பேராதனைப்
பல்கலைக்கழகத்தில் தமிழ்[விஷேட] இறுதி
ஆண்டுப்பரீட்சையில் ஒரு அங்கமாக 1993/94 ஆம்
கல்வி ஆண்டில் ரஹீமா முஹம்மத்தால்
சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைதான் "இளங்கீரனின் இலக்கியப்பணி".
எழுத்தாளர்கள்
அவ்வப்போது தோன்றிக்கொண்டிருக்கிறார்கள்.சமுதாய நோக்கோடு சிந்தித்து
எழுதும் எழுத்தாளர்களைப்பற்றிய ஆய்வுகள் கண்டிப்பாகச்செய்யப்படவேண்டும். இளங்கீரனைப்பற்றித்தெரியாதவர்கள்
இந்தப்புத்தகத்தின் மூலம் அவரை முழுமையாக
அறியச்சந்தர்ப்பம் உள்ளது.
இலங்கையின்
வடமாகாணத்தில் பிறந்த அவரது இலக்கியப்பணி
மலேசியாவில் ஆரம்பமானது.மலேசியாவில் வெளிவந்த "ஜனநாயகம்" என்ற தினசரியின் மூலம்
மலேசியாவிலிருந்து இந்தியா,மலேசியாவிலிருந்து
இலங்கை என்ற முக்கோண
வடிவில் அவரது இலக்கியப்பணி நடைபெற்றதை அறியமுடிகிறது.பத்திரிகையில் மட்டுமல்லாது
வானொலியிலும் அவரது
இலக்கிய ஆழுமை நன்கு புலப்பட்டது.
1983 ஆம்
ஆண்டிலிருந்து 1992 ஆம் ஆண்டு வரை இளங்கீரனின் வானொலித்தொடர்பு
அறுந்திருந்தது என்பதைக்குறிப்பிடும் ஆசிரியர் அதற்கான
காரணத்தைத் தெளிவாகக்குறிப்பிடவில்லை.
எழுத்தாளர்களில் பலர் தம்மைச்சிறு வட்டத்துக்குள்
அடக்கி எழுதுகிறார்கள்.
ஆனால், இளங்கீரன்
அந்த வட்டத்தை
விட்டு வெளியேவந்து சாதி,இனம்,மதம்,சுரண்டல்,சிறுவர்
உழைப்பு, இலஞ்சம்,
வறுமை, ஏமாற்றம், நகைச்சுவை
எனப்பரந்த
அளவில் சிந்தித்து எழுதி
உள்ளதை பதிந்துள்ளார்.
கண்களுக்கு அழகுதருவது
கருமை அல்ல
கருணை நிறைந்த
பார்வை,முகத்துக்கு அழகுதருவது
பவுடரல்ல சாந்தம்,அதரங்களுக்கு அழகுதருவது லிப்ஸ்ரிக்கல்ல புன்னகை,கரங்களுக்கு அழகுதருவது பவுண் வளையல்களல்ல
கொடை,பொதுவாக பார்வைக்கு அழகுதருவது பகட்டல்ல தூய்மையான
எளிமை[பக்கம்
64] இது ஆடம்பரமான அலங்காரங்களைக் கைவிடக்கூறும் அறிவுரை
"தென்றலும் புயலும்","
நீதியே கேள்" ஆகிய இரண்டுக்கும் கொடுத்த
முக்கியத்துவம் மற்றைய நாவல்களுக்குக்கொடுக்கப்படவில்லை.இந்த நூலைப்படிப்பவர்கள்
அவரின் மற்றைய
நாவல்களை மட்டுமன்றி சிறுகதைத்தொகுப்புக்களையும், வானொலிநாடகங்களையும் படிக்க வேண்டும் என்ற
ஆவலைத்தூண்டியுள்ளார்.
நாவலைப்பற்றிய பிரயோசனமான
தகவல்கள் உள்ளன.நாவலின்
ஆரம்பம். அது
தமிழகத்திலும் இலங்கையிலும் பரவி வளர்ந்த பாங்கு
,உலகத்திலும் இந்தியாவிலும்
இலங்கையிலும் நாவலின் முன்னோடிகள் பற்றிய
குறிப்பு மிகவும் பிரயோசனமானவை.
வாழ்க்கையில்நாம்படித்துப்பயனடையவேண்டியநாவல்களைப்பட்டியலிட்டுக்காட்டியுள்ளார்.அவற்றைஎழுதிய
ஆசிரியர்களின்பெயரையும் வெளிவந்த ஆண்டையும்
தந்திருப்பது
சிறப்பாக உள்ளது.
ரமணி
தினக்குரல் 15/06/1997
2 comments:
வணக்கம்
எழுத்தாளர் இளங்கீரன் பற்றிய ஆய்வு மிக அருமையாக உள்ளது அவருடைய ஆளுமை விருத்தி பற்றி மிக அழகாக சொல்லியுள்ளீர்கள் வாழத்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
அன்புடன்
வர்மா
Post a Comment