Friday, March 29, 2019

பரபரப்பான ஆட்டத்தில் நோபோல் சர்ச்சையுடன் மும்பை வென்றது


மும்பை இந்தியன், ரோயல் சலஞ்ச் பெங்களூர் ஆகியவற்றிக்கிடையே பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற பரபரபான போட்டியில் ஆறு ஓட்டங்களில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது. இந்திய அணித்தலைவர் கோஹ்லி, துணைத்தலைவர் ஆகிய இருவரும்  முதல் வெற்றிக்காக பலப்பரீட்சை நடத்தினர். சென்னையிடம் தோல்வியடைந்த பெங்களூரும், டெல்லியிடம் தோல்வியடைந்த மும்பையும் ஐபிஎல்லின் ஏழாவது போட்டியில் சந்தித்தன.

நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற பெங்களூர் அணித் தலைவர் கோஹ்லி பந்துவீசைத் தேர்ந்தெடுத்தார். முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை எடு விக்கெற்களை இழந்து 187 ஆட்டங்கள் எடுத்தது. பதிலுக்குத் துடுப்படுத்தாடிய பெங்களூர் 20 ஓவர்களிலில் ஐந்து விக்கெற்களை இழந்து ஆறு ஓட்டங்களால் தோல்வியடைந்தது. எதிரணி நிர்ணயிக்கும் கடினமான இலக்கை விரட்டி அடிக்கும் டிவில்லியஸ் களத்தில் இருந்தும் பெங்களூர்  தோல்வியடைந்து அதிர்ச்சியளித்தது. 15    போட்டிகளை விரட்டி பெங்களூருக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்த டிவில்லியஸ் ஆட்டமிழக்காமல் நின்றபோது  முதன் முதலாக பெங்களூர் தோல்வியடைந்தது.

பென் கட்டிங், ரஷீத் கலாம் ஆகியோர் மும்பை அணியில் இருந்து நீக்கப்பட்டனர். கடந்த ஆண்டு ஆலோசகராக கடமியாற்றிய லசித் மலிங்க, பாயங் மார்க்கண்டே ஆகியோர்   சேர்க்கப்பட்டனர். காயம் காரணமாக ஐபிஎல் போட்டியில் இருந்து விலகிய அடம் மைல்னேக்குப் பதிலாக மேற்கு இந்திய வீரர் அசாரி ஜோசப் இணைந்துள்ளார்.

 மும்பை அணி வீரர்கள் டிகொக்,ரோஹித் சர்மா ஜோடி ஆட்டத்தை ஆரம்பித்தது. இருவரும் இணைந்து 54 ஓட்டங்கள் எடுத்தபோது டிகொக் ஆட்டமிழந்தார். ரோஹித்துடன் சூரியகுமார் யாதவ் இணைந்தார். கடந்த போட்டியில் ஏமாற்றிய சூரியகுமார் யாதவ்,  நிதானமாக விளையாடினார்.48 ஓட்டங்களுடன் ரோஹித் சர்மா ஆட்டமிழந்தார்.

சூரியகுமார் யாதவுடன் இணைந்த யுவராஜ் சிங், சாகலை அச்சுறுத்தினார்.  முதல் இரண்டு ஓவர்களில் 12 ஓட்டங்களை சாகல் கொடுத்தார். எட்டு பந்துகளில்  ஐந்து ஓட்டங்களை யுவராஜ் எடுத்திருந்தபோது 12 ஆவது ஒவரை சாகல் வீசினார்.  அதனை எதிர்கொண்ட யுவராஜ் சிங் முதல் பந்தில்  சிக்ஸர் அடித்தார்.  இரண்டாவது பந்தும் சிக்ஸரானது. ரசிகர்களின் ஆரவாரத்தால் மைதானம் அதிர்ந்தது. மூன்றாவது பந்தும் சிக்ஸருக்குப் பறந்தது. பெங்களூர் ரசிகர்கள் ஆரவாரம் செய்ய மும்பை ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். நான்காவது பந்தும் சிக்ஸரை நோக்கி உயர்ந்தது. முகமட் சிராஜ் அதனைப் பிடிக்க மும்பை ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். பெங்களூர் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். 12 பந்துகளில் 23 ஓட்டங்கள் எடுத்த யுவராஜ் சிங் ஆட்டமிழந்தார்.

பொலட் ஐந்து  ஓட்டங்களிலும் குருணால் பண்டையாஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழந்தனர். அடுத்து களம் இறங்கியவர்கள் ஒற்றை எண்ணில் ஆட்டமிழக்க ஹட்ரிக் பண்டையா ஆட்டமிழக்காமல்14 பந்துகளில் 32 ஓட்டங்கள் எடுத்தார். 20 ஓவர்களில் மும்பைஎட்டு விக்கெற்களை இழந்து 187 ஓட்டங்கள் எடுத்தது.  38 ஓட்டங்களுக்கு நான்கு விக்கெற்களை  வீத்தினார்.
பெங்களூர் வெற்றி பெறுவதற்கு 188 ஓட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது பார்த்திவ் பட்டேல், மொயின் அலி ஜோடி களம் இறங்கியது. மொயின் அலி 13 ஓட்டங்களில் வெளியேறினார். பட்டேல்,கோஹ்லி ஜோடி 40 ஓட்டங்கள் எடுத்தது. கோஹ்லியுடன்  டிவில்லியஸ் இணைந்தார்.46 ஓட்டங்கள் எடுத்த ஹோஹ்லி,  பண்டையாவிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து ஹெட்மெயர் ஐந்து ஓட்டங்களுடனும். கிராண்டஹோமன் இரண்டு ஓட்டங்களுடனும் பும்ராவின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தனர்.

42 பந்துகளில் 75 ஓட்டங்கள் என்ற நிலையில் விக்கெற்கள் வீழ்ந்தாலும்கவலைப்படாமல் டிவில்லியஸ் வெற்றியை நோக்கி துடுப்பெடுத்தாடினார்.  11 பந்துகளில் ஏழு ஓட்டங்கள் மட்டுமே எடுத்த டிவில்லியஸ்  அதிரடி காட்டத்தொடங்கினார். 29 ஆவது அரைச்சதத்தை அடித்தார் டிவில்லியஸ்.  கடைசி ஓவரில் வெற்றி பெறுவதற்கு 17 அடிக்கவேண்டும். மலிங்க பந்து வீசினார். முதல் பந்தில் துபே ஆறு ஓட்டங்கள்  அடித்தார். அடுத்த ஐந்து பந்துகளிலும் ஐந்து ஓட்டங்கள் மட்டுமே அடிக்கப்பட்டது. 41 பந்துகளுக்கு முகம் கொடுத்த டிவில்லியஸ் நான்கு பவுண்டரி ஆறு சிக்ஸர் அடங்கலாக ஆட்டமிழக்காமல் 70ஓட்டங்கள் எடுத்தார்.
 ஆறு ஓட்டங்களினால் மும்பை வெற்றி பெற்றது. கடைசிப் பந்து நோபோல் என்பது போட்டி முடிந்தபின்னர்தான் தெரியவந்தது. இது பெரிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது. பும்ரா ஆட்டநாயகன் விருது பெற்றார். ஐபிஎல் அரங்கில் பொலட் 2500 ஓட்டங்கள் அடித்தார். மும்பை அணிக்காக 2500 ஓட்டங்கள் அடித்த இரண்டாவது வீரர் பொலட்  முதலிடத்தில் ரோஹித் இருக்கிறார். ஐபிஎல் போட்டியில் கோஹ்லி ,5000 ஓட்டங்களைக்  கடந்தார். முதலிடத்தில் ரெய்னா   இருக்கிறார்.

No comments: