இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ரி20 போட்டியில்
கோலியின் சாதனையை முறியடித்தார் ரோஹித்
சர்மா
சவுத்தாம்ப்டன்
ஏஜியஸ் பவுலில்ல் நடைபெற்ற முதல் ரி20 போட்டியில்
இந்திய அணி இங்கிலாந்தை 50 ஓட்டங்கள்
வித்தியாசத்தில் வீழ்த்தி மிகப்பெரிய வெற்றியைப் பெற்று தொடரில் 1-0 என்று
முன்னிலை பெற்றது, இதில் ரோஹித் சர்மா
24 ஓட்டங்கள் எடுத்ததில் விராட் கோலியின் பெருமைக்குரிய
சாதனையை உடைத்தார்.
விராட்
கோலி, வெகு விரைவில் ரி20
சர்வதேச போட்டிகளில் 1,000 ஓட்டங்களை எடுத்த கேப்டனாக இருந்தார்,
அதாவது கோலி 30 இன்னிங்ஸ்களில் 1000 ஓட்டங்கள்
மைல்கல்லை எட்டி சாதனை புரிந்தார்.
ஆனால்
இவர் சாதனையை பாகிஸ்தான் கப்டன்
பாபர் அஸாம் முறியடித்தார், பாபர்
அஸாம் 24 இன்னிங்ஸ்களில் 1000 ரி20 ஓட்டங்களை எடுத்து
கோலியை கடந்தார்.
இப்போது இந்திய சாதனையாக இருந்த விராட் கோலியின் விரைவு ரி20 1000 ஓட்டங்களை தன் 29வது இன்னிங்ஸில் கடந்து ரோஹித் சர்மா சாதனை புரிந்தார்.
No comments:
Post a Comment