இஷான் கிஷானி அதிரடியால் டெல்லிக்கு எதிரான போட்டியில் மும்பை
வெற்றி
பெற்றது.
ஐபிஎல் தொடரின் 51-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கப்பிட்டல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. துபாயில் இன்று மாலை 3.30 மணிக்கு தொடங்கிய இப்போட்டியில் நானயச் சுழற்சியில் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கப்டன் பொலாட் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
இதையடுத்து, டெல்லி கபிட்டல்ஸ் அணியின் பிரித்வி ஷா, ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். 2 பந்துகளை சந்தித்த ஷிகர் தவான் ஓட்டம் எடுக்காமல் போல்ட் பந்து வீச்சில் வெளியேறினார்.
அடுத்து வந்த கப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் பிரித்வி ஷா உடன் ஜோடி சேர்ந்தார். ஆனால், பிரித்வி ஷா 10 ஓட்டங்கள் எடுத்த நிலையில் போல்ட் பந்து வீச்சில் வெளியேறினார்.
பின்னர் களமிறங்கிய ரிஷப் பண்ட் கப்டன் ஷ்ரேயாஸ் உடன் ஜோடி சேர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 29 பந்துகளில் 25 ஓட்டங்கள்எடுத்த ஷ்ரேயாஸ் அய்யர் மும்பை வீரர் சாஹர் பந்து வீச்சில் வெளியேறினார்.
அடுத்துவந்த மார்க்கஸ் ஸ்டாயினஸ் 2 ஓட்டங்களில் வெளியேறினார். 24 பந்துகளில் 21 ஓட்டங்கள் எடுத்திருந்த ரிஷப் பண்ட் விக்கெட்டை பும்ரா வீழ்த்தினார்.
அடுத்து வந்த ஷிம்ரான் ஹேட்மயர் (11 ஓட்டங்கள்), ஹர்ஷ் பட்டேல் (5), அஸ்வின் (12) மும்பை பந்து வீச்சில் அடுத்தடுத்து வெளியேறினர். இதனால், 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி 110 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. சிறப்பாக பந்து வீசிய மும்பை அணியின் பும்ரா, டிரண்ட் போல்ட் ஆகியோர்தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதையடுத்து, 110 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இஷான் கிஷன், குவிண்டன் டிகாக் மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். 28 பந்துகளில் 26 ஓட்டங்களை எடுத்திருந்த டிகாக் டெல்லி வீரர் நார்ட்ஜீ பந்து வீச்சில் வெளியேறினார்.
ஆனால், ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடிய இஷான் கிஷன் டெல்லி அணியின் பந்துவீச்சை நாளாபுறமும் சிதறடித்தார். இதனால் 14.2 ஓவரில் 1 விக்கெட் மட்டுமே இழந்த மும்பை அணி வெற்றி இலக்கான 111 ஓட்டங்களை எட்டியது.
இதனால், டெல்லி கேப்பிடல்ஸ் அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி பெற்றது.
47 பந்துகளில் 8 பவுண்டரிகள், 3 சிக்சர் உள்பட 72 ஓட்டங்கள் குவித்த இஷான் கிஷன் மற்றும் 11 பந்துகளில் 12 ஓட்டங்கள் குவித்த சூர்யகுமார் யாதவ் இறுதி வரை களத்தில் இருந்து வெற்றிக்கு வழிவகுத்தனர்.
No comments:
Post a Comment