ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் முதலில் மும்பை துடுப்பெடுத்தாடியது.முதல் ஓவரை போல்ட் வீசினார். இந்த ஓவரின் முதல் 4 பந்துகளை இஷான் கிஷன் எதிர்கொண்டு ஒரு ரன்னை ஓட்டம் எடுத்தார். இதன்பின் 5வது பந்தை எதிர்கொண்ண ரோஹித் சர்மா டக் அவுட்டில் ஆட்டமிழந்தார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அதிக முறை டக் அவுட்டான வீரர்கள் பட்டியலில் ரோகித் சர்மா 17 முறை டக் அவுட்டாகி முதலிடத்தை பிடித்துள்ளார். இவருடன் ஆர்சிபி அணியின் அனுபவ வீரர் தினேஷ் கார்த்திக்கும் 17 முறை டக் அவுட்டாகி முதலிடத்தை பகிர்ந்துகொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து 2வது இடத்தில் 15 முறை டக் அவுட்டாகி மேக்ஸ்வெல், பியூஷ் சாவ்லா, மன்தீப் சிங் மற்றும் சுனில் நரைன் ஆகியோர் உள்ளனர்.
இடது கை வேகப்பந்து வீச்சாளர்கள் வீசும் யாக்கர்களை எதிர்கொள்வதுரோஹித் சர்மாவுக்கு சிரமமாக உள்ளது. ஷாகின் சா அப்ரிடி, டிரண்ட் போல்ட், மிட்செல் மார்ஷ் என அதிவேக இடதுகை வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொண்டாலே ரோகித் சர்மா ஆட்டம் இழந்து வருகிறார்.
போல்ட்டிடம் ரோகித் சர்மா ஆட்டம் இழப்பது இது இரண்டாவது முறையாகும். மொத்தம் பவுல்ட்டிடம் 20 பந்துகளை ஐபிஎல் தொடரில் ரோஹித் சர்மா எதிர்கொண்டு இருக்கிறார். இதில் அவர் 17 ஓட்டங்களை மட்டுமே எடுத்து இரண்டு முறை ஆட்டம் இழந்திருக்கிறார்.
No comments:
Post a Comment