இந்தியாவில் நடைபெறும் உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடிய இந்தியா 9 போட்டிகளிலும் வெற்றி பெற்று புதிய சாதனை படைத்துள்ளது. முன்னதாக உலகக்கிண்ணப் போட்டியில் அவுஸ்திரேலியா இரன்டு முறையும், இங்கிலாந்து அவுஸ்திரேலியா ஆகியன தலா ஒரு முறையும் லீக் போட்டியில் தோல்வியடையாமல் அடுத்த சுற்றுக்கு முன்னேறின.
நாணயச் சுழற்சியில்
வெற்றி பெற்ற இந்தியா முதலில் துடுப்பெடுத்தாடி 50 ஓவர்களில் 4
விக்கெற்களை இழந்து 410 ஓட்டங்கள் எடுத்தது. 411 என்ற இமாலய
இலக்கை நீக்கி விளையாடிய நெதர்லாந்து 47.5 ஓவர்களில் சகல விக்கெற்கலையும்
இழந்து 259ஓட்டங்கள் எடுத்தது. 9 லீக் போட்டிகளில் விளையாடிய
நெதர்லாந்து இரண்டு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. வலுவான
தென்னாப்பிரிக்காவை தங்களுடைய வரலாற்றில் முதல் முறையாக தோற்கடித்து சாதனை
படைத்தது. நம்பிக்கை நட்சத்திரம் பஸ் டீ லீடி ஆல் ரவுண்டராக நல்ல செயல்பாடுகளை
வெளிப்படுத்தினார்.
கப்டன் ரோகித் சர்மா,சுப்மன் கில் ஜோடி பிளே ஓவர்களை பயன்படுத்தி அதிரடியாக விளையாடி 100 ஓட்டங்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தை கொடுத்தனர். ரோஹித் சர்மா 61, கில் 51, விராட் கோலி 51, ஸ்ரேயாஸ் ஐயர் ஆட்டமிழக்காமல் 128, கேஎல் ராகுல் 102 என இந்தியாவின் ஐந்து வீரர்கலும் 50+ ஓட்டங்கள் அடித்தனர். அடித்துள்ளனர். உலகக்கோப்பை வரலாற்றில் ஒரு போட்டியில் டாப் 5 பேட்ஸ்மேன்களும் 50க்கும் மேற்பட்ட ஓட்டக்களை அடித்த முதல் அணி என்ற தனித்துவமான உலக சாதனையை இந்தியா படைத்துள்ளது.
ரோஹித் சர்மாவின் 2 உலக சாதனைகள்
2023 ஒருநாள்
கிரிக்கெட்டில் ரோஹித் சர்மா இதுவரை மொத்தம் 60 சிக்சர்கள் அடித்துள்ளார்.
இதன் ருநாள் கிரிக்கெட்டில் ஒரு காலண்டர் வருடத்தில் அதிக சிக்சர்கள் அடித்த
வீரர் என்ற ஏபி டீ வில்லியர்ஸ் சாதனையை உடைத்துள்ள அவர் புதிய உலக சாதனை
படைத்துள்ளார். இதற்கு முன் 2015ஆம் ஆண்டு ஏபி டீ வில்லியர்ஸ் 58 சிக்சர்கள்
அடித்ததே முந்தைய உலக சாதனையாகும். 2023 உலகக்கோப்பையில் மட்டும் ரோஹித்
சர்மா இது வரை மொத்தம் 24* சிக்சர்கள் அடித்துள்ளார். உலகக்கோப்பை
வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்த கப்டன் என்ற
இங்கிலாந்தின் இயன் மோர்கன் சாதனையை உடைத்துள்ள ரோஹித் சர்மா புதிய உலக சாதனை
படைத்துள்ளார். 2019 உலகக்கோப்பையில் இங்கிலாந்தின் கேடனாக இயன்
மோர்கன் 22 சிக்சர்கள் அடித்திருந்ததே முந்தைய சாதனையாகும்.
ரோஹித்தின்
சாதனையை 32 நாட்களில் உடைத்த ராகுல்
62 பந்துகளிலேயே 100
ஓட்டங்கள் தொட்ட ராகுல் உலகக் கிண்ண வரலாற்றில் அதிவேகமாக சதமடித்த இந்திய
வீரர் என்ற மாபெரும் வரலாற்றுச் சாதனையும் படைத்தார். இதற்கு முன் இதே உலகக்
கிண்ணத்தில் கடந்த ஒக்டோபர் 11ஆம் திகதி 32 நாட்களுக்கு முன்பாக தலைநகர்
டெல்லியில் நடைபெற்ற ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கப்டன் ரோஹித் சர்மா 63
பந்துகளில் சதமடித்திருந்ததே முந்தைய சாதனையாகும்.
உலகக்கிண்ண வரலாற்றில் 24 வருடங்கள் கழித்து சதமடித்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையும் அவர் படைத்தார். இவருக்கு முன் கடைசியாக கடந்த 1999 உலகக் கிண்ணத்தில் இலங்கைக்கு எதிராக ஜாம்பவான் மற்றும் தற்போது பயிற்சியாளர் ராகுல் டிராவிட் சதமடித்தார். அவுஸ்திராலியாவுக்கு எதிரான போட்டியில் தவற விட்ட சதத்தை ராகுல் இப்போது அடித்துள்ளார்.
பெங்களூருவை கோட்டையாக்கிய ரோஹித்
சின்னசாமி கிரிக்கெட்
மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட், ஒருநாள், ரி20 ஆகிய அனைத்து வகையான கிரிக்கெட்டிலும்
ரோஹித்சர்மா 32 சிக்சர்கள் அடித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு
குறிப்பிட்ட மைதானத்தில் அதிக சிக்சர்கள் அடித்த இந்திய வீரர் என்ற சச்சின்
டெண்டுல்கரின் வாழ்நாள் சாதனையை ரோஹித் சர்மா உடைத்துள்ளார். இதற்கு முன் சார்ஜா
மைதானத்தில் சச்சின் 30 சிக்சர்கள் அடித்திருந்ததே முந்தைய ஒரு சாதனையாகும்.
9 போட்டிகளில் 503 ஓட்டங்களை எடுத்துள்ளார். இதன் வாயிலாக உலகக் கிண்ண வரலாற்றில்
ஒரு குறிப்பிட்ட தொடரில் 500 ஓட்டங்கள் முதல் இந்திய கப்டன் என்ற சாதனையை ரோஹித்
சர்மா படைத்துள்ளார்.
உலகக்
கிண்ணத்தில் அதிக ஓட்டங்ன்கள் அடித்த இந்திய கப்டன் என்ற சௌரவ் கங்குலியின்
சாதனையை உடைத்துள்ள அவர் புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
1. ரோஹித் சர்மா
: 503* (2023)
2. சௌரவ் கங்குலி : 465
(2003)
3. விராட் கோலி : 443
(2019)
4. முகமது
அசாருதீன் : 332 (1992)
2019இல் 648 ஓட்டங்கள் அடித்த ரோஹித்இந்த உலகக் கிண்ணத்தில் கோப்பையில் 503 ஓட்டங்கள் எடுத்துள்ளார். உலகக் கிண்ண வரலாற்றில் அடுத்தடுத்த தொடர்களில் 500க்கும் மேற்பட்ட ஓட்டங்கள் அடித்த முதல் வீரர் என்ற மாபெரும் உலக சாதனை ரோகித் சர்மா படைத்துள்ளார்.
7 வருடங்களின்
பின் விக்கெற் வீழ்த்திய கிங் கோலி
இந்தப் போட்டியில்
3 ஓவர்கள் பந்து வீசிய விராட் கோலி 13 ஓட்டங்களைக் கொடுத்து ஒரு
விக்கெற்றை வீழ்த்தினார்.25வது ஓவரின் 3வது பந்தில் எட்வர்ட்ஸ் 17 ஓட்டங்களில்
கொடுத்த எட்ஜை கேஎல் ராகுல் கச்சிதமாக பிடித்ததால் ஆச்சரியமான விக்கெட்டை எடுத்து
ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தினார். குறிப்பாக பேட்ஸ்மேனாக ஒவ்வொரு
போட்டியிலும் ரன்கள் அடித்ததை மட்டுமே பார்த்து பழகிய ரசிகர்கள் விராட் கோலியின்
விக்கெட்டை வெறித்தனமாக கொண்டாடினார்கள்.கடந்த 2016 ஆம் ஆண்டு ரி20
உலகக் கிண்ண செமி ஃபைனலில் மேர்கு இந்திய வீரர் க ஜான்சன் சார்லஸ்
விக்கெட்டை விராட் கோலி எடுத்திருந்தார்.
சுப்மன்கில், சூரியகுமார் யாதவ் ஆகியோர் தலா இரண்டு ஓவர்கள் பந்து வீசினர். 47 ஆவது ஓவரை கப்டன் ரோஹித் வீசினார். 5ஆவது பந்திக் நெதர்லாந்தின் கடை விக்கெர் வீழ்ந்தது. தசைப் பிடிப்பு காரணமாக வேகப் பந்து வீட்டாளர் சிராஜ் வெளியேரியதால் துடுப்பாட்ட வீரர்கள் பந்து வீசினர்.
இந்தியாவின் 3 புதிய உலக சாதனைகள்
நெதர்லாந்துக்கு
எதிரான போட்டியில் இந்திய வீரர்கள் 16 சிக்சர்கள் அடித்தனர்.
2023 காலண்டர் வருடத்தில் இதுவரை இந்தியா ஒருநாள் கிரிக்கெட்டில் மொத்தம் 215*
சிக்ஸர்களை அடித்துள்ளது. ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு காலண்டர் வருடத்தில்
அதிக சிக்சர்கள் அடித்த அணி என்ற மேர்கு இந்தியாவின் சாதனையை
உடைத்துள்ள இந்தியா புதிய உலக சாதனை படைத்துள்ளது.
1. இந்தியா : 215
(2023)*
2. வெஸ்ட்
இண்டீஸ் : 209 (2019)
3. தென்
ஆப்பிரிக்கா : 203 (2023)*
4. நியூசிலாந்து : 179
(2019)
5. அவுஸ்திரேலியா
: 165 (2023)*
410 ஓட்டங்கள் அடித்த
இந்தியா 2023 காலண்டர் வருடத்தில் இதுவரை மொத்தம் 8 போட்டிகளில் 350க்கும்
மேற்பட்ட ஓட்டங்களை குவித்துள்ளது. இ ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு காலண்டர்
வருடத்தில் அதிக முறை 350+ ஓட்டங்களை அடித்த அணி என்ற இங்கிலாந்தின் சாதனையையும்
உடைத்துள்ள இந்தியா புதிய உலக சாதனை படைத்துள்ளது. இதற்கு முன் 2019ஆம் ஆண்டு
இங்கிலாந்து 7 முறை 350+ ஓட்டங்கள் அடித்திருந்ததே முந்தைய சாதனையாகும்.
இப்போட்டியில் 160 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா இதற்கு முந்தைய 2 போட்டிகளில் தென்னாப்பிரிக்காவை 243 ஓட்டங்களாலும், இலங்கையை 243 ஓட்டங்களாலும் வென்றது. ஒருநாள் கிரிக்கெட்டில் 3 தொடர்ச்சியான போட்டிகளில் 150க்கும் மேற்பட்ட ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்ற முதல் அணி என்ற தனித்துவ உலக சாதனையையும் இந்தியா படைத்துள்ளது.
டோனி – ரெய்னா ஜோடியை முந்திய ஸ்ரேயாஸ் – ராகுல்
ஜோடி
ஸ்ரேயாஸ் ஐயர் – கேஎல்
ராகுல் ஜோடி 4வது விக்கெட்டில் 208 ஓட்டங்கள் அடித்தது.
உலகக் கிண்ண வரலாற்றில் ஒரு போட்டியில் 4வது விக்கெட்டுக்கு அதிகஓட்டங்கள்
அடித்த ஜோடி என்ற உலக சாதனை படைத்தது. இதற்கு முன் இதே நெதர்லாந்துக்கு
எதிராக 2007 உலகக் கிண்ணத்தில் அவுஸ்திரேலியாவின் மைக்கேல் கிளார்க் ,ப்ராட்
ஹோட்ஜ் ஆகியோர் 204ஓட்டங்கள் குவித்திருந்ததே முந்தைய சாதனையாகும்.
208ஓட்டங்களை
9.82 என்ற ரன் ரேட்டில் குவித்த இந்த ஜோடி உலகக்கோப்பை வரலாற்றில் ஒரு போட்டியில் எந்த
ஒரு விக்கெட்டுக்கும் அதிக ரன்ரேட்டில் இரட்டை சத பார்ட்னர்ஷிப் அமைத்த ஜோடி என்ற
தென்னாப்பிரிக்காவின் டேவிட் மில்லர் – ஜேபி டுமினி சாதனையை உடைத்து புதிய உலக
சாதனை படைத்தது.
1. ஸ்ரேயாஸ் ஐயர் –
கேஎல் ராகுல் : 9.82, நெதர்லாந்துக்கு எதிராக, 2023*
2. ஜேபி டுமினி –
டேவிட் மில்லர் : 8.62, Zஇம்பாப்வே அணிக்கு எதிராக, 2015
3. விராட் கோலி –
வீரேந்திர சேவாக் : 8.40, பங்களாதேஷுக்கு எதிராக, 2011
உலககிண்ணத்தில் 4வது அல்லது அதற்கு கீழான விக்கெட்டுக்கு இரட்டை சதம் அடித்த முதல் இந்திய ஜோடி என்ற சாதனையும் அவர்கள் படைத்தனர். இதற்கு முன் கடந்த 2015 உலகக் கிண்ணத்தில் ஸ்ம்பாப்வே அணிக்கு எதிராக எம்எஸ் டோனி, சுரேஷ் ரெய்னா ஆகியோர் 5வது விக்கெட்டுக்கு 196* ஓட்டங்கள் முந்தைய சாதனையாகும்
27 வருட சாதனையை சுழலால் உடைத்த ஜடேஜா
ரவீந்திர ஜடேஜா 9
ஓவரில் 49 ஓட்டங்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். குறிப்பாக இந்த
உலகக் கோப்பையில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியிலேயே அசத்திய அவர் இதுவரை
9 போட்டிகளில் மொத்தம் 16 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இதன் வாயிலாக உலகக்கோப்பை
வரலாற்றில் ஒரு தொடரில் அதிக விக்கெட்டுகளை எடுத்த இந்திய ஸ்பின்னர் என்ற
ஜாம்பவான் அனில் கும்ப்ளேவின் 27 வருட மற்றும் யுவராஜ் சிங்கின் 12 வருட சாதனையை
உடைத்துள்ள அவர் புதிய வரலாறு படைத்துள்ளார்.
1. ரவீந்திர
ஜடேஜா : 16* (2023)
2. அனில்
கும்ப்ளே :
15 (1996) 2. யுவராஜ்
சிங் : 15 (2011)
3. குல்தீப்
யாதவ் : 14 (2023)*
3. மணிந்தர் சிங் : 14 (1987) -
No comments:
Post a Comment