ஐபிஎல்
தொடரில் கடந்த சீசனில் டெல்லி டேர் டெவில் எனும் பெயருடன் விளையாடிய டெல்லி அணி இந்த
ஆண்டு டெல்லி கெப்பிட்டல் எனும் புதிய பெயருடன்
கலம் இறங்கி முதல் வெற்றியைப் பதிவு செய்தது. மும்பை இந்தியன், டெல்லி கெப்பிட்டல்
ஆகியவற்றுக்கிடையே மும்பை வாங்கடே மைதானத்தில் நடந்த மூன்றாவது போட்டியில் டெல்லி
37 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை அணித் தலைவர்
ரோகித் சர்மா பந்துவீச்சைத் தேர்வு செய்தார். முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி 20
ஓவர்களில் ஆறு விக்கெற்களை இழந்து 213 ஓட்டங்கள் எடுத்தது. 214 எனும் வெற்றி இலக்குடன்
களமிறங்கிய மும்பை 19.2 ஓவர்களில் சகல விக்கெற்களையும் இழந்து 176 ஓட்டங்கள் எடுத்தது.
இந்த சீசனில் முதல் 200 ஓட்டங்களை டெல்லி பதிவு செய்தது.
டெல்லி,
மும்பை ஆகிய இரண்டு அணிகளும் க்டந்த 11 வருடங்களில் நடந்த முதல் போட்டியில் நான்கு
முறை வெற்றி பெற்றது. ரிக்கி பொண்டிங்கின் பயிற்சியும் கங்குலியின் ஆலோசனையும் முதல்
போட்டியில் டெல்லிக்கு ஐந்தாவது வெற்றியைப் பெற்றுக் கொடுத்தது. டெல்லி அணியில் இங்ரம்,கோமோ
பெளல் ஆகியோருடன் நீண்ட இடைவெளியின் பின்னர் இஷாந்த் சர்மா இணைக்கப்பட்டார். மும்பை
அணியில் காஷ்மீர் வீரர் ரஷீக் கலாம் எனும்
இளம் வீரர் அறிமுகமானார். மும்பை முன்னர் அறிமுகப்படுத்திய பும்ரா, ஹர்த்கிக்
பாண்டையா, க்ருணாஸ் பண்டையா ஆகியோர் இந்திய அணியில் முக்கிய வீரர்களாக இருக்கின்றனர்.
ப்ரித்விஷாவும், தவானும் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கலாகக்
களமிறங்கினர். அறிமுக வீரரான ரஷீக் கலாம் முதல் ஓவரை வீசினார். முதல் பந்து நோபோலானது.
ஆனாலும் முதலாவது ஓவரில் ஆறு ஓட்டங்கள் மட்டும் அடிக்கப்பட்டது. ஸ்ரேயஸ் ஐயர் 16 ஒட்டங்களுடன்
வெளியேற இங்ரம் களம் புகுந்தார். மூன்றாவது இணைப்பாட்டத்தில் தவான், இங்ரம் ஜோடி
83 ஓட்டங்கள் அடித்தது. 32 பந்துகளுக்கு முகம் கொடுத்த இங்ரம் 47 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
தவானுடன் ரிஷாப் பண்ட் இணைந்தார். 12.3 ஓவர்களில்
மூன்று விக்கெற்களை இழந்து 112 ஓட்டங்கள் எடுத்ததுடெல்லி. தவான் பண்ட ஜோடி ஓட்ட எண்ணிக்கையைஉயர்த்தும்
என எதிர் பார்க்கப்பட்டபோது 43 ஓட்டங்கலில் தவான் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கீமோபோலும் அக்சர் படேலும் ஒற்றை இலக்கத்துடன்
வெளியேறினர்.
விக்கெற்க
ஒரு பக்கத்தில் வீழ்ந்துகொண்டிருக்க ரிஷாப் பண்ட்
ருத்ரதாண்டவமாடினார். தன்னை எதிர்நோக்கி வந்த பந்துகள் அனைத்தையும் விரட்டினார்.18
பந்துகளில் அரசி சதம் அடித்தார் பண்ட். டெல்லி அணி கடசி ஆறு ஓவர்களில் 99 ஓட்டங்கள் அடித்தது.27 பந்துகளைச்
சந்தித்த ரிஷாப் பண்ட் ஆட்டமிழக்காது ஏழு பவுண்டர், ஏழு சிக்ஸர்களுடன் 78 ஓட்டங்கள்
அடித்தார். 20 ஓவர்களில் ஆறு விக்கெற்களை இழந்த டெல்லி 213 ஓட்டங்கள் எடுத்தது.
214 என்ற
இமாலய இலக்குடன் களம் இறங்கிய மும்பை 19.2
ஓவர்களில் சகல விக்கெற்களையும் இழந்து 176 ஓட்டங்கள் எடுத்து 37 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
ரோகித்சர்மா, குயின் டிகாக் ஆகியோர் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக களம் புகுந்தனர்.
ரோகித் 27,சூரியகுமார்2, டிகாக்27 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். முன்னொரு காலத்தில் அதிரடிகாட்டிய
பொலாட்டும் மும்பைக்கு புது முகமான யுவராஜ் சிங்கும் ஜோடி சேர்ந்தனர். ஆரம்பத்திலிருந்தே
பொலாட் அதிரடிகாட்டினார். பொறுமையாக விளையாடிய யுவராஜ் சிங்கும் அதிரடியில் இறங்கினார்.
மூன்று ஓவர்களில் 40 ஓட்டங்கள் எடுத்து டில்லியை பதறவிட்டனர்.
கீமோ
பெளல் இந்த ஜோடியைப் பிரித்தார். கீமோவின் பந்து வீச்சில் ஆட்டமிழந்த பொலாட், 13 பந்துகளில்
21 ஓட்டங்கள் எடுத்தார். ஐந்தாவது விக்கெற்றில் இவர்கள் இருவரும் 50 ஓட்டங்கள் எடுத்தனர்.
15 பந்துகளை எதிர்கொணட குருனால் பண்டையா 35
ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். 35 பந்துகளைச் சந்தித்த யுவராஜ் சிங், ஐந்து பவுண்டர்,மூன்று
சிக்ஸர் அடங்கலாக 53 ஓட்டங்கள் எடுத்தார். நான்கு வருடங்களுக்குப் பின்னர் 31 போட்டிகளில்
அசை சதம் கடந்தார் யுவராஜ் சிங். அதன் பின்னர் வந்த வீரர்கள் மளமளவென ஆட்டமிழக்க
19.2 ஓவரில் மும்பையின் தோல்வி உறுதியாகியது.
டெல்லியிடம்
தொடர்ந்து மூன்றாவது முறையாக மும்பை தோல்வியடைந்தது. இஷாந் சர்மா, ரபாடா ஆகியோர் தலா
இரண்டு விக்கெற்களை வீழ்த்தினர். ஆட்டநாயகன் விருது ரிஷாப் பண்டுக்கு வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment