Sunday, February 27, 2011

அசத்தினார் அறிமுக வீரர்

தென் ஆபிரிக்கா, மே. இந்திய தீவுகளுக்கிடையே டில்லி பெரோஷாகோட்வா மைதானத்தில் நடந்த உலகக் கிண்ணப் போட்டியில் தென் ஆபிரிக்கா ஏழு விக்கெட்களினால் வெற்றி பெற்றது. தென் ஆபிரிக்கா வீரர்டிவில்லியஸின் அறிமுக வீரரான இம்ரான் தாஹிரின் சுழலும் தென் ஆபிரிக்காவின் வெற்றிக்கு உதவின.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற தென் ஆபிரிக்கா களத்தடுப்பை தேர்வு செய்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய மே.இந்தியத்தீவுகள் 47.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 222 ஓட்டங்கள் எடுத்தது. ஆரம்ப துடுப்பாட்ட வீரரான கைல்ஸ் போத்தாவின் பந்தை கலிஸிடம் பிடிகொடுத்து இரணடு ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். மே.இந்தியத்தீவுகள் வீரர்களின் பல வீனத்தை அறிந்த தென். ஆபிரிக்க அணித் தலைவர் சுழல்பந்து வீச்சுடன் ஆட்டத்தை ஆரம்பித்தார். முதல் ஓவரிலேயே கைல்ஸ் ஆட்டமிழந்தது மே.இந்தியத்தீவுகளுக்குப் பாதகமாக அமைந்தது.
டேவிட் ஸ்மித்துடன் அடுத்த லாரா என வர்ணிக்கப்படும் டென்பிராவோ ஜோடி சேர்ந்தார். இவர்கள் இருவரும் இணைந்து 111 ஓட்டங்கள் எடுத்தனர். போத்தாவின் வலையில் விழுந்த டெரன்பிராவோ 73 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். கம்ரான் தாஹிரின் சுழலில் சிக்கிய டேவன்ஸ்மித் 36 ஓட்டங்களிலும் சர்வானி இரண்டு ஓட்டங்களிலும் வெளியேறினர். 26.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 120 ஓட்டங்கள் எடுத்த போது களமிறங்கியடுவைன் பிராவோ மிரட்டினார். 30 பந்துகளில் 40 ஓட்டங்கள் எடுத்த டுவைன் பிராவோ ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். சந்த‌போல் 31 ஓட்டங்களிலும், தோமஸ் 15 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். பொலட்,சமி,பென் ஆகியோர் ஸ்டைனின் பந்து வீச்சில் வந்த வேகத்திலேயே வெளியேறினர். 47.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்த மே.இந்தியத் தீவுகள் 222 ஓட்டங்கள் எடுத்தது.
ஒரு ஓட்டமற்ற ஓவர் உட்பட 10 ஓவர்கள் பந்து வீசிய இம்ரான் தாஹிர் 41 ஓட்டங்களைக் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஸ்டெய்ன் மூன்று விக்கெட்டுகளையும், போத்தா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
223 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய தென் ஆபிரிக்கா 42.5 ஓவர்களில் மூன்று விக்கெட்டுக்களை இழந்து 223 ஓட்டங்களை எடுத்து ஏழு விக்கெட்டுக்களினால் வெற்றி பெற்றது.
அம்லா 14 ஓட்டங்களிலும், கலிஸ் நான்கு ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். இரண்டு விக்கெட்டுகளை இழந்து 20 ஓட்டங்கள் எடுத்த போது அணித் தலைவர் ஸ்மித்துடன் ஜோடி சேர்ந்தார். டிவில்லியஸ் இவர்கள் இருவரும் இணைந்து 119 ஓட்டங்கள் எடுத்தனர். ஸ்மித் 45 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். டிவிலியஸ், டுமினி ஜோடி தென் ஆபிரிக்காவுக்கு வெற்றியைத் தேடிக் கொடுத்தது. 97 பந்துகளுக்கு முகம் கொடுத்த டிவிலியஸ் இரண்டு சிக்சர், ஆறு பவுண்டரிகள் அடங்கலாக தனது 10 ஆவது சதத்தை அடித்தார். டிவிலியஸ் ஆட்டமிழக்காது 107 ஓட்டங்களையும் டுமினி ஆட்டமிழக்காது 42 ஓட்டங்களையும் அடித்தனர். ஆட்டநாயகனாக டிவிலியஸ் தெரிவு செய்யப்பட்டார்.
2009 ஆம் ஆண்டு டில்லி மைதானத்தில் இந்திய இலங்கை அணிகளுக்கிடையே நடைபெற்ற போட்டி மோசமான ஆடுகளம் காரணமாக கைவிடப்பட்டது. ஒரு வருடத் தடை விதிக்கப்பட்ட இம் மைதானம் தடையிலிருந்து மீண்டும் சிறந்த முறையில் போட்டியை நடத்தியுள்ளது
.ரமணி
சூரன்.ஏ.ரவிவர்மா
மெட்ரோநியூஸ்

No comments: