Showing posts with label ட்ரோன். Show all posts
Showing posts with label ட்ரோன். Show all posts

Tuesday, June 2, 2026

உலகக் கிண்ணப் போட்டிக்காக ட்ரோன்கள் பறக்கத்தடை விதித்தது அமெரிக்கா


 

   உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறும்   மைதானங்கள்  ,போட்டி தொடர்பான ரசிகர் நிகழ்வுகளின் மேலாக  ட்ரோன் பறப்பதற்குத் தடை விதிக்கப்படும் என்று  அமெரிக்க அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர்.

போட்டி நாட்களில், ட்ரோன்கள் உட்பட அனைத்து விமானங்களும் மைதானங்களிலிருந்து மூன்று கடல் மைல் (5.6 கிலோமீட்டர்) தொலைவிற்குள்  தரை மட்டத்திலிருந்து 3,000 அடி (900 மீற்றர்) உயரம் வரை பறப்பதற்குத் தடை விதிக்கப்படும் என்று ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (Fஆஆ)  அறிக்கையில் தெரிவித்துள்ளது.

போட்டிகளை நடத்தும் நகரங்கள் மைதானங்கள் மற்றும் பிற இடங்களில் நடத்தும் ரசிகர் நிகழ்வுகளைச் சுற்றியுள்ள பறக்கத் தடை செய்யப்பட்ட பகுதிகள், ஒரு கடல் மைல் ஆரம் வரையிலும் மற்றும் தரை மட்டத்திலிருந்து 1,000 அடி உயரம் வரையிலும் நீடிக்கப்பட்டுள்ளன.

விதிமீறுபவர்களுக்கு 100,000 டாலர் வரை அபராதம், உபகரணங்கள் பறிமுதல் , மத்திய குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்படலாம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.