உலகின் மிக உயர்ந்த இடத்தில் இடுப்பதால் பெருமைப்பட்ட நேபாளத்தை பூகம்பம் புரட்டிப்போட்டு விட்டது சரித்திரப்பிரசித்தி பெற்ற புராதன கட்டடங்கள் தரைமட்டமாகிவிட்டனஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி 7.6 ரிகட அளவில் ஏற்பட்ட பூகம்பம் நேபாளத்தை புரட்டிப்போட்டது. இந்த்ப்பூகம்பத்தினால் 7500 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். இடிபாடுகள் அப்புறப்படுத்தப்படும்போது மரணனமானவர்களின் தொகை 10000 ஐ தாண்டலாம் என அஞ்சப்படுகிறது. 50 இலட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இடிந்த நேபாளத்தைக்கட்டி எழுப்ப 25 வருடங்கள் தேவைப்படும்.
சுற்றுலாப்பயணிகளின் எழில்மிகுநாடு நேபாளம்.சாகசம் செய்பவர்களின் இதயபூமி. 10000ஆயிரத்துக்கும் அதிகமான வெளி நாட்டுபயணிகள் நேபாளத்தில் சிக்கினார்கள். ஆயிரத்துக்கும் அதிகமான மலை ஏறும் வீரர்கள் அந்தரத்தில் தவித்தனர். பூகம்பத்தில் சிக்கிய 25 மலை ஏறும்வீரர்கள் மரணமானார்கள் உலக நாடுகள் உதவிபுரிய முன்சென்றன.
பூமித்தகடுகளின் அசைவே பூகம்பத்துக்குக் காரணம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். 80 வருடங்களுக்கு ஒரு முறை பூகம்பத்தின் கோரத்தாண்டவம் நேபாளத்தை புரட்டிப்போடும் என்பது அந்நாட்டின் பூர்வீகக்கதை. 2கோடி 80 இலட்சம் மக்கள் வழும் நேபாளத்தின் தலைவிதியை ஒரு பூகம்பம் மாற்றி எழுதியது.
தலைநகரம் காட்மண்ட் இடம் மாறிவிட்டது இமயமலை சற்று உயர்ந்து விட்டது.கர்ப்பிணிகள் சிறுவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்லனர். வதந்தியும் திருட்டும் மக்களை அச்சுறுத்துகின்றன.காட்மண்டுக்கு வடக்கே 80 கி.மீதூரத்தில் உள்ள லம்ஜாம் கிராமம் உருத்தெரியாமல் அழிந்துள்ளது.
1832ஆம் ஆண்டு கட்டப்பட்ட வரலாற்றுச்சின்னமான தாரஹா தரைமட்டமானது . இக்கட்டடத்தி நின்ற சுமார் 200 உல்லாசப்பயணிகளின் உடல்கள் மிட்கப்பட்டன. மீட்புப்பணி துரித கதியில் நடைபெறுகிறது. சுமார் 50 ஆயிரம் கரிப்பிணிகள் பாதிப்படைந்துள்ளனர். பனிப்பாறை சரிந்து 250 பேர் பலியானார்கள்.
புத்ததூபி பெரும்பாதிப்படைந்துள்ளது. பசுபதி நாதர் கோயில் சிறு பாதிப்புடன் தப்பிவிட்டது.
நேபாளத்தைத்தாக்கிய பூகம்பம் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. பீகார்,உத்தரப்பிரதேசம்,மேற்குவங்காளம்,ராஜஸ்தான்,அரியானா,டில்லி,பஞ்சாப் ஆகிய மாநிலங்களிலுல் சிறிய சேதத்தை உண்டாக்கியது.
உலகை அச்சுறுத்திய பூகம்பங்கள்
நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் கடந்த 80 ஆண்டுகளில் நிகழ்ந்த
மிகப்பெரிய நிலநடுக்கம் ஆகும்.
1906 ஜனவரி 21 :– ஈக்வடார் கடற்கரை பகுதியில் பூகம்பத்தால் சுனாமி
ஏற்பட்டு 500 பேர் பலியானார்கள்.
1922 நவம்பர் 11 :– சிலி–அர்ஜென்டைனா எல்லையையொட்டி 8.5 ரிக்டர் அளவுக்கு
நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் ஏற்பட்ட சுனாமியில் சிலி கடற்கரை சேதமானது.
1923 பிப். 3 :– ரஷியாவில் விந்தூரா கிழக்கில் உள்ள சம்சக்தாவில் 8.5
ரிக்டர் அளவுக்கு நில நடுக்கம் மற்றும் சுனாமி.
1934 ஜனவரி 15 :– நேபாளத்திலும், பீகாரிலும் ஏற்பட்ட நிலநடுக்கத்தில்
10,700 பேர் உயிரிழந்தனர். பூகம்ப அளவு 8.1 ரிக்டராக பதிவானது.
1938 பிப். 1 :– இந்தோனேசியாவில் யாண்டா கடற்பகுதியில் 8.5 ரிக்டர்
அளவுக்கு நிலநடுக்கமும் சுனாமியும் ஏற்பட்டது.
1950 ஆகஸ்டு 15 :– திபெத்தில் 8.6 ரிக்டராக பதிவான நிலநடுக்கத்தால்
750 பேர் பலியானார்கள்.
1952 நவம்பர் 4 :– ரஷியாவில் கம்ஷக்தா பகுதியில் 9 ரிக்டர் அளவில்
ஏற்பட்ட பூகம்பத்தில் உயிர் இழப்பு இல்லை. ஆனால் ஹவாய் தீவில் 30 அடி உயரத்துக்கு
சுனாமி பேரலைகள் உருவெடுத்தது.
1957 மார்ச் 9 :– அலாஸ்காவின் ஆன்ட்ரியான் தீவின் 8.6 ரிக்டர் அளவில்
நிலநடுக்கம் ஏற்பட்டது. சுனாமி காரணமாக 52 அடி உயரத்துக்கு அலைகள் எழுந்தது.
1960 மே 22 :– சிலியில் 9.5 ரிக்டர் அளவுக்கு பூகம்பம் ஏற்பட்டு அதை
தொடர்ந்து நிகழ்ந்த சுனாமியில் 1716 பேர் பலியானார்கள்.
1964 மார்ச் 28 :– அலாஸ்காவில் உள்ள பிரின்ஸ் வில்லியம் சவுண்டு
பகுதியில் 9.2 ரிக்டர் அளவுக்கு ஏற்பட்ட பூகம்பத்தில் சிக்கி 131 பேர் பலி.
1965 பிப். 4 :– அலாஸ்காவின் ரேட் தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 35
அடி உயரத்துக்கு அலைகள் எழுந்தன.
1976 ஜூலை 28 :– சீனாவின் ஹெபோய் மாகாணத்தில் ஏற்பட்ட
நிலநடுக்கத்தால் 2.42 லட்சம் பேர் பலியானார்கள்.
1988 ஆகஸ்டு 20 :– நேபாளத்தின் கிழக்கு பகுதியில் ஏற்பட்ட நில
நடுக்கத்தில் 721 பேர் இறந்து போனார்கள்.
1991 அக். 20 :– உத்தரபிரதேச மாநிலத்தில் இமயமலை அடிவாரத்தில்
ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 768 பேர் உயிரிழந்தனர்.
1993 மார்ச் 30 :– மராட்டிய மாநிலத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால்
7,660 பேர் உயிர் இழந்தனர்.
2001 ஜனவரி 26 :– குஜராத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 25 ஆயிரம்
பேர் இறந்தனர். 1.6 லட்சம் பேர் காயம் அடைந்தனர்.
2003 டிச. 26 :– ஈரானில் பாம்நகரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 31
ஆயிரத்து 884 பேர் பலியானார்கள்.
2004 டிச. 26 :– இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம்
காரணமாக இந்தியா மற்றும் சுற்றியுள்ள நாடுகளில் 2 லட்சத்து 20 ஆயிரம் பேர்
இறந்துள்ளனர்.
2005 மார்ச் 28 :– இந்தோனேசியாவின் நியாஸ் தீவில் ஏற்பட்ட
நிலநடுக்கத்தால் 900 பேர் இறந்துள்ளனர்.
2005 அக்டோபர் 8 :– பாகிஸ்தானில் வடமேற்கு எல்லைபுறத்தில் ஏற்பட்ட
பூகம்பத்தில் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இறந் தனர்.
2006 மே 27 :– இந்தோனேசியாவின் யோக்கியகர்த்தா மாகாணத்தில் ஏற்பட்ட
பூகம்பத்தால் 6 ஆயிரம் பேர் இறந்தனர். 15 லட்சம் பேர் வீடுகளை இழந்தனர்.
2008 மே 12 :– சீனாவின் சிக்குவான் மாகாணத்தில் ஏற்பட்ட
நிலநடுக்கத்தில் 67 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இறந்தனர்.
2010 ஜனவரி 12 :– ஹதியில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் 2.50 லட்சம் பேர்
இறந்தனர்.
2011 மார்ச் 21 :– ஜப்பானின் வடகிழக்கு பகுதியின் கடலோர பகுதியில்
கடலுக்கு அடியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுனாமி தாக்கி 18 ஆயிரத்து 900 பேர்
பலியாகிவிட்டனர்.
2012 ஆகஸ்டு 11 :– ஈரானின் தாப்ஸ் நகரில் ஏற்பட்ட இரட்டை நில
நடுக்கத்தால் 306 பேர் இறந்தனர்.
1960 மே 22 தெற்கு சிலியில் கடும் நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 9.5 பதிவானது. இதனால் ஏற்பட்ட சுனாமியில் 1,716 பேர் உயிரிழந்தனர்.
1964 மார்ச் 28: அலாஸ்காவில் உள்ள பிரின்ஸ் வில்லியம் சவுண்டில் 9.2 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 131 பேரும், இதை தொடர்ந்து வந்த சுனாமியில் 128 பேரும் இறந்தனர்.
2004 டிசம்பர் 24: இந்தோனேஷியாவில்
9.1 ரிக்டர் அளவுக்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து இந்திய பெருங்கடலில் ஏற்பட்ட சுனாமி இந்தியா உட்பட பல நாடுகளையும் புரட்டிப்போட்டது. இதில் 2,30,000 பேர் இறந்தனர்.
2011, மார்ச் 11: ஜப்பானின் வடகிழக்கு கடல் பகுதியில் 9 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சுனாமியில் 18,000க்கும் மேற்பட்டோர் இறந்தனர்.
1952, நவம்பர் 4: ரஷ்யாவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள கம்சட்கா பகுதியில் 9 ரிக்டர் அளவுக்கு நில நடுக்கம் ஏற்பட்டது. இருப்பினும் உயிர்ச்சேதம் ஏற்பட்டதாக தகவல் இல்லை.
2010, பிப்ரவரி 27: சிலியில் 8.8 ரிக்டர் அளவுக்கு நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட சுனாமியில் சிக்கி 524 பேர் இறந்தனர்.
1906, ஜனவரி 31: ஈக்வடாரில் 8.8 ரிக்டர் அளவுக்கு ஏற்பட்ட நிலநடுக்கமும் அதை தொடர்ந்து உருவான சுனாமியாலும் 500க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
1965, பிப்ரவரி 4: அலாஸ்காவில் உள்ள ராட் தீவில் 8.7 ரிக்டர் அளவுக்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சுனாமியில் 35 உயரத்துக்கு அலைகள் ஆர்பரித்து எழுந்தன.
Add caption |
2005, மார்ச் 28: இந்தோனேஷியாவில் உள்ள வடக்கு சுமத்ராவில் 8.6 ரிக்டர் அளவுக்கு ஏற்பட்ட நில நடுக்கத்தில் 1,300 பேர் இறந்தனர்.
1950, ஆகஸ்ட் 15: திபெத்தில் 8.6 ரிக்டர் அளவுக்கு ஏற்பட்ட நில நடுக்கத்தில் 780 பேர் பலியாகினர்.
2012, ஏப்ரல் 11: வடக்கு சுமத்ராவில் 8.6 ரிக்டர் அளவுக்கு ஏற்பட்ட சுனாமியில் 20க்கும் மேற்பட்ட நாடுகள் பாதிக்கப்பட்டன.
1957, மார்ச் 9: அலாஸ்காவில் உள்ள ஆண்ட்ரியானாப் தீவில் 8.6 ரிக்டர் அளவுக்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து 52 அடி உயர சுனாமி அலை உருவானது.
2007, செப்டம்பர் 12: இந்தோனேஷியா சுமத்ரா அருகே 8.5 ரிக்டருக்கு ஏற்பட் நில நடுக்கத்தில் 25 பேர் இறந்தனர்.
1938, பிப்ரவரி 1: இந்தோனேஷியா பாண்டா கடலில் 8.5 ரிக்டருக்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து சிறிய சுனாமி ஏற்பட்டது.
1923, பிப்ரவரி 3: ரஷ்யாவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள கம்சட்கா பகுதியில் 8.5 ரிக்டருக்கு ஏற்பட்ட நில நடுக்கத்தை தொடர்ந்து சுனாமி உருவானது.
1922, நவம்பர் 11: சிலி அர்ஜெட்டினா எல்லையில் ஏற்பட்ட 8.5 ரிக்டர் நில நடுக்கத்தால் ஏற்பட்ட சுனாமியில் சிலி கடலோர பகுதிகள் பெரும் சேதம் அடைந்தன.
1963 அக்டோபர் 13: ரஷ்யாவின் குரில் தீவில்8.5 ரிக்டர் அளவுக்கு நில நடுக்கம் ஏற்பட்டது.
No comments:
Post a Comment