கொல்கத்தா அணிக்கு எதிரான வெற்றியின் மூலம் 14 புள்ளிகளுடன், பெங்களூரு அணி புள்ளி பட்டியலில் 2- ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
துபாயில் நடைபெற்று வரும் 13வது ஐ.பி.எல். போட்டித் தொடரின் 39-வது லீக் ஆட்டத்தில் விராட் கோஹ்லி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், இயன் மார்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.
அபுதாபியில் உள்ள சேக் சையீது மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் நானயச் சுழற்சியில் வென்ற கொல்கத்தா அணி கப்டன் இயன் மார்கன் துடுப்பாட்டத்தைத் தேர்வு செய்தார். அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷுப்மன் கில், ராகுல் திரிபாதி ஆகியோர் களமிறங்கினர். பெங்களூரு அணியில் அனல் பறக்கும் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் கொல்கத்தா அணி வீரர்கள் தடுமாறினர். பவர்பிளே முடிவதற்குளாகவே கொலகத்தா அணி 4 விக்கெட்கலை இழந்து 14 ஓட்டங்கள் எடுத்து தத்தளித்தது. அடுத்து வந்த வீரர்களும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்தது.
இந்த ஆட்டத்தின் மூலம் ஐ.பி.எல். போட்டியில் இரண்டு மெய்டன் ஓவர்கள் வீசிய முதல் பந்து வீச்சாளர் என்ற பெருமையை முகமது சிராஜ் பெற்றார். இறுதியாக 20 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 8 விக்கெட்டுகளை இழந்து 84 ஓட்டங்கள் எடுத்தது. பெங்களூரு அணியில் அபாரமாக பந்து வீசிய சிராஜ் 4 ஓவர்கள் வீசி 8 ஓட்டங்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதையடுத்து, 85 ஓட்டங்கள் என்ற எளிய இலக்குடன் களம் இறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, எந்த சிரமமும் இன்றி கொல்கத்தா பந்து வீச்சை எதிர்கொண்டது. 13.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 85 ஓட்டங்கள் எடுத்து பெங்களூரு அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் 14 புள்ளிகளுடன் பெங்களூரு அணி புள்ளிப் பட்டியலில் 2- ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
பெங்களுரு வீரர்கள் நான்கு ஓட்டமற்ற ஓவர்களை வீசினார்க.ள்.சிராஜ் 2,வாஷிங்டன் சுந்தர், மொரிஸ் ஆகியோ தலா ஒரு ஓட்டமற்ற ஓவர்களை வீசினார்கள். பிளே ஓவரில் நான்கு விக்கெடுகளை இழந்த ரோயல் சலன்ஞ் 17 ஓட்டங்கள் எடுத்தது.
No comments:
Post a Comment