Tuesday, January 16, 2024

ரோஹித் சர்மாவின் சாதனையும் வேதனையும்

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான  இரண்டாவதிடி20 போட்டியில் களமிறங்கிய இந்திய கேப்டன் ரோஹித் சர்மா சர்வதேச ரி20 கிரிக்கெட்டில் 150 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற மாபெரும் உலக சாதனை படைத்தார். அவருக்கு அடுத்தபடியாக அயர்லாந்து வீரர் பால் ஸ்டெர்லிங் 134 போட்டிகளில் விளையாடி அந்த பட்டியலில் 2வது இடத்தில் இருக்கிறார்.இருப்பினும் அதில் டக் அவுட்டான அவர் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்த போதிலும் கப்டனாக அணியை சிறப்பாக வழி நடத்தி வெற்றியில் தன்னுடைய பங்காற்றினார்.

இந்த வெற்றியையும் சேர்த்து ரோஹித் சர்மா கப்டனாக இதுவரை 41 வெற்றிகளை பெற்றுள்ளார்.   சர்வதேச ரி20 கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளை பதிவு செய்த இந்திய கப்டன் என்ற எம்எஸ் டோனியின் வாழ்நாள் சாதனையை ரோஹித் சர்மா சமன் செய்துள்ளார். இதற்கு முன் 72 போட்டிகளில் டோனி 41 வெற்றிகளை பெற்றிருந்த நிலையில் தற்போது ரோகித் சர்மா 53 போட்டிகளிலேயே 41* வெற்றிகளை பதிவு செய்து அந்த சாதனையை சமன் செய்துள்ளார்.

 ரோஹித் சர்மா 12 தொடர்களில் கப்டனாக வெற்றியை பதிவு செய்துள்ளார். சர்வதேச ரி20 கிரிக்கெட்டில் அதிக தொடர்களை வென்ற கப்டன் என்ற புதிய சாதனையும் அவர் படைத்துள்ளார்

சர்வதேச ரி20 கிரிக்கெட்டில் அதிக முறை டக் அவுட்டான 2வது வீரர் என்ற பரிதாபமான சாதனையை சமன் செய்துள்ளார். அத்துடன் சர்வதேச ரி20 கிரிக்கெட்டில் அதிக முறை டக் அவுட்டான ஆசிய வீரர் என்ற பங்களாதேஸ் வீரர் சௌமியா சர்க்கார் சாதனையை உடைத்துள்ள ரோஹித் சர்மா மற்றுமொரு மோசமான சாதனையை படைத்துள்ளார். 

  1. பால் ஸ்டெர்லிங் (அயர்லாந்து) : 13

 2. ரோகித் சர்மா (இந்தியா) : 12*

 3. கெவின் ஓ’ப்ராயன் (அயர்லாந்து) : 12

 4. சௌமியா சர்க்கார் (பங்களாதேஷ்) : 11

 5. ரிகிஸ் சக்கப்வா (ஜிம்பாப்பே) : 11

No comments: