Sunday, May 24, 2015

ஐபிஎல் அசத்தல்கள்

ஐபிஎல் இறுதி போட்டியில் நேற்று இரவு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 41 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றது. அத்தோடு, 8வது ஐபிஎல் சீசன் முடிவுக்கு வந்தது. இந்த சீசனில் பல்வேறு அணிகள் மற்றும் வீரர்களால் படைக்கப்பட்ட சாதனைகள், கலக்கல் ஆட்டங்கள் பற்றிய ஒரு பார்வை:



நடப்பு சீசனில் மொத்தம் 4 சதங்கள் விளாசப்பட்டன. டிவில்லியர்ஸ், பிரெண்டன் மெக்கல்லம், கிறிஸ் கெய்ல் மற்றும் ஷேன் வாட்சன் ஆகியோர் தலா 1 சதங்கள் விளாசியிருந்தனர்
  டிவில்லியர்ஸ் தனிப்பட்ட முறையில் ஒரே போட்டியில் அதிக  ஓட்டங்கள் அடித்த   வீரராவார்.. மும்பை அணிக்கு எதிராக 133  ஓட்டங்கள் அதிரடியாக விளாசி,  ஆட்டமிழக்காது நின்று பெங்களூர் அணியை வெற்றி பெறச் செய்தார் டிவில்லியர்ஸ்.


 அதிவிரைவாக செஞ்சுரி அடித்தவர் என்ற பெருமை, கிறிஸ் கெயிலுக்கு உரியது. பெங்களூர் வீரரான அவர், பஞ்சாப் அணிக்கு எதிராக 46 பந்துகளில் சதம் விளாசினார். அந்த போட்டியில் பெங்களூர் அணி எளிதில் வென்றது.


19 பந்துகளில் பஞ்சாப் அணிக்கு எதிராக அரை சதம் அடித்த கொல்கத்தா வீரர் ஆன்ட்ரே ரசல் மற்றும் பஞ்சாப்புக்கு எதிராக 19 பந்துகளில் அரை சதம் அடித்த ஹர்பஜன் ஆகிய இருவருமே அதிவிரைவாக அரை சதம் அடித்த வீரர்களாகும்.


நடப்பு சீசனில் அதிகப்படியான பவுண்டரிகள் விளாசியது ஹைதராபாத் அணியின் டேவிட் வார்னராகும். அவர், 65 பவுண்டரிகள் விளாசியிருந்தார்.


நட்பு சீசனில் மொத்தம் 692 சிக்சர்கள் விளாசப்பட்டன. 686 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டன. மும்பைக்கு எதிராக 1 விக்கெட் இழப்புக்கு பெங்களூர் அணி 235  ஓட்டங்கள் எடுத்தது ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோராக அமைந்தது. 


  பெங்களூர் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ஆஷிஷ் நெஹ்ரா 10  ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தியது நடப்பு சீசனின் சிறந்த பந்துவீச்சு பஞ்சாப் அணியின் மிட்சேல் ஜான்சன், 151.11 கிலோமீட்டர் வேகத்தில் வீசியதுதான் நடப்பு சீசனில்    அதிவேக பந்து வீச்சாகும்.
 சென்னைக்கு எதிரான போட்டியில் ஜாகீர்கான் 18 டாட் பந்துகளை வீசினார். 4 ஓவர்கள் வீசிய அவர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி 9  ஓட்டங்கள் மட்டுமே கொடுத்தார். ஆக, 18 பந்துகளில்  ஓட்டங்கள் கிடைக்கவில்லை. நடப்பு சீசனில் ஒட்டுமொத்தமாக நெஹ்ரா 170 டாட் பந்துகளை வீசி முதலிடம் பிடித்துள்ளார். 22 விக்கெட்டுகளையும் நெஹ்ரா வீழ்த்தியுள்ளார்.



நடப்பு சீசனில் அதிக மெய்டன் ஓவர்களை வீசியது பஞ்சாப் அணியின் இளம் வீரர் சந்தீப் ஷர்மா. லீக் ஆட்டத்தோடு, பஞ்சாப் நடையை கட்டினாலும்கூட, அவர் 4 மெய்டன்களை வீசியிருந்ததை வேறு பவுலர்களால் முறியடிக்கமுடியவில்லை.



2014- கொல்கத்தா நைட் ரைடர்ஸ்,
 2013- மும்பை இந்தியன்ஸ்,
 2012- கொல்கத்தா நைட் ரைடர்ஸ்,
2011- சென்னை சூப்பர் கிங்ஸ்,
2010- சென்னை சூப்பர் கிங்ஸ்,
2009- டெக்கான் சார்ஜர்ஸ்,

2008- ராஜஸ்தான் ராயல்ஸ்

 

No comments: