Monday, March 20, 2023

மகளிர் உலகக் கிண்ண பரிசுத் தொகை அதிகரிப்பு

2023ம் ஆண்டுக்கான பீபா பெண்கள் உலகக்  கிண்ணஉதைபந்தாட்டப்    போட்டிகள் அவுஸ்திரேலியாவிலும், நியூஸிலாந்திலும்  ஜூலை மாதம் முதல் நடக்கிறது. இந்த தொடரில் மொத்தம் 32 அணிகள் களமாடுகின்றன. இந்நிலையில், இந்த தொடருக்கான பரிசுத் தொகை 300% அதிகரித்து உள்ளது. அதாவது  150 மில்லியன் அமெரிக்க டாலர் அன அறிவிப்பப்பட்டுள்ளது.  இது கடந்த 2015ல் இருந்ததை விட 10 மடங்கு அதிகமாகும்.

 நடப்பு சம்பியனான அமெரிக்கா, கனடா, பிரான்ஸ் ,ஸ்பெயின் உள்ளிட்ட உலகெங்கிலும் உள்ள உதைபந்தாட்ட‌ வீராங்கனைகள்,   ஆடவ தேசிய அணிகளுடன் சம ஊதியம் மற்றும் சம மரியாதைக்காக போராடி வருகின்றனர்.

 2026 ,2027 ஆம் ஆண்டு முறையே, அடுத்த உலகக் கிண்ணப் போட்டிகளின் போது ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமான பரிசுத் தொகையை இருக்கும் என்று பீபா தலைவர் கியானி இன்ஃபான்டினோ கூறியுள்ளார். கடந்த ஆண்டு கடாரில் நடந்த உலகக் கிண்ணப் போட்டியில் 32   அணிகள் பங்கேற்றன  சுமார் 440 மில்லியன் அமெரிக்க டாலர்  பரிசுத்தொகையாகவழங்கப்பட்டது.


No comments: