அவுஸ்திரேலியா சிம்பாப்வே ஆகியவற்றுக்கிடையே அஹமதாபாத்தில் நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கட் போட்டியில் அவுஸ்திரேலியா 91 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா 50 ஓவர்களில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 262 ஓட்டங்கள் எடுத்தது.
சிம்பாப்வே வீரர்களின் துல்லியமான பந்து வீச்சும் மிகச் சிறந்த களத்தடுப்பும் அவுஸ்திரேலிய வீரர்களின் ஓட்ட எண்ணிக்கையை மட்டுப்படுத்தியது. வட்சன், ஹெடின், பொண்டிங் ஆகியோர் கூடுதலான பந்து வீச்சுக்கு முகம் கொடுத்து குறைந்த ஓட்டங்களையே பெற்றனர்.
வட்சனும் ஹெடினும் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாகக் களமிறங்கினர். சிம்பாப்வே வீரர்களின் பந்து வீச்சைச் சமாளிக்க முடியாத அவுஸ்ரேலிய வீரர்கள் சிம்பாப்வேயைத் தடுத்தாடினார்கள். 85 பந்துகளில் 50 ஓட்டங்களை எடுத்தது அவுஸ்திரேலியா. ஹெடின் 29 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். 29 பந்துகளைச் சந்தித்த ஹெடின் மூன்று பவுண்டரிகள் அடங்கலாக 66 ஓட்டங்கள் எடுத்தார்.
வட்சனுடன் ஜோடி சேர்ந்தார் அணித் தலைவர் பொண்டிங். இதற்கு ஜோடியாலும் அதிரடியை வெளிப்படுத்த முடியவில்லை. 18.5 ஆவது ஓவரில் ஹடின் ஆட்டமிழந்தார். பொட்சன் பொண்டிங் ஜோடி 31.2 ஓவர்கள் வரை களத்தில் நின்று இணைப்பாட்டமாக 79 ஓட்டங்களையே சேர்த்தது. சிம்பாப்வே வீரர்களின் பந்து வீச்சும் களத்தடுப்பும் அவுஸ்திரேலிய வீரர்களைக் கட்டுப்படுத்தியது.
92 பந்துகளுக்கு முகம் கொடுத்த வட்சன் எட்டு பவுண்டரிகள் ஒரு சிச்சர் அடங்கலாய் 79 ஓட்டங்கள் எடுத்தார். பவுண்டரி எல்லையில் இருந்து மா<ஃபு வீசிய பந்து நேரடியாக விக்கெட்டில் பட்டதால் பொண்டிங் ரன் அவுட் முறையில் ஆட்டம் இழந்தார். 36 பந்துக்களுக்கு முகம் கொடுத்த பொண்டிங் 28 ஓட்டங்கள் எடுத்தார். மைக்கல் கிளார்க் கமருன் வைட் ஜோடி ஓட்ட எண்ணிக்கையை உயர்த்த முயற்சி செய்தது. 36 பந்துகளைச் சந்தித்த கமருன் வைட் 22 ஓட்டங்களில் ஆட்டமிழந்ததை அடுத்து களமிறங்கிய டேவிட் ஹஸி, ஸ்டீவ் ஸ்மீத், மிட்சல் ஜோன்சன் ஆகியோரின் அதிரடியில் அவுஸ்திரேலியாவின் ஓட்ட எண்ணிக்கை உயர்ந்தது. எட்டுப் பந்துகளுக்கு முகம் கொடுத்த டேவிட் ஹசி ஒரு சிக்சர் ஒரு பவுண்டரி அடங்கலாக 14 ஓட்டங்ககளை எடுத்தார். 4 பந்துகளைச் சந்தித்த ஸ்டீவ் ஸ்மீத் ஒரு சிக்சர் ஒரு பவுண்டரி அடங்கலாக 11 ஓட்டங்கள் எடுத்தார். 50 ஓவர்கள் முடிவில் அவுஸ்திரேலியா ஆறு விக்கெட்டுகளை இழந்து 262 ஓட்டங்கள் எடுத்தது. மைக்கல் கிளார்க் ஆட்டமிழக்காது 58 ஓட்டங்கள் எடுத்தார். 55 பந்துகளைச் சந்தித்த இவர் நான்கு பவுண்டரிகள் அடங்கலாக 58 ஓட்டங்கள் எடுத்தார். மூன்று பந்துகளுக்கு முகம் கொடுத்த மிச்சல் ஜோன்சன் ஆட்டமிழக்காது ஏழு ஓட்டங்கள் எடுத்தார். முதலில் துடுப்பெடுத்தாடி அதிக ஓட்டங்களைக் குவித்து சிம்பாப்வேக்கு நெருக்கடியைக் கொடுக்கலாம் என்று பொண்டிங் எதிர்பார்த்தார். ஆனால், சிம்பாவேயின் பந்து வீச்சிலும் களத்தடுப்பிலும் சிக்கிய அவுஸ்திரேலியா மிகச் சிரமப்பட்டு 262 