இந்திய
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக தமிழகத்தில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின்
தலைமையில் மெகா கூட்டணி அமைத்ததாகப் பெருமைப்பட்ட தலைவர்கள் இப்போது சிறுமைப்பட்டு
நிற்கிறார்கள். ஜெயலலிதாவின் பிரதான எதிரியான ராமதாஸுக்கு ஏழு நாடாளுமன்றத் தொகுதிகளையும்
ஒரு ராஜ்யசபா தொகுதியையும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கொடுத்தது. தேர்தல் நாள்
அறிவிக்கப்படுவதற்கு முன்னதாகவே பாட்டாளி மக்கள்
கட்சிக்கு ஒரு எம்பி பதவி உறுதியானது. பாரதீய ஜனதாக் கட்சிக்கு ஐந்து தொகுதிகள் கொடுக்கப்பட்டன.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திடமிருந்து
கூடுதல் தொகுதிகளை எதிர்பார்த்த விஜயகாந்துக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மத்திய
அமைச்சர் புயூஸ் கோயல், தமிழக துணை முதல்வர்,
அமைச்சர்கள் உட்பட பலர் வியஜகாந்தின் வீட்டிற்குச்
சென்றும் அங்கிருந்த யாரும் பிடிகொடுக்கவில்லை. திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டணிக்கதவைச்
சாத்தியதால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திடன் சரணடைய வேண்டிய நிலைக்கு விஜயகாந்தின்
கட்சியான தேசிய முற்போக்கு திராவிடக் கழகம்
தள்ளப்பட்டது. ராமதாஸுக்குக் கொடுக்கபப்ட்ட ஏழு தொகுதிகளைப் பெற ஒற்றைகாலில் நின்ற
தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் நான்கு தொகுதிகளுடன்
அடங்கியது.
பரம
எதிரிகளான ராமதாஸும் வியஜகாந்தும் ஒற்றுமையாக தேர்தல் பணிகளைச் செய்ய வேண்டிய சூழல்
ஏற்பட்டதால், வியஜகாந்தின் வீட்டுக்குச் சென்ற ராமதாஸ் பழைய பகையை மறந்ததாக சிரித்துக்கொண்டு
சொன்னார். அந்தக் காட்சியப் பார்த்தவர்களும்
சிரித்தார்கள். அரசியல் பதவி மோகத்தால் ராமதாஸ் மிகவும் கீழா இறங்கிச் சென்றுவிட்டார்.
புதிய
தமிழகம்,புதிய நீதிக்கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், என் ஆர். காங்கிரஸ் ஆகியவற்ருக்கு
தலா ஒருதொகுதியைக் ஒடுத்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மிகுதியான 20 தொகுதிகளில்
போட்டியிடுகிறது. தொகுதிப் பங்கீடு குறித்து அறிவிக்கும் கூட்டத்தில் பாட்டாளி மக்கள்
கட்சியும் தேசிய முற்போக்கு திராவிடக் கட்சியும் கலந்துகொள்ளவில்லை. தாம் எதிர்பார்த்த எதிர்பார்த்த தொகுதிகள் கிடைக்காமையால் அக்கட்சிகள்
அந்தக் கூட்டத்தைப் பகிஷ்கரித்ததாகத் தெரியவருகிறது. தமக்கு வெற்ரி வாய்ப்பு உள்ள தொகுதிகளை
ஒதுக்காமையால் கூட்டணிக்கு எச்சரிக்கை மணி அடிக்கப்பட்டுள்ளது.
ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட தலைவர்கள், கையைக்
குலுக்கி போஸ் கொடுத்தார்கள். ஆனால் அவை எல்லாம் நடிப்பு என்பது இப்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது
கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் பகிஷ்கரிப்புச் செய்த கட்சிகளின் தலைவர்கள் ஒன்றாக
மேடையேறிப் பிரசாரம் செய்வார்களா என்ற கேள்வி மேலெழுந்துள்ளது. தேர்தல் பிரசாரத்துக்கு முன்னரே தலிவர்கள் ஆளுக்கொருபக்கம் திரும்பி இருப்பதை
தொண்டர்கள் எப்படி நோக்குவார்கள். பாட்டாளி மக்கள் கட்சியின் மீது பிரேமலதாவும் சுதீஷும்
கடுப்பில் இருக்கிறார்கள். அவர்களின் வெற்றிக்காக பாட்டாளி மக்கள் கட்சித் தொண்டர்கள்
முழு மனதுடன் பணி செய்ய மாட்டார்கள். திராவிட
முன்னேற்றக் கழகக் கூட்டணியின் வேலையை அவர்கள் குறைத்துவிட்டார்கள்.
ஊழல்மிகுந்த
மாநிலம் தமிழகம் என மோடியின் நிழலான அமித் ஷா சான்றிதழ் வழங்கினார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஊழலைப் பட்டியலிட்டு
தமிழக ஆளுநரிடம் கையளித்தது பாட்டாளி மக்கள் கட்சி, சட்டசபையில் துணிச்சலுடன் ஜெயலலிதாவை
எதிர்ட்துக் கேள்வி கேட்டவர் கப்டன் என பிரேமலதா ஞாபகப் படுத்தியுள்ளார். விஜயகாந்துக்கும்
ராமதாஸுக்கும் இடையிலான பகை என்றைக்கும் மாறாதது. இவை எல்லாவற்றையும் மறைத்துவிட்டு
தலைவர்கள் மகிழ்ச்சியுடன் இருப்பது போல நடிக்கிறார்கள். அந்தக் கட்சிகளின் எதிர்காலம்
தொண்டர்களின் கையில் இருக்கிறது.
சூரன்.ஏ.ரவிவர்மா.
No comments:
Post a Comment