ஜெயலலிதாவை வீட்டுக்கு அனுப்புவதற்கு
திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி வைப்பதுதான் ஒரே வழி என வைகோகூறியதால்
திரவிட முன்னேற்றக் கழகம் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
ஆகியவற்ரின் தொண்டர்கள் குதூகலப்பட்டனர் .
வைகோவின் அறிவிப்பு அந்த குதூகலத்தை
சீர்குலைத்துவிட்டது. திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி என கடந்த ஜூன் மாதம்
அறிவித்த வைகோ இரண்டு மாதங்களில் தனது நிலைப்பாட்டை மாற்றிவிட்டார்.இதனால் அவருடைய
கட்சியின் முக்கியஸ்தர்கள் வெளியேறுகின்றனர்.அவர்களுடைய வெளியேற்றத்தைத் தடுக்க
முடியாத வைகோ பதவி ஆசையால்
வெறியேறுகின்றனர் என்கிறார்.
வைகோவின் தனிப்பட்ட செல்வாக்கினால்
கட்சியைத் தூக்கிநிறுத்த முடியாது. பலமான கூட்டணியுடன் இணைந்தால்தான் வெற்றி
பெறலாம் என்று தெரிந்தும் கடைசி நேர கழுத்தறுப்புகளினால் கட்சியைக் கரை சேர்க்க
முடியாது தவிக்கிறார் வைகோ.
மாநில மகளிரணி செயலாளர் குமரி விஜயகுமாரும் சென்னை அண்ணா
அறிவாலயத்தில் கருணாநிதி முன்னிலையில் ஆகியோர் திராவ்பிட முன்னேற்றக் கழகத்தில் . இணைந்தார். இந்த அதிர்ச்சி விலகுவதற்குள் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின்
பொருளாளர் மாசிலாமணி, மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் டாக்டர்
சரவணன் ஆகியோர் கட்சியில் இருந்து வெளியேறினர்..
விடுதலைச் சிறுத்தைகள், கொம்யூனிஸ்ட் கட்சி, மாக்சிஸ்ட் கட்சி ஆகியவற்றுடன்
மக்கள் நலன் காக்கும் கூட்டியக்கத்துடன் சேர்வதற்கு வைகோ முடிவு செய்துள்ளார்.
வைகோவின் இந்த முடிவால் கட்சிக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதாவையும்
கருணாநிதியையும் அரசியலில் இருந்து வெளியேற்றப் போவதாக மக்கள் நலன் காக்கும்
கூட்டியக்கம் சபதம் எடுத்துள்ளது.முதலமை ச்சர் யார் என்று அறிவிக்காது இந்த
இயக்கம் தமிழக சட்ட சபைத்தேர்தலை சந்திக்க தயாராகிறது. வைகோவின் கட்சியில் பூகம்பம் வெடித்துள்ளது. இந்தக்கூட்டணியால்
வாக்குகளைப் பிரிக்க முடியுமே தவிர வெற்றிபெற முடியாது என்பதைத்தெளிவாகத் தெரிந்து
கொண்ட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தினர் கட்சியை விட்டு வெளியேறி
வருகின்றனர். தேர்தல் நெருங்கும் சமயத்தில் மற்றைய கட்சிகளும் இந்தப் பிரச்சினையை
சந்திக்கும் நிலை ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
இந்தக்கூட்டமைப்புக்குள் விஜயகாந்தை கொண்டுவர
முயற்சி நடைபெறுகிறது அவர் பிடி கொடாமல் நழுவுகிறார்.முதலமைச்சர் கனவில்
இருக்கும் விஜகாந்த், பாரதீய ஜனதாவுடன் கூட்டணி
சேர விரும்புகிறார். விஜயகாந் அரசியலில் காலடி வைத்து வாக்குகளைப்பிரிப்பதில் வெற்றி கண்டார். ஜெயலலிதாவுடன் கூட்டணி சேர்ந்தபின்னர் முதன்
முதலாக வெற்றிக்கனியைச் சுவைத்தார்.
பெயரளவில்தான் விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிறார். இந்த
நிலையில் முதலமைச்சராகத் துடிக்கிறார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் தனது மகன்
அன்புமணியை முதலமைச்சர் வேட்பாளராக
அறிவித்து தேர்தல் பரப்புரையை ஆரம்பித்து விட்டார் டாக்டர் ராமதாஸ்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை
ஆட்சியில் இருந்து அகற்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் கையை பலப்படுத்த வேண்டும் என்பது
தமிழகத்தின் சிறு பிள்ளைக்கும் தெரிந்த உண்மை. இந்த உண்மையை உணராத ராமதாஸ்
தமிழகத்தின் பலம் வாய்ந்த இரண்டு கழக ங்களையும் தனித்துநின்று எதிர்க்கப்போவதாக திடசங்கற்பம் பூண்டுள்ளார்.
கருணாநிதியா ஸ்ராலினா முதலமைச்சர் என்ற சர்ச்சை திராவிட முன்னேற்றக் கழகத்தினுள்
நிலவுகிறது. ஸ்ராலினிடம் கழகத்தை ஒப்படைக்கும் தருணம் வந்துள்ளதாக கட்சியில் உள்ள
சிலர் நம்புகிறார்கள்.தலைவர் கருணாநிதிதான் முதலமைச்சர் என ஸ்டாலின் கூறினாலும்
அவருடைய விசுவாசிகள் ஏற்றுக்கொள்ளத்தயாராக இல்லை. என்றாலும் அடுத்த ஆட்சி நம்முடையதுதான் எனறு
அவர்கள் நினைக்கிறார்கள். 1996,2006 ஆம் ஆண்டுகளில் ந்டைபெற்ற சட்டசபைத்தேர்தல்களில்
அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் தோல்வியடைந்தது. ஆகவே 2016 ஆம் ஆன்டு நடைபெறும்
தேர்தலிலும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தோல்வியடையும் என்ற குருட்டு
நம்பிக்கை கழகத் தொண்டர்களிடம் உள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகமும் காங்கிரஸ் கட்சியும்
தனித்து விடப்பட்டுள்ளன. காங்கிரஸில் இருந்து ஜி.கே.வாசன் விலகியதால்
அக்கட்சி சற்று பலவீனமாகி உள்ளது. திராவிட முன்னேற்றக்கழகமும் காங்கிரஸும்
இணைந்தால் வெற்றி பெறும் வாய்ப்பு உருவாகும். கூட்டணி அமைத்தால் ஆட்சியில் பங்கு
வேன்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர்கள் எதிர் பார்க்கின்றனர்.கடைசி
நேர அஸ்திரமாக ஆட்சியில் பங்கு கொடுக்க திராவிட முன்னேற்றக்கழகம் இறங்கி வரலாம்
என தமிழக காங்கிரஸ் தலைவர்கள்
எதிர் பார்க்கின்றனர்.
திராவிட முன்னேற்றக்கழகத்துடன் கூட்டணிசேர
சோனியா விரும்பினாலும் ராகுல் விரும்ப மாட்டார். ஆகையினால் கூட்டணிக்கான சந்தர்ப்பம்
மிக மிகக்குறைவு. 2ஜி முறைகேடு விவகாரம்
இரண்டு கட்சிகளுக்கும் பேரிடியாக உள்ளது. அந்த வழக்கை விரைவாக முடிப்பதற்கு
பாரதீய ஜனதாக் கட்சி விரும்புகிறது. கனிமொழி,ராசா,,
சிதம்பரம், மன்மோகன் சிங் ஆகியோரின் பெயர்
இந்த வழக்கு விவகாரத்தில் அடிபடுவதால் பாரதீய ஜனதாக் கட்சி அதிக ஆர்வம்
காட்டுகிறது. பலமான கூட்டணி இல்லை என்றால் திராவிட முன்னேற்றக் கழ்கத்தின்
கனவு பலிக்காது. ஜெயலலிதாவுக்கு எதிரான
நடுநிலையான வாக்காளர்கள் கைவிடமாட்டார்கள் என்ற நம்பிக்கை திராவிட முன்னேற்றக்
கழகத்திடம் உள்ளது.
இந்திய நாடாளுமன்றத் தேர்தலின் போது பலமான்
கூட்டணி இல்லாது சரத்குமார் போன்றவைகளைப் பக்கத்துணையாக வைத்துக்கொண்டு பெருவெற்றி
பெற்ற துணிவுடன் தமிழக சட்டசபை தேர்தலை எதிர் நோக்கத்தயாராகிரார் ஜெயலலிதா.
வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்குவித்த வழக்கில் இருந்து மீண்டுவிட்டால் வெற்றி
நிச்சயம் என நம்புகிறார். பிரதமர் மோடியும் மத்திய அமைச்சர்களும் ஜெயலலிதாவைக்
கைவிடமாட்டார்கள் எனறு எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்கின்றன.
தமிழக எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒவ்வொரு மூலையில்
ஒதுங்கி இருப்பதனால் வெயலலிதாவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக் உள்ளது.
வர்மா
தமிழ்த்தந்தி
10/10/15
No comments:
Post a Comment