சாதனை வீரர் சஞ்சு சாம்சன்
சஞ்சு
சாம்சனின் தலைமையில்
அசத்தி வரும் ராஜஸ்தான் கிட்டதட்ட பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்துள்ளது என்றே சொல்லலாம். மேலும் இந்த வருடம் இதுவரை விளையாடிய 11 போட்டியில் 471* ஓட்டங்கள் குவித்துள்ள சஞ்சு சாம்சன் அதிக ஓட்டங் கள் அடித்த வீரர்களின் பட்டியலில் 3வது இடத்தை பிடித்து ஆரஞ்சு தொப்பியை வெல்ல போட்டியிட்டு வருகிறார். மே 7ஆம் திகதி டெல்லிக்கு
எதிராக நடைபெற்ற போட்டியில் 222 ஓட்டங்களை துரத்திய ராஜஸ்தானுக்கு தனி ஒருவனாக 86 (46) ஓட்டங்கள் குவித்த அவர் முழுமூச்சுடன் வெற்றிக்கு போராடினார். அந்தப் போட்டியில் 6 சிக்ஸர்களை அடித்த சஞ்சு சாம்சன் இதுவரை தனது ஐபிஎல் கேரியரில் 159 இன்னிங்ஸில் 205* சிக்சர்கள் அடித்துள்ளார். இதன் வாயிலாக ஐபிஎல் தொடரில் அதிவேகமாக 200 சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர் என்ற ஜாம்பவான் எம்எஸ் டோனியின் சாதனையை உடைத்துள்ள அவர் புதிய சாதனை படைத்துள்ளார்.
எம்.எஸ். டோனி, 165 இன்னிங்ஸில் 200 சிக்ஸர்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும். அதே பட்டியலில் விராட் கோலி 180, ரோஹித் சர்மா 185, சுரேஷ் ரெய்னா 193 இன்னிங்ஸில் 200 சிக்ஸர்கள் அடித்து அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். மேலும் டெல்லிக்கு எதிரான போட்டியும் சேர்த்து ராஜஸ்தான் அணிக்கு இதுவரை சஞ்சு சாம்சன் 56 போட்டிகளில் கப்டனாக செயல்பட்டுள்ளார். ராஜஸ்தான் அணிக்காக அதிக போட்டிகளில் கப்டனாக செயல்பட்ட வீரர் என்ற ஜாம்பவான் ஷேன் வார்னே சாதனையை உடைத்துள்ள அவர் புதிய சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் வார்னே 55 போட்டிகளில் ராஜஸ்தானின் கப்டனாக செயல்பட்டதே முந்தைய சாதனையாகும்.
டெல்லி, சென்னையை மிஞ்சி
ஹைதராபாத் சாதனை
லக்னோவுக்கு
எதிரான போட்டியில் ஹைதராபாத் 10 விக்கெட்களினால் வெற்றி பெற்றது. முதலில்
துடுப்பெடுத்தாடிய லக்னோ 20 ஓவர்களில் 4 விகெற்களை இழந்து 165 ஓட்டங்கள்
எடுத்தது. ஹைதராபாத் விக்கெற் இழப்பு இன்றி 167 ஓட்டங்கள் அடித்து வெற்றி பெற்றது.
அபிஷேக்
ஷர்மா 8 பவுண்டரி 6 சிக்ஸருடன் 75* (28) ஓட்டங்கள் குவித்தார். டிராவிஸ்
ஹெட் 8 பவுண்டரி 8 சிக்சருடன் 89* (30) ஓட்டங் கள் குவித்தார். அதனால் 45 நிமுடங்களில்
9.4 ஓவரிலேயே 167 ஓட்டங்கள் எடுத்த லக்னோ மிகவும் எளிதாக வெற்றி பெற்றது. ஐபிஎல்
வரலாற்றில் 150+ இலக்கை அதிவேகமாக வெற்றிகரமாக சேசிங் செய்த அணி என்ற புதிய
வரலாறு படைத்துள்ளது
2008ஆம் ஆண்டு
மும்பை அணிக்கு எதிராக 155 ஓட்டங்கள் இலக்கை டெக்கான் சார்ஜர்ஸ் அணி 12 ஓவரில் சேசிங் செய்ததே முந்தைய சாதனையாகும். இந்த
வருடம் முழுவதுமே எதிரணிகளை கருணையின்றி அடித்து நொறுக்கி வரும் ஹைதராபாத் அணி மொத்தமாக 146* சிக்சர்கள் பறக்க விட்டுள்ளது. ஐபிஎல்
வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட தொடரில் அதிக சிக்சர்கள் அடித்த அணி என்ற சென்னையின் சாதனையை உடைத்துள்ள ஹைதராபாத் புதிய சாதனை படைத்துள்ளது.
2018 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 145 சிக்சர்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும். இது போக 9.4 ஓவரிலேயே 167/0 ஓடங்கள் எடுத்த ஹைதராபாத் ஐபிஎல் வரலாற்றில் ஒரு போட்டியில் 10 ஓவரின் முடிவில் அதிகபட்ச ஓட்டங் அடித்த அணி என்ற தங்களுடைய சொந்த சாதனையை உடைத்தது. இதற்கு முன் இதே சீசனில் டெல்லிக்கு எதிராக முதல் 10 ஓவரில் ஹைதராபாத் 158/4 ஓட்டங்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும்.
No comments:
Post a Comment