Thursday, May 14, 2015

ஜெயித்தாரா ஜெயலலிதா?

   வருமானத்துக்கு அதிகமானசொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா,,சசிகலா,இளவரசி, சுதாகரன் ஆகியநால்வரும்  நிரபராதிகள் எனத்தீர்பளித்து நீதிபதி  குமாரசாமி விடுதலை செய்தார். அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகத்   தலைவர்களும் தொண்டர்களும் ஜெயலலிதா வென்று விட்டதாக மகிழ்ச்சி ஆரவாரத்துடன் கூத்தாடுகிறார்கள்.

பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் தமக்கு வழங்கப்பட்ட் தீர்ப்பை எதிர்த்து நால்வரும்மேன்முறையீடு  செய்தனர். மேன்முறையீடு ஏற்கப்பட்டு பிணையில் வெளிவந்த ஜெயலலிதாதான் நிரபராதி என்ற தீர்ப்பு வரும் வரை வீட்டுக்குள் முடங்கிக்கிடந்தார். கருணாநிதி முதல்வராக  இருந்தபோது கட்டப்பட்ட புதிய தலைமைச்  செயலகத்தில் கால் வைக்கமாட்டேன் என சபதம் எடுத்த ஜெயலலிதா முதல்வராகியதும் பழைய தலைமைச்செயலகத்தில் சட்டசபையைக்கூட்டினார். அதேபோன்ற ஒரு உறுதியுடன்  நிரபராதியாகும்வரை  காத்திருந்தார்.

ஜெயலலிதா குற்றவாளி எனத்தீர்ப்பு வெளியானதும் நீதியைப்புகழ்ந்து பேசியவர்கள் அவர் நிரபராதி  என தீர்ப்பு வெளியானதும் சந்தேகம் தெரிவித்தனர்.மேன்முறையீட்டு விசாரணை தினமும் பரபரப்பாக இருந்தது.எதிர்த்தரப்பு வழக்கறிஞர்களையும் அரசதரப்பு வழக்கறிஞர்களயும் நீதிபதி குமாரசாமி புரட்டி எடுத்துவிட்டார்.    அவர் கேட்கும் கேள்விகளுக்கு ஜெயலலிதாவின் வழக்கறிஞர்கள் தடுமாறும்போது ஜெயலலிதா தப்ப மாட்டார் என்ற எண்ணம் உண்டானது.குற்றத்துக்கான ஆதாரங்கள் எங்கே என  நீதிபதி  கேட்ட கேள்விக்கு அரச வழக்கறிஞர் பவானிசிங்  தடுமாறியபோது ஜெயலலிதா தப்பி விடுவார் என்ற மனநிலை தோன்றியது.

பவானிசிங்கின் வாதம் மோசமாக இருந்ததனால் அவரை மாற்றுவதற்கு அன்பழகன் முயற்சிசெய்தார்.ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்கு விசாரனைதுரித கதியில் நடைபெற்றது. அன்பழகனின் முயற்சியினால் பாவனிசிங்கின் நியமனம் செல்லாது என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.இந்தத்தீர்ப்பினால் ஜெயலலிதாதரப்பு அதிர்ச்சியடைந்தது.அவருக்கு எதிரானவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

இந்த அதிர்ச்சியும் மகிழ்ச்சியும்  அதிக நாள் நீடிக்கவில்லை.அரசதரப்பு வழக்கறிஞராக பவானிசிங் வாதாடியது செல்லாது.அவரின் வாதத்தை ஏற்கவேண்டாம். எனக்கூறி கர்நாடக அரசும் அன்பழகனும் தமது தரப்பு வாததத்தை  எழுத்துமூலம்    சமர்ப்பிக்க ஒரு நாள் அவகாசம் வழங்கியது நீதிமன்றம்.எதற்கும் தயாராக இருந்த அனபழகன் 81 பக்கங்களின் தனது  தரப்பு வாதத்தை எழுத்துமூலம் சமர்ப்பித்தார்.

புதிய வழக்கறிஞரைத்தேடிய கர்நாடக அரசின்கண்களுக்கு ஆச்சார்யா தென்பட்டார். 18 வருட வழக்கின் சாரத்தை  ஒரே நாளில் வடித்தெடுக்ககூடிய திறமை அவரிடம் மட்டும்தான் உள்ளது. 14வருடங்களாக  நீதிமன்றப் படியை மிதிக்காத ஜெயலலிதாவை குற்றவாளிக்கூண்டில் ஏற்றியவர் ஆச்சார்யா. அரசியல் நெருக்கடி மிரட்டல் என்பனவற்றினால்  ராஜினாமாச் செய்தார். ஆச்சர்யாவின் நியமனம் ஜெயலலிதா  தரப்புக்கு அதிர்ச்சியளித்தது. ஜெயலலிதாவுக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என நினைத்தவர்கள் மகிழ்ச்சியை கொண்டாடினார்கள். அவசரமாக களம் இறங்கிய ஆச்சார்யா 18 பக்கங்களில் தனது தரப்பு வாதத்தை  எழுத்து மூலம் முன்வைத்தார். 8000 ஆவணங்கள்  , 236 சாட்சிகளின் விசாரணையை ஒரேநாளில் தாக்கல் செய்வது சிரமமானதுதான்



எதிர்தரப்பு வழக்கறிஞர்  மூன்று மாதம் வாதாடினார்.அரசதரப்பு வழக்கறிஞர் வாதாட சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை.மூன்று மாதங்களில் வழக்கை முடித்துவிட வேண்டும் என்ற அவசரத்தினால் இந்த குழப்பநிலை எழுந்தது.என்றாலும் நீதிபதி குன்ஹா வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் நீதிபதி தீர்ப்பு வழங்க வேண்டும்  என மூன்று நீதிபதிகளும் அறிவுறுத்தினர்.. குன்ஹாவின் கடுமையான தீர்ப்பில் இருந்து  ஜெயலலிதா தப்ப முடியாது என்ற அபிப்பிராயத்தை இது ஏற்படுத்தியது.

நீதிபதி குமாரசாமியின் பார்வை வேறு மாதிரி இருந்தது.நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பிலிருந்த தவறுகளையும் பட்டியலிட்டார்.அப்பட்டியலின் பிரகாரம் ஜெயலலிதாவும் ஏனைய மூவரும் நிரபராதிகள் என நீதிபதி குமாரசாமி தீர்ப்பளித்தார் 18  வருட சிக்கல் நிறைந்த வழக்கின் தீர்ப்பை வெறும் மூன்று நிமிடங்களில் வாசித்தார்.

நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பு அனைவரையும் ஆச்சரியப்படுத்தியதுகுமரசாமியின் முன்னால் வந்த மேன் முறையீட்டு வழக்குகளில்  யாரையும் அவர் விடுதலை செய்யவில்லை. தண்டனையை உறுதி செய்தார் சிலவற்றுக்கு அதிக தண்டனை வழங்கினார். இந்தத் தீர்ப்பு தலை கீழாக மாறியதால் அதிர்ச்சியானது.

சுப்பிரமணியன்சுவாமி அரம்பித்துவைத்த வருமனத்துக்கு அதிகமான சொத்து வழக்கை குமாரசாமி முடித்து வைத்தார்.ஜெயலலிதாவுக்கு எதிராக 14 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. அனைத்திலும் அவர் நிரபராதி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.டான்சி நிலபேரம்,ப்ளசன்ற் ஸ்டே ஹோட்டல்,வர்ண தொலைக்காட்சிபெட்டி விநியோகம்,ஸ்பிக் பங்கு வருமானவரி கட்டாமைபோன்ற 14 வழக்குகளில் இருந்து ஜெயலலிதா விடுவிக்கப்பட்டார். சில வழக்குகளில் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டு மேல் முறையீட்டில்  நிரபராதியானார்வருமானவரிகட்டாத வழக்கில் வருமானவரிகட்டி சமரசமானார். இவற்றில் இரண்டு வழக்குகளில் எச்சரிக்கை செய்யப்பட்டார். 

ஜெயலலிதா நிரபராதிஎன்று நீதிமன்றம் தீர்பளித்ததனால்  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆனந்தக்கூத்தாடியது.அவரின் அரசியல் எதிரிகள் சோர்வடைந்தனர்.தீர்ப்பின் விபரம் வெளியானபின் சோர்வடைந்தவர்கள் சுறுசுறுப்பானார்கள்.நிதிபதி குமாரசாமியின் கணக்கில் உள்ள பிழை அவர்களை உற்சாகமடைய வைத்தது.

அனுபவஸ்தரான ஆச்சாரியா தனது 58 வருட   காலத்தில் இது போன்ற அதிர்ச்சியான தீர்ப்பை அறியவில்லை என்றார்.உயர் நீதிமன்றத்தை நாட கர்நாடக அரசுக்கு பரிந்துரைக்கப் போவதாக கூறிய அவர்  குமாரசாமியின் தப்புக்கணக்கையும் கையில் எடுத்துள்ளார். ஜெயலலிதாவை சுதந்திரமாக உலாவ விடப்போவதில்லை என சுப்பிரமணியன் சுவாமி சூழுரைத்துள்ளார்

கருணாநிதி ,வைகோ,ராமதாஸ்,இளங்கோவன்     விஜயகாந்த் ஆகியோர் குமாரசாமியையும் தீர்ப்பையும் கேலியுடன் விமர்சன்ம் செய்கின்றனர்.அடுத்த கட்ட விசாரணை தேவை என வலியுறுத்துகின்றனர்.
பிரமர் மோடி ஆளுநர் ரோசய்யா ஆகியோர் ஜெயலலிதாவுக்கு தொலைபேசியில் வாழ்த்துத்தெரிவித்தன்ர். திரை உலகம் ஜெயலலிதாவைக் கொண்டாடுகிறது. ரஜினியும் தன் பங்குக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அமைச்சர்களான சுஷ்மா ஹப்துல்லா ஆகியோர் அண்ணா திராவிட முன்னேற்றக்கழக எம்பிக்களுடன் மகிழ்ச்சியைக் கொண்டாடினர். சரத்குமார்,வேல்முருகன்,தமிழருவி மணியன் மதுரைஆதீனம் ஆகியோர் ஜெயலலிதாவை வாழ்த்தினார்கள்.

வருமானத்துக்கு அதிகமாக சொத்துச்சேர்த்த வழக்கின் தீர்ப்பு  தமிழகத்தை  மட்டுமல்லாதுஇந்தியாவையே திரும்பிப்பார்க்க வைத்துள்ளது.ஐபிஎஸ் அதிகாரி சேஷாத்திரிவருமானத்துகு அதிகமாக 3000 ரூபா வைத்திருந்ததால் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார். சுங்க அதிகாரியான  புகழேந்தி வருமானத்துக்கு அதிகமாக 90 இலட்சம் ரூபாவருமானத்துக்கு அதிகமாக வைத்திருந்தபடியால்  கைது  செய்யப்பட்டார். இவர்கள் இருவரும் நிரபராதிகள் என நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டதனால்  இரண்டு கோடிருபா வருமானத்துக்கு அதிகமாக வைத்திருந்தஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டார்தமது விடுதலை  ஒரு மாநிலமுதல்வரின் விடுதலைக்கு முன் உதாரணமாக இருக்கும் என்று அவர்கள் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள்.  


சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவை விடுதலை செய்த கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வது குறித்து ஆலோசனை வழங்குமாறு அரசு வழக்கறிஞர் ஆச்சார்யாவுக்கு, கர்நாடக சட்டத்துறை செயலர் சங்கப்பா கடிதம் எழுதியுள்ளார்ஆகையினால் வழக்கு எண் 835.836,837,838  மீண்டும் உயிர்  பெறும் நிலை தோன்றி உள்ளது.

No comments: