Thursday, October 19, 2023

சரித்திர சாதனை படைத்த நெதர்லாந்து


 இங்கிலாந்தை ஆப்கானிச்தான் வீழ்த்திய அதிர்ச்சி பற்றிய விவாதம்  ஓய்வதற்கு முன்னர்  பலம் வாய்ந்த தென். ஆபிரிக்காவை நெதர்லாந்து  தோற்கடித்து  புதிய சரித்திரம் படைத்துள்ளது. தர்மசாலாவில் நடைபெற்ற போட்டியில்நெதர்லாந்து 38  ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

43 ஓவர்களில்  நெதர்லாந்து  8 விக்கெற்களை இழந்து 245  ஓட்டங்கள் எடுத்தது.   42.5 ஓவர்களில் சகல விக்கெற்களையும் இழந்த தென்.  ஆபிரிக்கா  207  ஓட்டங்கள் எடுத்தது. 38 ஓட்டங்களால் தோல்வியடைந்த தென். ஆபிரிக்கா 32  உதிரிகளை விட்டுக் கொடுத்தது.

நாணயச் சுழற்சியில் வெற்ரி பெற்ற தென்.ஆபிரிக்கா  பந்து வீச்சைத் தேர்வு செய்தது.மழை காரணமாக  தாமதமாக  போட்டி ஆரம்பித்ததால் 43  ஓவர்களாகக்  குறைக்கப்பட்டது. 20.2 ஓவர்களில்5 விக்கெற்களை இழந்த நெதர்லாந்து  82  ஓட்டங்கள் எடுத்தது. நெதர்லாந்தின் கதை முடிந்ததென நினைத்திருந்த வேலையில்  கடைசி 9 ஓவர்களில்  109 ஓட்டங்கள் குவித்து தென். ஆபிரிக்காவைத் திணறடித்தது.

  வேன் பீக்   10 (17) ஓட்டங்கள்,   வேன் டெர் மெர்வி அதிரடியாக 3 பவுண்டரி 1 சிக்ஸருடன் 29 (19) ஓட்டங்கள்,   ஆரியான தத் 3 சிக்சருடன் 23* (8) ஓட்டங் அடித்தனர்.  எட்வர்ட்ஸ் 10 பவுண்டரி 1 சிக்சருடன் 78* (69) ஓட்டங்கள் எடுத்ததால் 43 ஓவர்களில்  நெதர்லாந்து  8 விக்கெற்களை இழந்து 245  ஓட்டங்கள் எடுத்தது.

246   எனும் வெற்ரி இலக்குடன் களம்  இறங்கிய தென். ஆபிரிக்காவை நெதர்லாந்து  பந்து வீச்சிலும் திணறடித்தது. குயிண்டன் டீ காக் 20,  தெம்பா பவுமா 16 , வேன் டெர் டுஷன் 4, ஐடன் மார்க்கம் 1, ஹென்றிச் க்ளாஸென் 28 என 3 முக்கிய வீரர்கள் அடுத்த சில ஓவர்களில் சீரான இடைவெளிகளில் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்ததால்  தென். ஆபிரிக்கா 18.5  ஓவர்களில் 5 விக்கெற்களை இழந்து  89 00ட்டங்கள் எடுத்தது. டேவிட் மில்லர்  அதிக பட்சமாக 43 ஓட்டங்கள் எடுத்தார்.  ஜெரால்ட் கோட்சி 22 , ரபாடா 9 , கேசவ் மகாராஜ் 40  ஓட்டங்கள் எடுத்தனர். 42.5 ஓவர்களில் சகல விக்கெற்களையும் இழந்த தென்.  ஆபிரிக்கா  207  ஓட்டங்கள் எடுத்தது.

2003 ஆம் ஆண்டு நமீபியா, 2007 ஆம் ஆண்டு இல் ஸ்காட்லாந்து ஆகியவற்றைத் தோர்கடித்த நெதர்லாந்து 16 வருடங்கள் கழித்து உலகக் கிண்ணப் போட்டியில்    பெற்றுள்ளது.  2022 ஆன் ஆண்டு ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் தென். ஆபிரிக்காவைத் தோர்கடித்த நெதர்லாந்து அதன் அரை இருதி வாய்ப்பை நொருக்கியது.

7வது இடத்தில் களமிறங்கிய ஸ்காட் எட்வார்டஸ்நங்கூரமாகவும் அதிரடியாகவும் 10 பவுண்டரி 1 சிக்சருடன் 78* (69)ஓட்டங்கள் குவித்து வெற்றி பெற உதவினார்.  உலகக்கிண்ண வரலாற்றில் 7வது இடத்தில் களமிறங்கி    இந்திக கப்டன்  கபில் தேவின்  36 வருட சாதனையை சாதனையை அவர் முந்தினார்.

1. ஸ்காட் எட்வார்டஸ் : 78*, தென்னாபிரிக்காவுக்கு எதிராக, 2023*

2. கபில் தேவ் : 72*, நியூசிலாந்துக்கு எதிராக, 1987

3. ஹெத் ஸ்ட்ரீக் : 72*, நியூசிலாந்துக்கு எதிராக, 2003

4. தசுன் சனக்க : 68, தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக , 2023

கிறிக்கெற் விளையாடும் சந்தர்ப்பன் நெதர்லாந்தில் அதிகளவு இல்லை. நெதர்லாந்து அணியில் உள்ள வீரர்கள்  வேலை செது கொண்டு பகுதி நேரமாக கிரிக்கெற்  விளையாடுகிறார்கள். மூன்ரு மாதங்களுக்கு  முன்  உணவு  டெலிவரி செய்த  பால் மேக்கிரீன் 9 ஓவர்கள் வீசி 40 ஓட்டங்களை விக்குக் கொடுத்து    இரண்டு முக்கிய விக்கெட்களை   வீழ்த்தினார்.

நெதர்லாந்தின் சில  ள் சில வீரர்கள் இங்கிலாந்தில் கவுண்டி கிரிக்கெட் விளையாடி தங்களது வாழ்க்கையில் நடத்தி வருகின்றனர்.  2020 ஆம் ஆண்டு கொரோனா இந்த உலகத்தையே தலை கீழ் புரட்டிப் போட்டது. இதில் விளையாட்டு உலகமும் வெகுவாக பாதிக்கப்பட்டது. விளையாட்டுப் போட்டிகள் எதுவும் நடைபெறாத நிலையில், கவுன்டி கிரிக்கெட்டில் விளையாட சென்ற நெதர்லாந்து வீரர் பால் வான் மேக்கிரீன் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தார். அப்போது தான் வாழ்க்கையைக் காப்பாற்ற  அங்கு உணவு டெலிவரி செய்யும் வேலை கிடைத்தது.   கிரிக்கெட் விளையாட வேண்டும் என்றால் பணம் தேவை என்பதற்காக அந்தப் பணியை செய்து கொண்டிருந்தார். அப்போது ரி20  வுலகக்கிண்ண  கிரிக்கெட் போட்டி நடந்திருக்க வேண்டிய தினம் இது என சமூக வலைத்தளத்தில் செய்தி ஒன்று போடப்பட்டிருந்தது. அதை மேற்கோள் காட்டிய பால் மேக்கிரீன் இந்நேரம் நான் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருப்பேன்.

ஆனால் விதி என்னை உணவு டெலிவரி செய்யும் வேலையை பார்க்க வைத்திருக்கிறது. எனினும் கவலைப்படாதீர்கள் மக்களே. மகிழ்ச்சியாக இருங்கள் என்று அவர் டிவீட் போட்டு இருந்தார். தற்போது மூன்று ஆண்டுகள் கடந்து  உலகக்கிண்ணப் போட்டியில் சாதித்துள்ளார்.

 ரமணி

No comments: