டோனியா,கோலியா
- ரெய்னாவா,கோலியா சென்னையா,பெங்களூரா போன்ற எதிர்பார்ப்புகளுடன் நடைபெற்ற போட்டியில்
டோனியும் ரெய்னாவும் வெறி பெற்றனர். சென்னை சுப்பர் கிங்ஸ், ரோயல் சலஞ்ச் பெங்களூர் ஆகியவற்றுக்கிடையே
சென்னையில் நடைபெற்ற முதலாவது ஐபிஎல் போட்டியில் ஏழு விக்கெற்றால் சென்னை வெற்றி பெற்றது.
நாணயச்சுழற்சியில்
வெற்றி பெற்ற டோனி, களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தார். முதலில் துடுப்பெடுத்டாடிய பெங்களூர்
17.1ஓவரில் சகல விக்கெற்களையும் இழந்து 70 ஓட்டங்களை மட்டும் எடுத்தது.
பெரிதும்
எதிர்பார்கப்பட்ட கோலி, ஆறு ஓட்டங்கள்
எடுத்தபோது ஹர்பஜனின் பந்தை ஜடேஜாவிடம் பிடிகொடுத்து
ஆட்டமிழந்தார். இந்திய அணியில் இல்லாத
ஹர்பஜன்னின் பந்தை அடித்த இந்திய
அணித்தலைவர் அணிக்குள் வருவதும் போவதுமாக உள்ள ஜடேஜாவிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.
மொயின் அலி, டிவிலியஸ் ஆகிய இருவரும் தலா ஒன்பது ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து
களம் இறங்கிய ஹெட்மெயர் ஓட்டம் எதுவும் எடுக்கது ஹர்பஜனின் பந்தை தட்டி விட்டு ஓட முற்படுகையில்
மின்னலைப் போல் பாய்ந்து தடுத்த ரெய்னா பந்தை டோனியிடம் கொடுத்டு ரன் அவுட் ஆக்கினார்.
சென்னைக்கு சவால் விடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட
பெங்களூர் எட்டு ஓவர்களில் முக்கியமான நாகு விட்கெற்களை இழந்து 39 ஓட்டங்கள் எடுத்தது.
செனையின் மூன்ரு சுழல் பந்து வீரர்களும் எட்டு விக்கெற்களை வீழ்த்துனர்.
ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான பர்த்தீப் பட்டேல், பிராவோ வீசிய முதல் பந்தை கேதார்
ஜாதவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். பட்டேல்
அதிக பட்சமாக 29 ஓட்டங்கள் எடுத்தார். ஏனைய
அனைவரும் ஒற்றை இலக்கத்துடன் ஆட்டமிழந்தனர்.
பட்டேல் கோலி ஜோடி அதிக பட்சமாக 16 ஓட்டங்கள்
எடுத்தது.
நான்கு ஓவர்கள் பந்துவீசிய ஹர்பஜன் 20 ஆடங்களைக்கொடுத்து மூன்று விக்கெற்களை வீழ்த்தினார்.
நான்கு ஓவர்க வீசிய இம்ரான் தாஹிர் ஒன்பது ஓட்டங்களைக் கொடுத்து மூன்று விக்கெற்களை
வீழ்த்தினார். ஜடேஜா இரண்டு விக்கெற்களைக் கைப்பற்றினார்.
71 ஓட்டங்கள் எனும் இலகுவான இலக்குடன் களம்
இறங்கிய சென்னை 17.4 ஓவர்களில் மூன்று விக்கெற்களை
இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. மூன்றாவது
ஓவரில் ஓட்டம் எதுவும் எடுக்காத வட்சன் ஆட்டமிழந்தார். இரண்டாஅது விக்கெற்றில் ஜோடி
சேர்ந்த ரெய்னா, ராயுடு ஜோடி 32 ஓட்டங்கள்
எடுத்தது.21 பந்துகளில் 19 ஓட்டங்கள் எடுத்த ரெய்னா ஆட்டமிழந்தார்.15 ஓட்டங்கள் அடித்தபோது
ஐபிஎல் 117 போட்டியில் ஒரு செஞ்சரி 35 அரை
செஞ்சரி அடங்கலாக 5000 ஓட்டங்கள் அடித்த வீரர்
என்ற முத்திரையை ரெய்னா பதித்தார். 164 போட்டிகளில்
4954 ஓட்டங்கள் அடித்த கோலி இரண்டாவதி இடத்திலும் 173 போட்டிகளில் 4493 ஓட்டங்கள் அடித்த
ரோகித் சர்மா மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
ராயுடு
28 ஓட்டங்கள் அடித்தார். கேதார் ஜாதவ்
ஆட்டமிழக்காது 13 ஓட்டங்களையும் ஜடேஜா ஆட்டமிழக்காது ஆறு ஓட்டங்களையும் எடுத்தனர்.
ஆட்ட நாயகனாக ஹர்பஜன் சிங் தேர்வு செய்யப்பட்டார்.
No comments:
Post a Comment