ஓட்டங்கள் எடுத்தது. சிம்பாப்வே வீரரான பிரொஸ்மர் உட்சயா அவுஸ்திரேலிய வீரர்களை மிரட்டினார். இவர் 10 ஓவர்கள் பந்து வீசி 43 ஓட்டங்களைக் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இவரது இரண்டு ஓவர்களில் அவுஸ்திரேலிய வீரர்கள் ஓட்டம் எதுவும் எடுக்கவில்லை. மா<ஃபு இரண்டு விக்கெட்டுகளையும் பிரைஸ், கிரெமர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 263 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய சிம்பாப்வே 46.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 171 ஓட்டங்கள் எடுத்தது. கௌவென்ட்ரி, பிரண்டன் டெய்லர் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாகக் களமிறங்கினர். பிரட் லீயின் பந்தில் ஒரு சிக்ஸர், ஒரு பௌண்டரி அடித்த கொலென்ட்ரி அவரிடமே பிடி கொடுத்து 14 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். பிரண்டன் ரெய்லர் 16 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அவுஸ்திரேலிய பந்து வீச்சில் சிக்கிய சிம்பாப்வே 12.3 ஓவர்களில் நான்கு விக்கட்டுகளை இழந்து 44 ஓட்டங்கள் எடுத்தது. சிகும்பு, வில்லியம் இணைந்து சிறிது நேரம் போராடினர். இவர்கள் இருவரும் இணைந்து 44 ஓட்டங்கள் எடுத்தனர். சிகும்புரா 14, வில்லியம்ஸ் 28, சகாப்வா ஆறு ஓட்டங்களில் ஆட்டமிழக்க சிம்பாப்வே தடுமாறியது. அடுத்து வந்த உட்சயர், கிரெமர் ஆகியோர் போராடினர். உட்சயா 24, கிரெமர் 37 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். 46.2 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்த சிம்பாப்வே 171 ஓட்டங்கள் எடுத்து 91 ஓட்டங்களினால் தோல்வியடைந்தது. ஜோன்ஸன் நான்கு விக்கட்டுகளையும் கிரெய்ஜா, டெய்ட் ஆகியோர் தலா இரண்டு விக்கட்டுகளையும் பிரட் லீ ஒரு விக்கட்டையும் வீழ்த்தினர். வட்சன் ஆட்டநாயகனாகத் தெரிவு செய்யப்பட்டார். 2003, 07 உலகக் கிண்ணத் தொடரில் பொண்டிங் தலைமையில் பங்குபற்றிய அவுஸ்திரேலிய இப்போட்டியின் மூலம் 23 ஆவது வெற்றியைப் பதிவு செய்தது. உலகக் கிண் ணக் கிரிக்öகட் போட்டியில் விளையாடியவர்களின் வரிசையில் பொண்டிங் முதலிடம் பிடிக்கப் பொண்டிங் 40 போட்டிகளில் விளையாடியுள்ளõர். இரண்டாவது இடத்தில் மக்ராத் உள்ளார். இவர் 39 போட்டிகளில் விளையாடினார். ரன்அவுட் முறையில் ஆட்டமிழந்த அவுஸ்திரேலியர் பொண்டிங் இரண்டாவது இடத்தில் உள்ளார். இவர் 30 போட்டிகளில் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்துள்ளார். 32 போட்டிகளில் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்த மாக்வோ முதலிடத்தில் உள்ளார். அவுஸ்திரேலியா, சிம்பாப்வே அணிகள் இதுவரை 27 போட்டிகளில் மோதியுள்ளன. அவுஸ்திரேலிய 26 போட்டிகளிலும் சிம்பாப்வே ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றன. உலகக் கிண்ணத் தொடரில் இரண்டு அணிகளும் ஒன்பது போட்டிகளில் சந்தித்த அவுஸ்திரேலியா எட்டுப் போட்டிகளிலும் சிம்பாப்வே ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றன. ரமணி சூரன்.ஏ.ரவிவர்மா மெட்ரோநியூஸ்
No comments:
Post a Comment