கூடல் மாநகர்,மீனாட்சியின்
ஆட்சி,சங்கம் வளர்த்த
மதுரை என்ற சிறப்புகளுடன் பெருமை பெற்ற மதுரையை தனது பிடிக்குள்
வைத்திருந்தவர் கருணாநிதியின்
மகன் அழகிரி. திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வைகோ வெளியேறியபோது தமிழகத்தின்
தென்பகுதியில் கட்சியை வளர்ப்பதற்காக சென்னையில் இருந்து மதுரைக்கு நகர்ந்தார்
அழகிரி. கருணாநிதி எதிர்பார்த்ததுபோல் கட்சியை வளர்த்த அழகிரி அவர்
எதிர்பார்க்காதவகையில் தன்னையும் வளர்த்துக்கொண்டார்.
திராவிட முன்னேற்றக்கழகத்தின் மதுரைக்
கிளைபோலவே அவரது செயற்பாடுகள் அமைந்திருந்தன. கழகத்லைமைக்கு கட்டுப்படாத அவரது
செயற்பாடுகளால் இருதலைக்கொள்ளி எறும்பாக கருணாநிதி கலங்கினார். எல்லை மீறிய அழகிரி தனது விசுவாசிகளுடன் இ ணைந்து கழகத்தை எதிர்த்தார். அழகிரியுன்
கொட்டத்தை அடக்குவதற்காக அவரும் அவரது ஆதரவாளர்களும் சிலகாலம் கட்சியில் இருந்து
வெளியேற்றப்பட்டனர். அழகிரி இல்லாமல் மதுரையில் வெற்றிபெறமுடியாது என்பதனால் அவருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டது.
தமிழகத்திலும் மத்தியிலும் இருந்த அரசியல்
செல்வாக்கினால் அழகிரியின் ஆட்சி மதுரையில் கொடிகட்டிப்பறந்தது.தமிழகத்திலும்
மத்தியிலும் திராவிட முன்னேற்றக்கழகத்தின் அரசியல் செல்வாக்கு சரிந்ததனால்
அழகிரியின் ஆட்டம் அடங்கி விட்டது. ஸ்டாலினுக்கும் அழகிரிக்கும் இடையிலான
வாரிசுப்போராட்டத்தின் உச்சக்கட்ட மோதலால் கட்சியில் இருந்து அழகிரி தூக்கி
வீசப்பட்டார்.இந்த நிலையில் பொட்டு சுரேஷின் கொலையின் சூத்திரதாரி என
பொலிஸாரால் தேடப்பட்டு வந்த அட்டாக் பாண்டி இரண்டரை வருடங்களின் பின்னர்
கைது செய்யபட்டுள்ளார்.
பொட்டு சுரேஷ், அட்டாக் பாண்டி ஆகிய இரண்டுபேரும் அழகிரியின்
மிகத்தீவிரமான் விசுவாசிகள்.அழகிரி நினைத்ததை கனகச்சிதமாக
செய்துமுடிக்கும் ஆற்றல் உள்ளவர்கள்.அழகிரியின் அரசியல் வளர்ச்சியில் இவர்களின்
பங்கு முக்கியமானது. அழகிரியின் அரசியல் அத்திபாரம் ஆட்டம் கண்டதும் நகமும்
சதையும் போல இருந்த அட்டாக் பாண்டியும்,பொட்டு சுரேஷும் கீரியும் பாம்பும் போல்
மாறினர்.தமிழக ஆட்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் கையை விட்டுப்போனதும்
அரசியல் ரீதியாக இருவரும் பாதிக்கப் பட்டனர்.
குண்டர் சட்டத்தில் கைதுசெய்யப்பட்ட
பொட்டுசுரேஷ் பிணையில் விடுதலையானதும் அழகிரியைச் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து
தெரிவித்து விட்டு ஸ்டாலினுடன் இணைந்தார்.அழகிரியின் வலது கரம், தென் தமிழகத்தின் துணை முதல்வர் என ஜெயலலிதாவல் அடையாளம்
காட்டப்பட்ட பொட்டுசுரேஷ் அவரை விட்டு வெளியேறியதும் மதுரையின் கழகத்தொண்டர்கள்
கலங்கினர். பொட்டுசுரேஷும் அட்டாக்பாண்டியும் ஒரே அணியில் இருந்தாலும்
அவர்களுக்கிடையில் யார் பெரியவன் என்ற போட்டியும் மறைமுகமாக இருந்தது. அட்டாக்
பாண்டியின் கை ஓங்கியதும் பொட்டுசுரேஷ் தனது பாதையை மாற்றினார்.
பாதை மாறிய பொட்டுசுரேஷ் 2013 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் திகதி மர்மகும்பலால் சரமாரியாக
வெட்டிக்கொல்லப்பட்டார்.அவரது உடலில் முப்பத்தி ஏழு வெட்டுக்காயங்கள் இருந்தன
சம்பவ இடத்திலேயெ அவரது உயிர் பிரிந்தது. பொட்டு சுரேஸ்
கொல்லப்பட்ட ஜனவரி 31ம் தேதிக்கு மறுதினம் அட்டாக் பாண்டியின் ஆதரவாளர்களான
கீரைத்துறையைச் சேர்ந்த சபா என்ற சபாரத்தினம், சந்தானம், ராஜா என்ற ஆசா முருகன், லிங்கம், சேகர், செந்தில், கார்த்திக் ஆகிய 7 பேர் நத்தம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். ஆனால் போலிஸார். இன்னும் சிலரை தேடினார்கள்.
அவர்களின் அட்டாக் பாண்டி முக்கிய குற்றவாளியாக கருதப்பட்டார்.
அட்டாக்பாண்டியின் அக்கா மகன் விஜயபாண்டியும் நண்பர் பிரபுவும்
சேலம்நீதிமன்றத்தில் சரணடைந்தனபொலிஸாரின் கண் அட்டாக்பாண்டிமேல்தான் இருந்தது. தமிழக பொலிஸுக்கு தண்ணிகாட்டிய அட்டாக்பாண்டி
மும்பையில் கைது செய்யப்பட்டார். தமிழக சட்டமன்றத்தேர்தலுக்காக கட்சிகள்
தயாராகும்வேளையில் அட்டாக்பாண்டியின் கைதுக்கும் அரசியல் சாயம் பூசப்பட்டுள்ளது.
அழகிரியின் பக்கத்தில் இருந்த பொட்டுசுரேஸ் ஸ்டாலினின் பக்கம்
சென்றதை அழகிரியின் ஆட்கள் விரும்பவில்லை. அழகிரியின் மகன் துரைதயாநிதியும்
ராமகிருஷ்ணனும் சென்னையில் பொட்டுசுரேஷை சந்தித்த தகவல் ஏற்கெனவே
பொலிஸாருக்குத்தெரியும். இதுபற்றிய வாக்குமூலம் அப்போது பெறப்பட்டபோது மேலித்து அழுத்தம் கார ணமாக விசாரனை கைவிடப்பட்டது. அந்த விசாணையை மீண்டும் தொடங்க
வேண்டும் என கைது செய்யப்பட்ட அட்டாக் பாண்டி தெரிவித்துள்ளார்.
பொட்டுசுரேஷ் கொல்லப்பட்ட அன்று தான் சென்னையில் இல்லை என அட்டாக்
பாண்டி கூறி உள்ளார்.அட்டாக்பாண்டியை கொலைசெய்வதற்கு பொட்டுசுரேஷ்
திட்டமிட்டதால்தான் தாம் அவரை கொன்றதாக சரண்டைந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
பொட்டுசுரேஷ் கொல்லப்பட்டதற்கு தனிப்பட்ட பகையே காரண்ம் .ஆனால் அட்டாக் பாண்டி
கைது செய்யப்பட்ட பின்னணியில் அரசியல் உளளது.
ஜெயலலிதா முதல்வரானதும் கருணாநிதி, ஸ்டாலின், அழகிரி ஆகியோரைக் கைது செய்ய
முயற்சிசெய்தார் போதிய ஆதாரங்கள் இல்லாமையினால் அந்த முயற்சி கிடப்பில்
போடப்பட்டது. ஸ்டாலின் ஒருபடிமேலேபோய் கமிசனர் அலுவலகத்துக்குச் சென்று தன்னைக்
கைது செய்யும்படி வேண்டுகோள் விடுத்தார். தனது அரசியல் எதிரிகளை ஏதாவ்து ஒரு வழக்கில் சிக்கவைக்க வேண்டும் என்பது ஜெயலலைதாவின் விருப்பம்.அந்த விருப்பத்தை
நிறைவு செய்வதற்குரிய சந்தர்ப்பம் இன்னமும் அமையவில்லை.
அட்டாக்பாண்டி கைது செய்யப்பட்டதும் விசாரணை வளை யத்தில் ஸ்டாலின் என்று பரபரப்பன் செய்திகள்
வெளியாகின் .அந்தசெய்திகள் எல்லாவற்றையும் தெரிந்து கொண்ட ஸ்டாலின் மக்களை சந்திக்கும் பயணத்தை
தொடர்கிறார்.மேலிடத்து அழுத்தத்தினால் கைவிடப்பட்ட விசாரணையை பொலிஸார் மீண்டும்
கையில் எடுத்ததனால் அழகிரி கலக்கத்தில் உள்ளார். அட்டாக்பாண்டி கைது செய்யப்பட்ட
பின்னர் பொட்டுசுரேஷின் கொலை பற்றிய மர்ம முடிச்சு அவிழ்வதற்கிடையில் உள்ளே
போகப்போகும் திராவிட முன்னேற்றக் கழகப் புள்ளி யார் என்ற கேள்விக்கான் விடை
கிடைத்துவிடும்.
வர்மா
தினத்தந்தி
11/10/15
No comments:
Post a Comment