இந்தியாவின்
தலைநகரான டெல்லியில் கடந்ததிங்கட்கிழமை நடந்த கார் குண்டு வெடிப்பு ஒட்டு மொத்த இந்தியாவையும் உலுக்கி உள்ளது. மக்கள் நெரிசலாக உள்ள செங்கோட்டை
இந்தியாவின் அடையாளங்களில் ஒன்று. பீகார் தேர்தலில்
இந்தியாவின் கவனம் முழுவதும் இருந்த வேளையில்
தலைநகரில் குண்டு வெடித்துள்ளது.
ரெட் போட் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு அருகே கார்
குண்டு வெடித்தது என அறிவிக்கப்பட்டதால் தற்கொலைத்
தாக்குதலாக இருக்குமோ என்ற அச்சம் முதலில் ஏற்பட்டது. குண்டு வெடிப்பு, தற்கொலைத் தாக்குதல் என்றால் அழிவு அதிகமாக இருக்கும்
என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.ஆனால், 13 பேர்
இறந்தனர். 20 பேர் காயமடைந்தனர்.
வழமையான
குண்டு வெடிப்புக்கான அடையாளம் எதுவும் அங்கே இல்லை. பாரியகுழி, சம்பவம் நடந்த இடத்தைச் சுற்றி இருந்த
கார்கள், கட்டடங்க எவையும் அதிகம் பாதிக்கப்படவில்லை இது பெரிய ஆச்சரியமாகப்
பார்க்கப்பட்டது.
முதல்கட்ட
விசாரணையில் இது திட்டமிட்ட குண்டு வெடிப்பு
அல்ல என்று புலனாய்வாளர்கள் கருதுகிறார்கள். வெடிகுண்டுகளை இடமாற்றம் செய்யப்பட்ட போது
ஏற்பட்ட விபத்தாக இருக்கலாம் எனவும் கருதப்படுகிறது. குண்டு வெடித்தபோது நெரிசல் மிகுந்து இருந்ததால்
கார் மெதுவாக நகர்ந்தது. வீதியில் இருந்த மேடு பள்ளம் காரணமாகவும் குண்டு வெடித்திருக்கலாம் என வல்லுனர்கள் கருதுகிறார்கள்.
பாதுகாப்பு, கெடுபிடி, சோதனைகள் போன்றவற்றால்
பதற்றத்தில் ஏற்பட்ட விபத்து என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது. சரியான முறையில் வெடிகுண்டு பொருத்தப்படாததனால்
அதிக சேதம் ஏற்படவில்லை.
காரைச் செலுத்தியவர் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த டாக்டரான
உமர் நபி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மூன்று நாட்களாக அவரது தொலசிபேசி இயங்கவில்லை.
யாருடனும் தொடர்பில் இல்லாது தலை மறைவாக இருந்தார்.
துரித
கதியில் செயற்பட்ட இந்திய புலனாய்வுத்துறை பலரைக் கைது செய்தது. அதில் அதிகமானோர் டாக்டர்கள்,
சிலர் இளைஞர்கள்.
டெல்லித்
தாக்குதலில் சூத்திரதாரியாகச் செயற்பட்டவர்கள் டாக்டர்கள் என்பதால் பொலிஸார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதில் ஒரு பெண் டாக்டரும் அடங்குகிறார். உயிரைக் காப்பாற்றும் டாக்டர்களே உயிரைக் குடிக்கும்
பயங்கர்வாதிகளாகச் செயற்படுகிறார்கள்.
ஒபரெஷன்
சிந்தூர் நடவடிக்கைகு பழிவங்குவதற்காக ஜெய்ஷ் - இ - முகமது அமைப்பு இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
ஜெய்ஷ் - இ - முகமது அமைப்புக்கு ஆதரவாக காஷ்மீரில் பதாகைகள்
ஒட்டிய சம்பவத்துடன் தொடர்புடைய ஆதில் என்ற டாக்டர் உத்தரபிரதேசத்தில் பதுங்கி இருந்தபோது கைது செய்யப்பட்டார்.
அவரிடம் இருந்து 550 கிலோ வெடிபொருட்கள், ஏ.கே.,
- 56, ஏ.கே., - 47 ரக துப்பாக்கிகள், தோட்டாக்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
ஆதில் கொடுத்த தகவலின் பிரகாரம் ஹரியானாவின் பரிதாபாதில்
உள்ள அல் பலாஹ் பல்கலையின் மருத்துவக் கல்லுாரி விரிவுரையாளர் முஸமில் கைது செய்யப்பட்டார்.
அவர் தங்கி இருந்த வீட்டில் 350 கிலோ, 'அமோனியம்
நைட்ரேட்' வெடிபொருட்கள், துப்பாக்கிகள் போன்ரவற்றை
பொலிஸார் கைப்பற்றினர்.
இந்த ஆயுதங்களை கடத்துவதற்கு கார் கொடுத்து உதவிய உத்தர பிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்த மருத்துவ
கல்லூரியில் புரோபஷராக பணியாற்றிய டாக்டர் ஷாகின் ஷாஹித் என்பவர் கைது செய்யப்பட்டார்.
இவர் பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் ஜெய்ஷ்-இ-முகமது மகளிர் அமைப்பின் இந்தியப் பிரிவுக்கு
தலைமை தாங்கி வந்ததாக கூறப்படும் நிலையில் அவரது பின்னணி பற்றி திடுக்கிட வைக்கும்
தகவல் வெளியாகி உள்ளது. இதில் தொடர்புடைய நான்காவது
டாக்டரான உமர், கைது நடவடிக்கைகளால் தலைமறைவான நிலையில், வெடிபொருட்கள் நிரப்பிய காரை
டில்லி செங்கோட்டைக்கு ஓட்டிச்சென்று வெடிக்க செய்துள்ளார்.
டாக்டர்களையும்,
இளைஞர்களை தீவிரவாத கொள்கைகளுக்குள் ஈர்த்ததாக கருதப்படும் ஜம்மு காஷ்மீரின் ஷோபியான்
பகுதியை சேர்ந்த இமாம் இர்ஃபான் அகமது வாகா செவ்வாய்க்கிழமை அன்று கைது செய்யப்பட்டார்.
இவர்
இதற்கு முன்பு ஸ்ரீநகரில் உள்ள அரசுக் மருத்துவக் கல்லூரியில் துணை மருத்துவ ஊழியராகவும் பின்னர் நௌகாமில் இமாமாகவும் பணியாற்றியவர்.
இர்ஃபான்
அகமது வாகாவின் மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளார்.
மருத்துவ
நிபுணர்கள் மற்றும் இளைஞர்களை தீவிரமயமாக்குவதில் (radicalising) இவர்கள் ஈடுபட்டதாக
உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
டெல்லி
குண்டுவெடிப்புக்கு மூல காரணமான வெள்ளை நிற ஹூண்டாய் i20 கார் பற்றிய பரபரப்பு தகவல்கள்
வெளியாகி உள்ளன. இந்த கார் எங்கிருந்து ,எத்தனை மணிக்கு டெல்லி சென்றது?, யார் யார் இந்த காரை வைத்திருந்தனர்?
எப்படி இந்த பயங்கரவாத சம்பவத்துக்கு இந்த கார் பயன்படுத்தப்பட்டது என்ற தகவல்கள் வெளியாகி
உள்ளன.
டெல்லியில்
குண்டு வெடித்த அன்று காலையில் ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் 2,900 கிலோ வெடிகுண்டு தயாரிக்கப்
பயன்படுத்தப்படும் இரசாயன பொருட்களும், ஏகே 47 துப்பாக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
. இதனால்
பொலிஸாரின் தேடுதல் வேட்டையில் சிக்கிவிடக்கூடாது என்பதற்காக பயங்கரவாதிகள்
வெடிபொருட்களை மாற்றும்போது எதிர்பாராதவிதமாக டெல்லி சிக்னல் அருகே நின்றபோது வெடித்து
சிதறியிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
டெல்லி குண்டுவெடிப்புக்கு காரணமாக கூறப்படும்,
'ஹூண்டாய் ஐ -20' கார், ஹரியானா மாநிலம் பரிதாபாதில் இருந்து டெல்லிக்கு வந்தது என்பதை
சிசிடிவி காட்சிகள் மூலமாக பொலிஸார் உறுதி செய்தனர். ஹரியானாவில் இருந்து புறப்பட்ட
கார் சம்பவம் நடந்த அன்று காலை 7:30 மணிக்கு
இந்த கார்ஹரியானாவில் இருந்து புறப்பட்டது.
காலை 8:13 மணியளவில் டெல்லியின் நுழைவுவாயிலாக கருதப்படும்
பதர்பூர் சுங்கச்சாவடி அருகே காணப்பட்டது. அங்கிருந்து காலை 8:20 மணியளவில் டெல்லி
ஓக்ல தொழிற்பேட்டை அருகே உள்ள பெட் ரோல் நிலையத்தைக் கடந்து சென்றது.
மாலை 3:19 மணியளவில் டெல்லி செங்கோட்டை வளாகம் அருகே
உள்ள வாகன நிறுத்துமிடத்தில் சுமார் 3 மணி
நேரம் வரை நிறுத்தப்பட்டிருந்தது. * இதன் பிறகு தான் அந்த கார் மாலை 6:22 மணியளவில்
வாகன நிறுத்துமிடத்தில் இருந்து டெல்லி செங்கோட்டை நோக்கிச் சென்றது.. அப்போது சரியாக
மாலை 6.52 மணியளவில் மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள சிக்னலில் வந்த போது அந்த கார்
வெடித்து சிதறியுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் புல்வாமாவைச் சேர்ந்த 35 வயதான உமர் முகமது என்பவர் தான் காரை செலுத்தியவர் என கண்காணிப்பு கமிரா காட்சிகள் மூலமாக தெரியவந்துள்ளது.
இவர் சம்பவ இடத்திலேயே பலியாகி இருப்பார் எனவும், சிதைந்த உடல் இவருடையதாகத்தான் இருக்கும்
என சந்தேகித்துள்ள பொலிஸார் டிஎன்ஏ சோதனை செய்ய உத்தரவிட்டு இருக்கிறார்கள். உமர் முகமது
பரிதாபாத்தில் உள்ள அல்பலா மருத்துவ பல்கலைக்கழகத்தில் டாக்டராக பணிபுரிந்தவர் . ஏற்கனவே
கைது செய்யப்பட்டவர்களும் அங்குதான் பணியாற்றி வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி குண்டு வெடிப்புக்கு காரணமான வெள்ளை நிற ஹுண்டாய்
ஐ20 கார் முதலில் 2014 ஆம் ஆண்டு பழைய குர்கானில்
வசிக்கும் திலீப் என்பவரால் வாங்கப்பட்டது. ஏழு ஆண்டுகளின் பின்னர்
அவர் காரை விற்று விட்டார்.
பலரிடம்
கைமாறிய இந்தக் கார் சோனு என்ற முகவர் மூலம் ஃபரிதாபாத்தில் உள்ள தௌஃபிக்கிற்கு
விற்கப்பட்டது. கடந்த மூன்று மாதங்களாக கார் ஃபரிதாபாத்தில்தான் இருந்தது.
டெல்லி
குண்டு வெடிப்பின் பின்னணியில் பாகிஸ்தான் இருக்கிறதா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது.
கைதுசெய்யப்பட்ட
பெண் மருத்துவர் ஷாஹீனிடம் புலனாய்வு அமைப்புகள் நடத்திய விசாரணைகளில் பல திடுக்கிடும்
தகவல்கள் வெளியாகியருகின்றன.
பாகிஸ்தானைத்
தளமாகக் கொண்ட ஜெய்ஷ்-இ-முகமது அமைப்புடன்
தொடர்புடைய ஷாஹீன், அந்த அமைப்பின் பெண் ஆள்சேர்ப்பு மற்றும் செயல்பாட்டு வலையமைப்பான
ஜமாத்-உல்-மோமினீனின் கீழ் இந்தியாவில் ஜெய்ஷ்
இ முகமது பெண்கள் பிரிவை நிறுவி வழிநடத்தும் பணியில் அவர் ஈடுபட்டிருப்பதாக முதற்கட்ட
விசாரணையில் தெரியவந்திருக்கிறது.
இந்திய
மத்திய அரசின் பாதுகாப்பு குறைபாடு என எதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.
காஷ்மீர்,
மணிப்பூர், டெல்லி, புல்வாமா, பஹல்காம் , தற்போது மீண்டும் தலைநகர் டெல்லியில் குண்டு வெடித்துள்லது.பல இடங்களிலும்
நடைபெற்றுள்ள
டெல்லிக்
குண்டு வெடிப்பை தடுக்கத் தவறியதற்கு யார்
பொறுப்பு? நிர்வாகத்தின் எந்த இடத்தில் குறைபாடு உள்ளது? கடமையை செய்ய தவறியவர்கள்
மீது நடவடிக்கை எடுத்தால் தானே மீண்டும் இப்படி நிகழ்வு அரங்கேறாமல் இருக்கும்? இந்த
கேள்விகளுக்கு அரசாங்கம் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்பதே மக்களின் எண்ணமாக உள்ளது.