வருமானத்துக்கு
அதிகமாக சொத்துக்குவித்த வழக்கில் இருந்து நீதிமன்றத்தால் விடுதலை
செய்யப்பட்ட ஜெயலலிதா தமிழக
முதல்வர் பதவியை மீண்டும் பொறுப்பேற்க
தயாராகி விட்டார் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தால் குற்றவளியாக
தீர்ப்பளிக்கப்பட்ட ஜெயலலிதா மேன் முறையீடு செய்து நிரபராதியானார்.
நீதிபதி
குன்ஹா வழங்கிய தீர்ப்பினால் ஏழு
மாதங்களாக வீட்டில் முடங்கி
இருந்த ஜெயலலிதாவை நீதிபதி குமாரசாமி விடுதலை
செய்தார்.தமிழக அமைச்சர் பதவியை
கர்நாடக நீதிமன்றத்தில் இழந்த ஜெயலலிதா அதே
கர்நாடக நிதிமன்றத்தால்விடுதலை செய்யப்பட்ட பின்பே மக்கள்
முன் தோறுவேன் என சபதம் எடுத்தார்.
சபதத்தில் வெற்றி பெற்ற ஜெயலலிதா
வெள்ளிக்கிழமை மக்கள் முன் தோன்ற
உள்ளார்.
ஜெயலலிதா
குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு
வழங்கியதால் தெய்வத்துக்கும் மேலாக ஜெயலலிதாவைக்கொண்டாடிய அண்ணாதிராவிட முன்னேற்றக்
கழகத்தினர் ஆடிப்போய்விட்டனர். யாகம் சிறப்பூஜை,,காவடி புனஸ்காரம்
என தமிழகத்தின் சகல கோவில்களையும் முற்றுகையிட்டனர்.
ஜெயலலிதாவின் கடைக்கண் பார்வைக்காக
ஏற்கி நின்ற தலைவர்களும் தொண்டர்களும்
கடவுளின் கடைக்கண் பார்வைக்காக தவம் இருந்தனர்.நீதிபதி
குமாரசாமி வடிவத்தில் அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகத்தினர் கடவுளைக்கண்டனர்.
ஜெயலலிதா
விடுதலையான செய்தியின் மகிழ்ச்சியை முழுமையாக கொண்டாடுவதற்கிடையில் நீதிபதி குமரசாமியின் தப்புக்கணக்கு
வேகமாகப் பரவியது.தீர்ப்பு மாற்றமடையுமா
என்ற விவாதக்களம் சூடாகியது. இதை உறு திப்படுத்துவது போல ஜெயலலிதா
யாரையும் சந்திக்காது வாய்திறக்காது அமைதி காத்தார். தப்புக்கணக்கை கையில் எடுத்த எதிர்க்கட்சித்தலைவர்கள்
சதுராட்டம் ஆடினர். இவற்றை எல்லாம்
அமைதியாக அவதானித்தபடி இருந்த ஜெயலலிதா தான்
முதல்வராவதற்குரியநடவடிக்கைகளை
முடுக்கி விட்டுள்ளார்.
அண்ணாதிராவிட
முன்னேற்றக்கழக எம் எல் ஏக்கள்
கூட்டம் நாளைக்கு நடைபெற உள்ளது. அக்கூட்டத்தில்
ஜெயலலிதா முதலமைச்சராக ஏக மனதாகத் தேர்ந்தெடுக்கப்படுவார்.
23 ஆம் திகதி அவர் முதலமைச்சராகப்பதவி
ஏற்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
ஆறுமாதங்களுக்கு முதலமைச்சராக பதவி வகிக்கலாம். அதற்கிடையில்
ஒருதொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெறவேண்டும்.
தேர்தலில்
போட்டியிட்டு வெற்றி பெறுவது ஜெயலலிதாவுக்கு கஸ்ரமானதல்ல.தமிழக அரசு இயந்திரம்
அவரின் வெற்றிக்காக கடுமையாக உழைக்கும். ஜெயலலிதா முடிவெடுத்து விட்டார். எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாகாமல் சிதறிக்கிடக்கின்றன.
No comments:
Post a Comment