைதும் பச்சை குத்தப்பட்டாயிற்று ஆகா இதனை நம்பவே முடியவில்லை எனது ஒன்றே ஒன்றான பச்சை இது என தனது பச்சை குத்தப்பட்ட அழகைக் காட்டிடும் அந்தப்படத்துடன் அவர் கிச்சிடுகின்றார். அவர் ஒலிம்பிக் போட்டிகளில் நான்கு தங்கப்பதக்கங்களையும் வெண்கலப் பதக்கமொன்றையும் பெற்று ஒலிம்பிக் வரலாறு படைத்துள்ளார்
இந்த மாத முற்பகுதியில் வெளியாகியிருந்தToday show சஞ்சிகைக்கு அளித்திருந்த செவ்வியின் போது அவர் சக வீரர்களை மைக்கல் பெல்ப்ஸ் , பிரெண்டன் ஹான் சென் மற்றும் மட் கிறெவேர்ஸ் ஆகியோரைப் போன்று தானும் தனது உடம்பில் பச்சை குத்திக் கொள்வது பற்றி யோசித்து வருவதாகக் குறிப்பிட்டிருந்தார். நான் இவ்வாறு பச்சை குத்திக் கொள்வேனென இதற்கு முன்னர் நினைத்திருக்கவேயில்லை. ஆயினும் சம்பாதித்துக் கொள்ள வேண்டிய ஒன்றாகவே நான் இதனைக் கருதுவதுடன் அதிகளவு அர்த்தம் கொண்டுள்ள ஒன்றாகவும் நான் உண்மையில் இதனை மதிக்கின்றேன் எனவும் கூறிய அவர் இதனை இவ்வாறு வைத்துக் கொள்வது பெருமை சேர்க்கும் ஒன்றெனவும் குறிப்பிட்டார். அவரது தந்தையரான டிக் (Dick) இந்தப் பச்சை குத்தலுக்கான அங்கீகாரத்தை ஒலிம்பிக் சாதனை படைத்துள்ள தனது மகளுக்கு வழங்கியதுடன் அவர் சம்பாதிக்க வேண்டிய தொன்றே இது இதனை அவர் சம்பாதித்தே விட்டாள் என பெருமிதத்துடன் Today show சஞ்சிகைக்குத் தெரிவித்தார். கொரோடாவைச் சேர்ந்த நீச்சல் வீராங்கனையான மிசி ஃபிராங்ளின் 200 மீற்றர் நீச்சல் போட்டியில் தனது மூன்றாவது தங்கப் பதக்கத்தை வென்று உலக சாதனை படைத்துள்ளார். இன்னுமொரு அமெரிக்க நீச்சல் வீராங்கனையான எலிஸபெத் பெய்செல். அந்தப் போட்டியில் மூன்றாமிடத்தைப் பெற்றார். அவர் மிசி பற்றி கூறுகையில் ""மிசி எப்போதும் பிரம்மிப்பூட்டும் வகையிலேயே போட்டிகளில் ஜெயித்துக்காட்டுவார்'' அந்தப் போட்டியில் நான் மூன்றாமிடம் பெற்ற நிலையில் உணர்ச்சிவசப்பட்டபோது ஹாஸ்யமாக அவர் பேசி என்னைச் சிரிக்கவைத்தார் என்றார்.
மெட்ரோநியூஸ்24/08/12
No comments:
Post a Comment