Friday, November 19, 2021

கட்டாருக்கு நேரடியாகச் செல்கிறது நெதர்லாந்து


 

ஐரோப்பா கண்டத்தில் நடைபெற்ற உலகக்கிண்ண தகுதிகாண்  போட்டியில் நோர்வேயை வெற்றி கொண்ட நெதர்லாந்து கட்டாரில் உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றது.

போட்கோரிகாவில் மான்டினீக்ரோவை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றதுருக்கியும்,  பெல்ஜியத்திற்கு எதிரான போட்டியில்  1-1 என்ற  கோல் கணக்கில் சமன் செய்த வேல்ஸும்  பிளே ஃஓவ் சுற்றில் விளையாடக் காத்திருக்கின்றன.

ரசிகர்கள்  இல்லாத டி குயிப் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நோர்வேக்கு எதிரான  போட்டியில்  2-0 என்ற கோல் கணக்கில்  வெற்றி பெற்ற நெதர்லாந்து   அடுத்த ஆண்டு  நடைபெறும் உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றது.

நெதர்லாந்து பயிற்சியாளர் லூயிஸ் வான் கால், ஞாயிற்றுக்கிழமை  விபத்தில்  இடுப்பில் எலும்பை உடைத்தபின், மைதானத்தில் ஸ்கை பாக்ஸில் இருந்து போட்டியைப் பார்த்தார். டக்அவுட்டில் உள்ள அவரது உதவியாளர்களான ஹென்க் ஃப்ரேசர் மற்றும் டேனி பிளைண்ட் ஆகியோருக்கு செய்திகளை அனுப்பினார்.

ஸ்டார் ஸ்டிரைக்கர் எர்லிங் ஹாலந்தும் காயத்துடன் வெளியேறியதால்  நோர்வே பெரும்பாலும் தாக்குதல் உத்வேகத்தைக் கொண்டிருக்கவில்லை. ரஷ்யாவில் 2018 உலகக்கிண்ணப் போட்டிக்கு நெதர்லாந்து தகுதி பெறவில்லை .

செவ்வாயன்று நடைபெற்ற பெல்ஜியத்திற்கு எதிரான போட்டி   1-1 என்ற கோல் கணக்கில் முடிந்ததால் வேல்ஸ் அணியின் உலகக்கிண்ணப் பயனம் தாமதமாகியது. கடந்த மார்ச் மாதம் உலகக்  கிண்ண  பிளேஓஃப் இடத்தை உறுதி செய்தது வேல்ஸ். ஆனால் குழு E இல் இரண்டாவது இடத்தைப் பிடித்தால், அவர்கள் பிளே-ஆஃப் அரையிறுதியில் இத்தாலி , போர்ச்சுகல் போன்ற பலமான அணியை சந்திக்கும் நிலை ஏற்பட்டது.

 ஆனால், ஆஸ்திரியா, வடக்கு மாசிடோனியா, போலந்து, உக்ரைன், துருக்கி அல்லது செக் குடியரசு ஆகிய நாடுகளில் ஒன்றுடன் வேல்ஸ் விளையாடும் நிலை ஏற்பட்டுள்ளது.

No comments: