லண்டன் 2012 ஒலிம்பிக் போட்டிகள் தொடரிலான 4து200 மீற்றர் நீச்சல் போட்டியில் அமெரிக்க வீரர் மைக்கேல் பெல்ப்ஸ் தங்கப் பதக்கத்தை வென்றதுடன், ஒலிம்பிக் போட்டிகளில் இதுவரை 19 பதக்கங்களுக்குச் சொந்தக்காரர் என்ற புதிய சாதனையையும் படைத்துள்ளார்.
முன்னாள் சோவியத் வீரர் லரிசா லட்டினியா கடந்த 48 வருடங்களாக தக்கவைத்திருந்த ஒலிம்பிக்கின் 18 பதக்கங்களைச் சுவீகரித்தவர் என்ற சாதனையை இதன்மூலம் பெல்ப்ஸ் முறியடித்துள்ளார்.
ஒலிம்பிக் போட்டிகளின் அதிசிறந்த வீரரென்ற பெருமையை அவருக்கு ஈட்டிக் கொடுத்த 19 பதக்கங்களை அவர் அடைவதற்கு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கடந்த செவ்வா#க் கிழமையன்று அவருக்கு கிடைத்திருந்த அந்த இரண்டு பதக்கங்களுமே வழி வகுத்திருந்தன.
அவர் 200 மீற்றர் பட்டர்ஃபிளை போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். ஒலிம்பிக் வரலாற்றில் மைக்கேல் பெல்ப்ஸ் இதுவரை 15 தங்கப் பதக்கங்களையும், இரண்டு வெள்ளிப் பதக்கங்களையும் மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்களையும் வென்றுள்ளன.
மெட்ரோநியூஸ்01/08/12
No comments:
Post a Comment