Sunday, February 27, 2011

வீழ்ந்தது நியூஸிலாந்து


நியூஸிலாந்து, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையே நாக்பூரில் நடைபெற்ற உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியா ஏழு விக்கெட்களினால் வெற்றி பெற்றது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா களத்தடுப்பைத் தேர்வு செய்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து 45.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 206 ஓட்டங்கள் எடுத்தது. முன்னணித் துடுப்பாட்ட வீரர்கள் அனைவரும் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். மக்கலம் 52 ஓட்டங்களும் அணித்தலைவர் வெட்டோரி 44 ஓட்டங்களும் எடுத்தனர். அவுஸ்திரேலிய வீரர்கள் உதிரிகளாக 24 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தனர். 9.1 ஓவர்கள் பந்து வீசிய ஜோன்சன் 33 ஓட்டங்களைக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவர் 3 ஓவரை ஓட்டமற்ற ஓவராக வீசினார்.
வைட் மூன்று விக்கெட்டுக்களையும், பாட்லீ, வட்சன், ஸ்மித் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
20??? என்ற இலகுவான இலக்குடன் களமிறங்கிய அவுஸ்திரேலியா 34 ஓவர்களில் மூன்று விக்கெட்டுக்களை இழந்து வெற்றி பெற்றது. வட்சன் 62, ஹடின் 55, பொண்டிங் 12 ஓட்டங்கள் எடுத்தனர். மைக்கல் கிளாக் ஆட்டமிழக்காது 24 ஓட்டங்களும், வைட் ஆட்டமிழக்காது 22 ஓட்டங்களும் எடுத்தனர். நியூஸிலாந்து வீரர்கள் 32 உதிரிகளை விட்டுக் கொடுத்தனர். பெனட் இரண்டு விக்கெட்டுக்களையும், கௌரி இரு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர். ஆட்ட நாயனாக வட்சன் தேர்வு செய்யப்பட்டார்.
ரமணி
சூரன்.ஏ.ரவிவர்மா
மெட்ரோநியூஸ்

No comments: