Tuesday, February 22, 2011

210 ஓட்டங்களால் வென்றது இலங்கை

அம்பாந்தோட்டை மஹிந்தராஜபக்ஷ மைதானத்தில் கனடா இலங்கை ஆகியவற்றுக்கிடையே நடைபெற்ற உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை 210 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பெடுத்தாடி 50 ஓவர்களில் ஏழு விக்கட்டுகளை இழந்து 332 ஓட்டங்கள் எடுத்தது.
தரங்க, டில்சான் ஆகியோர் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களாகக் களமிறக்கினர். 19 ஓட்டங்களை எடுத்த தரங்க ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். டில்ஷானுடன் சங்கக்கார ஜோடி சேர்ந்தார்.
டில்ஷான் 50 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். சங்கக்கார மஹேல ஜோடி நிதானமாக விளையாடியது. சங்கக்கார, மஹேல ஜோடி மூன்றாவது இணைப்பாட்டத்தில் 187 ஓட்டங்களை அடித்தது. சங்கக்கார சதமடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த வேளையில் டேவிசன் வீசிய பந்தை அவரிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். 87 பந்துகளுக்கு முகம் கொடுத்த சங்கக்கார ஒரு சிக்சர், ஏழு பவுண்டரிகள் அடங்கலாக 92 ஓட்டங்களை அடித்தார்.
மஹேல 100 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். 81 பந்துகளுக்கு முகம் கொடுத்த மஹேல ஒரு சிக்சர் ஒன்பது பவுண்டரிகள் அடங்களாக 100 ஓட்டங்கள் எடுத்தார். அடுத்து வந்த இலங்கை வீரர்கள் சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர். பெரேரா 11 கபுகெதர 02, மத்தியூஸ் 21 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். 50 ஓவர்கள் முடிவின் போது இலங்கை அணி ஏழு விக்கெட்டுகளை இழந்து 332 ஓட்டங்களை எடுத்தது. சமரவீர ஆட்டமிழக்காது 18 ஓட்டங்களும், குலசேகர ஆட்டமிழக்காது ஏழு ஓட்டங்களும் எடுத்தனர்.
கனடாவுக்கு எதிராக இலங்கை 332 ஓட்டங்கள் எடுத்தது. என்றாலும், 7 விக்கெட் டுகளை இழந்தது ஆரோக்கியமானதல்ல.
டேவிசன், பைட்வான் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் ரிஸ்வான் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
333 என்ற பிரமாண்டமான இலக்கை நோக்கிக் களமிறங்கிய கனடா 36.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 122 ஓட்டங்கள் எடுத்து தோல்வியடைந்தது. குணசேகர, டேவிசன் ஆகியோர் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கினர். குலசேகரவின் பந்தை டில்ஷானிடம் பிடிகொடுத்த குணசேகர ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார்.
டேவிசன் ஓட்டமெதுவும் எடுக்காது பெரேராவின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த வீரர்கள் ஒற்றை இலக்கங்களில் வெளியேற பாகியும், ரிஸ்வானும் போராடினார்கள். 35 பந்துகளை சந்தித்த ரிஸ்வான் இரண்டு சிக்ஸர், நான்கு பவுண்டரிகள் அடங்கலாக 37 ஓட்டங்களை எடுத்தார். பாகி 22 ஓட்டங்கள் எடுத்தார். அடுத்து வந்த வீரர்களும் ஒற்றை இலக்கத்துடன் வெளயேறினர். 36.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து கனடா தோல்வியடைந்தது. பைட்வான் ஆட்டமிழக்காது 18 ஓட்டங்கள் எடுத்தார்.
குலசேகர, பெரேரா ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளையும் முரளிதரன் இரண்டு விக்கெட்டுகளையும் மெண்டிஸ் சமரவீர ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
ஆட்டநாயகனாக மஹேல தெரிவு செய்யப்பட்டார்.
ரமணி
சூரன்.ஏ.ரவிவர்மாமெட்ரோநியூஸ்

2 comments:

மதுரை சரவணன் said...

நல்ல வெற்றி.. பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

வர்மா said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்நன்றி
அன்புடன்
வர்மா