Thursday, October 8, 2020

கொல்கத்தாவிடம் வீழ்ந்தது சென்னை


 

அபுதாபியில் நடந்த  21-வது லீக் ஆட்டத்தில்   சென்னை சூப்பர் கிங்ஸும், கொல்கத்தா நைட் ரைடர்ஸும் மோதின. சென்னை அணியில் ஒரே ஒரு மாற்றமாக சுழற்பந்து வீச்சாளர் பியுஷ் சாவ்லாவுக்கு பதிலாக கரண் ஷர்மா சேர்க்கப்பட்டார். நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற கொல்கத்தா அணி முதலில் துடுப்பெடுத்தாடத்  தீர்மானித்தது.

திரிபாதியின் துடுப்பாட்டம்,, வருண், ரஸல், நரேன் ஆகியோரின் நெருக்கடி தரும் அபாரமான பந்துவீச்சு ஆகியவற்றால் அபு தாபியில்  நடந்த ஐபிஎல் போட்டியின் 21-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 10 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 167 ஓட்டஞ்களுக்கு அனைத்து விக்கெட்டுகளை இழந்தது. 168 ஓட்டங்க அடித்தால் வெற்றி எனும் அடைந்துவிடும் இலக்குடன் பயணித்த சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 157 ஓட்டங்கள் சேர்த்து 10 ஓட்டங்களில் தோல்வி அடைந்தது.


  சுப்மான் கில்லுடன் தொடக்க வீரராக ராகுல் திரிபாதி இறக்கப்பட்டார். கில் 11 ஓட்டங்களிலும், அடுத்து வந்த நிதிஷ் ராணா 9 ஓட்டங்களிலும் ஆட்டம் இழந்தனர். 3-வது விக்கெட்டுக்கு களம் புகுந்த சுனில் நரின், பிராவோவின் பந்து வீச்சில் சிக்சர், பவுண்டரி அடித்த திருப்தியோடு வெளியேறினார். நரின் (17ஓட்டங்கள்) தூக்கியடித்த பந்தை எல்லைக்கோடு பக்கம் ஜடேஜா பாய்ந்து விழுந்துஅற்புதமாகப் பிடித்தார். லைனை தொடுவதற்குள் பந்தை தூக்கிபோட அதை பிளிஸ்சிஸ் கேட்ச் செய்தார்.

விக்கெட்கள் விழுந்த மகிழ்ச்சியில் சென்னை இருக்கையில் தனி ஒருவனாகப் போராடிய திரிபாதி நிலைத்து நின்று விளையாடி கொல்கத்தாவின் ஓட்ட எண்ணிககையை கணிசமாக உயர்த்தினார். அத்துடன் .பி.எல்.-ல் தனது 5-வது அரைசதத்தையும் கடந்தார். மறுபக்கம் நரினுக்கு பிறகு வந்த அபாயகரமான வீரர்கள் இயான் மோர்கன் (7 ஓட்டங்), ஆந்த்ரே ரஸ்செல் (2 ஓட்டங்கள்) விரைவாக வெளியேறினர்.. இருவரும் விக்கெட் கீப்பர் டோனியிடம் சிக்கினர். இதனால் கொல்கத்தாவின் ஓட்டவேகம் சற்று தளர்ந்தது. திரிபாதி   81 ஓட்டங்கள் (51 பந்து, 8 பவுண்டரி, 3 சிக்சர்) அடிட்து ஆட்டமிழந்தார். கடைசி கட்டத்தில் கம்மின்ஸ் (17ஓட்டங்கள்) தவிர மற்றவர்கள் சோபிக்கவில்லை.

20 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 167 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்கலையும் இழந்தது.. சென்னை தரப்பில் வெய்ன் பிராவோ 3 விக்கெட்களும், சாம் கர்ரன், ஷர்துல் தாகூர், கரண் ஷர்மா  ஆகியோர்தலா 2 விக்கெட்களும் வீழ்த்தினர்.


  168 ஓட்டங்கள்  எனும் இலக்கை நோக்கி சென்னை அணியின் தொடக்க வீரர்களாக பாப் டு பிளிஸ்சிஸ்சும், ஷேன் வாட்சனும் இறங்கினர். முதல் விக்கெட்டுக்கு 30 ஓட்டங்கள் எடுத்து இவர்கள் பிரிந்தனர். பிளிஸ்சிஸ் 17 ஓட்டங்களில் (10 பந்து, 3 பவுண்டரி) ஆட்டமிழந்ந்தார்.

  வாட்சனும், அம்பத்தி ராயுடும் கைகோர்த்து அணியை நல்ல நிலைக்கு கொண்டு சென்றனர். சென்னை 99 ஓட்டங்களை (12.1 ஓவர்) எட்டிய போது அம்பத்தி ராயுடு 30 ஓட்டங்களில் வெளியேறினார். அடுத்து கப்டன் டோனி வந்தார். தொடர்ந்து 2-வது அரைசதத்தை பூர்த்தி செய்த வாட்சன் 50 ஓட்டங்களில் (40 பந்து, 6 பவுண்டரி, ஒரு சிக்சர்) சுனில் நரினின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். டி.ஆர்.எஸ். தொழில்நுட்பத்தை பயன்படுத்தியும் வாட்சனுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கவில்லை. அவரது விக்கெட் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது.

  டோனி (11 ஓட்டங்கள்) ,. சாம் கர்ரன் (17 ஓட்டங்கள்) எடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் சென்னை அணிக்கு நெருக்கடி உருவானது. கடைசி ஓவரில் சென்னை அணியின் வெற்றிக்கு 26 ஓட்டங்கள் தேவைப்பட்டது. கேதர் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா களத்தில் இருந்தனர். பரபரப்பான 20-வது ஓவரை வேகப்பந்து வீச்சாளர் ஆந்த்ரே ரஸ்செல் கச்சிதமாக வீசி தங்கள் அணியின் வெற்றியை உறுதி செய்தார். 20 ஓவர்களில் சென்னை அணி 5 விக்கெட்டுக்கு 157 ஓட்டங்கள் எடுத்தது. இதன் மூலம் கொல்கத்தா அணி 10 ஓட்டங்கள்வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜாதவ் 7 ஓட்டங்களுனுடனும், ஜடேஜா 21 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது இருந்தனர்.


கொல்கத்தா அணியின் வெற்றிக்கு பந்துவீச்சு எந்த அளவுக்கு முக்கியக் காரணமோ அதற்கு ஈடாக திரிபாதியின் துடுப்பாட்டம்முக்கியக் காரணம். 51 பந்துகளில் 81 ரஓட்டங்கள்(8பவுண்டரி, 3 சிக்ஸர்கள்) சேர்த்து அணியின் ஸ்கோர் உயர்வுக்கு முக்கியக் காரணமாக இருந்த திரிபாதிக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

கடைசி 8 ஓவரில் சிஎஸ்கே வெற்றிக்கு 69 ஓட்டங்கள் மட்டுமே தேவை, கைவசம் 8 விக்கெட்டுகள் இருந்தன. சிஎஸ்கே போன்ற வலிமையான பேட்டிங் உள்ள அணி நிச்சயம் வென்றிருக்க வேண்டும்.

6-வது லீக்கில் ஆடிய சென்னை அணிக்கு இது 4-வது தோல்வியாகும். கொல்கத்தா அணிக்கு 3-வது வெற்றியாகும்.

கேகேஆர் அணி புள்ளிப்பட்டியலில் 5 போட்டிகளில் 3 வெற்றி, 2 தோல்வி என 6 புள்ளிகளுடன் 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. சிஎஸ்கே அணி 6 போட்டிகளில் 4 தோல்வி, 2 வெற்றிகளுடன் 5-வது இடத்தில் இருக்கிறது

No comments: