Thursday, October 1, 2020

ராஜஸ்தானுடனான போட்டியில் வெற்றி பெற்றது கொல்கத்தா


 


துபாயில் நடந்த 12-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் கொல்கத்தா நைட் ரைடர்ஸும், ராஜஸ்தான் ராயல்ஸும்  மோதின நானயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் கப்டன் ஸ்டீவன் ஸ்மித் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

சுப்மான் கில், மோர்கன் ஆகியோரின் பொறுப்பான துடுப்பாட்டம் கம்மின்ஸ், நாகர்கோட்டி, மாவி ஆகியோரின்  துலியமானபந்துவீச்சு ஆகியவற்றால் துபாயில் ஐபிஎல் போட்டியின் 12-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியை 37 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 174 ஓட்டங்கள் சேர்த்தது. 175 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து137 ஓட்டங்கள் அடித்து 37 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

  கொல்கத்தா அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக சுனில் நரினும், சுப்மான் கில்லும் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாகக் களம் இறங்கினர். ஓட்ட எண்ணிக்கைஅயைத் தொடங்குமுன்பே உத்தப்பாவின் கருணையால் தப்பித்த நரின் 15 ஓட்டங்கலைல் வெக்கெட்டை இழந்து நடையை கட்டினார்.


இதன் பின்னர் சுப்மான் கில்லும், நிதிஷ் ராணாவும் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். ராஜஸ்தான்  82 ஓட்டங்கள் எடுத்தபோது இந்த ஜோடியை திவேதியா பிரித்தார். ராணா 22 ஓட்டங்களில் ஆட்டம் இழந்தார். சுப்மான் கில்லை (47 ரன், 34 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்) வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் வெளியேற்ரினார்.. மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசிய ஜோப்ரா ஆர்ச்சரின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் கொல்கத்தா வீரர்கள் மிரண்டனர். அவர் தனது முதல் 3 ஓவர்களில் 4 ஓட்டங்கள்மட்டுமே விட்டுக்கொடுத்திருந்தார். கப்டன் தினேஷ் கார்த்திக் (1 ஓட்டம்), ஆந்த்ரே ரஸ்செல் (24ஓட்டங்கள்)  அடித்து அடுத்தடுத்து வெளியேற கொல்கத்தா அணி நெருக்கடிக்குள்ளானது.

கடைசி கட்டத்தில் இயான் மோர்கன் நிலைத்து நின்று விளையாடி சவாலான ஓட்ட எண்ணிக்கையை எட்டுவதற்கு உதவினார். 20 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 6 விக்கெட்களை இழந்து 174 ஓட்டங்கள் அடித்தது. இதில் கடைசி 5 ஓவர்களில் 54 ஓட்டங்கள் சேர்க்கப்பட்டது. மோர்கன் 34 ஓட்டங்களும் (23 பந்து, ஒரு பவுண்டரி, 2 சிக்சர்), கம்மின்ஸ் 12 ஓட்டங்களும் எடுத்தனர்.

உதிரிகளாக 8 வைட் உள்பட 11 ஓட்டங்கள் கிடைத்தன. ராஜஸ்தான் தரப்பில் ஜோப்ரா ஆர்ச்சர் 2 விக்கெட்களும், உனட்கட், அங்கித் ராஜ்புத், டாம் கர்ரன், திவேதியா ஆகியோர்  தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

  175 ஓட்டங்க


ள் எனும் இலக்கை நோக்கி ஆடிய ராஜஸ்தானுக்கு ஆரம்பத்திலேயே பேரிடி விழுந்தது. முந்தைய ஆட்டங்களின் ஹீரோக்கள் கப்டன் ஸ்டீவன் சுமித் (3ஓட்டங்கள்), சஞ்சு சாம்சன் (8 ஓட்டங்கள் ) இருவரும் கொல்கத்தாவின் புயல்வேக பந்துவீச்சில் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்..

 அடுத்து களம் இறங்கிய வீரர்களானஜோஸ் பட்லர் (21 ஓட்டங்கள்), உத்தப்பா (2 ஓட்டங்கள்), ரியான் பராக் (1 ஓட்டம்), திவேதியா (14 ஓட்டங்கள்) ஆகியோரும் ‘சரண் அடைய ராஜஸ்தான் அணி முழுமையாக சீர்குலைந்தது.

66 ஓட்டங்ககுள் 6 விக்கெட்டுகளை பறிகொடுத்து ஊசலாடிய ராஜஸ்தான் அணியால் அதன் பிறகு நிமிர முடியவில்லை. அந்த அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து  137 ஓட்டங்கள் எடுத்தது. இதன் மூலம் கொல்கத்தா அணி 37 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டாம் கர்ரன் 54 ஓட்டங்களுடன் (2 பவுண்டரி, 3 சிக்சர்) ஆட்டம் இழக்காமல் இருந்தார். கொல்கத்தா தரப்பில் ஷிவம் மாவி, கம்லேஷ் நாகர்கோட்டி, வருண் சக்ரவர்த்தி ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.


 இந்த வெற்றியின் மூலம் 7-வது இடத்திலிருந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பரமபத ஏணியில் விர்ரென 2-ம் இடத்துக்கு உயர்ந்துள்ளது. ஓட்ட விகித அடிப்படையிலும் ராஜஸ்தான் அணியைவிட சிறப்பாக இருக்கிறது. தோல்வியுடன் தொடங்கினாலும் அடுத்தடுத்து இரு வெற்றிகளால் தினேஷ் கார்த்திக் தலைமை உற்சாகத்துடன் இருக்கிறது.

3-வது ஆட்டத்தில் ஆடிய கொல்கத்தா அணிக்கு இது 2-வது வெற்றியாகும். ஏற்கனவே ஐதராபாத்தை வென்றிருந்தது. அதே சமயம் 3-வது லீக்கில் விளையாடிய ராஜஸ்தானுக்கு இது முதலாவது தோல்வியாகும்.

No comments: