Thursday, November 9, 2023

நெதர்லாந்தை வெளியேற்றிய இங்கிலாந்து

புனேயில்  நடைபெற்ற 40வது லீக் போட்டியில் இங்கிலாந்து,நெதர்லாந்து ஆகியன  மோதின மோதின.   லீக் சுற்றுடன் அதிகாரப்பூர்வமாக வெளியேறிய நடப்பு சம்பியன் இங்கிலாந்து ஆறுதல் வெற்றி பெறும் முனைப்புடன் விளையாடியது. உலகக்கிண்ண சம்பியன்களை இந்ததொட‌ரில் குப்புற‌ வீழ்த்திய நெதர்லாந்து நம்பிக்கையுடன்  போட்டியை எதிர்கொணடது.

நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற  இங்கிலாந்து  முதலில் துடுப்பெடுத்தாடி  50 ஓவர்களில் 9 விக்கெற்களை இழந்து  339  ஓட்டங்கள் எடுத்தது. 37.2 ஓவர்களில் சகல விக்கெற்களையும் இழந்த நெதர்லாந்து   179 ஓட்டங்கள் மட்டுமெ எடுத்தது. இங்கிலாந்து 160 ஓட்டங்களால் வெற்றி பெற்று ஆறுதலடைந்தது.

ஜானி பேர்ஸ்டோ 15ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.   துவக்க வீரர் டேவிட் மாலனுடன் அடுத்ததாக ஜோடி சேர்ந்து 2வது விக்கெட்டுக்கு 85 ப்ப்ட்டங்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ஜோ ரூட் 28 ஓட்டங்களில் களில் அவுட்டாக அடுத்ததாக வந்த ஹாரி ப்ரூக் 11, கப்டன் பட்லர் 5, மொயின் அலி 4 ஓட்டங்களில் வெறியேறி  ஏமாற்றத்தை கொடுத்தார்கள். 6 விக்கெற்களை இழந்து    192 ஓட்டங்கள் எடூத்து தடுமாரியது இங்கிலாந்து.  அப்போது நங்கூரமாக நின்ற நம்பிக்கை நட்சத்திரம் பென் ஸ்டோக்ஸ் ஆரம்பத்தில் நிதானமாகவும் நேரம் செல்ல செல்ல அதிரடியாகவும் விளையாடி தனது முதல் உலகக்கிண்ண சதத்தை அடித்தார்.  அவருடன் 7வது விக்கெட்டுக்கு 129ஓட்டங்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய கிறிஸ் ஓக்ஸ் அதிரடியாக 51 ஓட்டங்கள் குவித்து அவுட்டானார்.  பென் ஸ்டோக்ஸ் 6 பவுண்டரி 6 சிக்சருடன் 108 (84) ஓட்டங்கள் குவித்ததால் 50 ஓவர்களில் இங்கிலாந்து 339 ஓட்டங்கள் எடுத்தது.  நெதர்லாந்து சார்பில்  பஸ் டீ லீடி 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

  340 என்ற கடினமான இலக்கை துரத்திய நெதர்லாந்துக்கு மேக்ஸ் ஓதாவுத் 5 , ஆக்கர்மேன் டக் அவுட்டானார். அடுத்த சில ஓவரிலேயே மறுபுறம் நிதானமாக விளையாடிய பரேசி 37 ஓட்டங்களில்   வெளியேறினார். 3  விக்கெற்களை இழந்து 68 ஒட்டங்கள் எடுத்து தடுமாறிய  நெதர்லாந்தை மிடில் ஆர்டரில் எங்கேல்பேர்ச்ட் 33, கப்டன் எட்வர்ட்ஸ் 38 ஓட்டங்கள் எடுத்து காப்பாற்ற போராடியும் பலனில்லை.    நம்பிக்கை நட்சத்திரம் பஸ் டீ லீடி 10  ஓட்டங்களில் அவுட்டாகி மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தினார். இறுதியில் நிதமனரு அதிரடியாக விளையாடி 41* ஓட்டங்கள் எடுத்த போதிலும் இதர வீரர்கள் உடனடியாகப்  பெவிலியன் திரும்பியதால் 37.2 ஓவர்களில் 179  ஓட்டங்கள் எடுத்தது நெதர்லாந்து.

மொய்ன் அலி , அடில் ரசித் ஆகிய ஸ்பின்னர்கள் தலா 3 விக்கெட்டுகள் சாய்த்தனர். இதனால் 6வது தோல்வியை பதிவு செய்த நெதர்லாந்து இந்த உலகக் கோப்பையிலிருந்து லீக் சுற்றுடன் அதிகாரப்பூர்வமாக வெளியேறியது. மறுபுறம் 2வது வெற்றியை பதிவு செய்த இங்கிலாந்து புள்ளி பட்டியலில் 7வது இடத்திற்கு முன்னேறியதுடன் கடைசி போட்டியில் வென்றால் 2025 சாம்பியன்ஸ் டிராபிக்கு தகுதி பெறலாம் என்ற நல்ல நிலைமைக்கு வந்து தங்களுடைய மானத்தை தக்க வைத்துள்ளது.

No comments: