Wednesday, March 27, 2019

அஸ்வினின் சதியால் வென்றது பஞ்சாப்


கிங்லெவன் பஞ்சாப், ராஜஸ்தான்  ரோயல்ஸ் ஆகியவற்றுக்கிடையே ஜெய்பூரில் நடைபெற்ற நான்காவது ஐபிஎல் போட்டியில் ஜோஸ் பட்லரை அஸ்வின் சதிசெய்து ரன் அவுட் ஆக்கியதால்  ராஜஸ்தான் தோல்வியடைந்தது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணித்தலைவர் பஞ்சாப்பை துடுப்பெடுத்தாடும்படி பணித்தார். முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் 20 ஓவர்களில் நான்கு விக்கெற்களை இழந்து 184 ஓட்டங்கள் எடுத்தது. 185 எனும் ஓட்ட எண்ணிக்கையை எதிர்கொண்டு களம் இறங்கிய ராஜஸ்தான் 20ஓவர்களில் ஒன்பது விக்கெற்களை இழந்து 170 ஓட்டங்கள் எடுத்து தோல்வியடைந்தது.
ராகுல் நான்கு ஓட்டங்களில் வெளியேறினார். அடுத்டு வந்த மாயங் அகர்வால் 22 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். மூன்றாவது விக்கெற்ரில் இணைந்த கைல்ஸ்,சப்ரஸ்கான் ஜோடி ஏழு ஓவர்களில் 84 ஓட்டங்கள் எடித்து ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தியது. புயலாக விளையாடிய கைல்ஸ், பென் ஸ்ரோக்கின் பந்தை ராகுல் திரிபாதியிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார். 47 பந்துகளைச் சந்தித்த கைல்ஸ் எட்டு பவுண்டரி, நான்கு சிக்சர் அடங்கலாக 79 ஓட்டங்கள் அடித்தார்.
கைல்ஸின் பணியை சப்ரஸ்கான் செய்தார்.  ஆட்டநேர முடிவில் 29 பந்துகளுக்கு முகம் கொடுத்த சப்ரஸ்கான் ஆறு பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன்  46 ஆட்டங்கள் எடுத்தார்.

185 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கலம் இறங்கிய ராஜஸ்தானுக்கு ரஹானே, ஜோஸ் படலர் ஜோடி நல்லதொரு அடித்தளத்தை இட்டது. 8.1 ஓஒவரில் 22 ஓட்டங்கள் எடுத்த ராஹானேயை அஸ்வின் வெளியேற்றினார். பட்லருடன் சஞ்சு சாம்சன் இணைந்தார். ஜோஸ் பட்லரின் அதிரடியால் பஞ்சாப் தோல்வி யடைந்து விடும் நிலை ஏற்பட்டது. 12.5 ஆவது ஓவரில் ஒரு விக்கெற்றை இழந்து 108 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது அந்த மோசமான செயலை அஸ்வின் அரங்கேற்றினார். பட்லரைஆடமிழக்கச்செய்ய முடியாத விரக்தியில் மன்கட் முறையில் பட்லரை அஸ்வின் வெளியேற்றினார்.

மன்கட் முறயில் ஆட்டமிழக்கச் செய்ய முன்னர், எதிரணி வீரருக்கு எச்சரிக்கைவிட வேண்டும். எச்சரிக்கை எதுவும் விடாமல் பட்லரை அஸ்வின் அவுட்டாக்கியது விளையாட்டின் மகத்துவத்தை இல்லாமல் செய்து விட்டது. 43 பந்துகளில் பத்து பவுண்டரி இரண்டு சிக்ஸருடன் 69 ஓட்டங்கள் எடுத்த ஜோஸ் பட்லர் விரக்தியுடன் வெளியேறினார்.

அநியாயமான முறையில் பட்லர் ஆட்டமிழந்ததும் ராஜஸ்தானின் தோல்வி உறுதியாகியது. 19.2 ஓவர்களில் ஒன்பது விக்கெற்களை இழந்த ராஜஸ்தான் 170 ஓட்டங்கள் எடுத்து தோல்வியடைந்தது. ஆட்ட நாயகன் விருது கைல்ஸுக்கு வழங்கப்பட்டது.  

No comments: