ஜேர்மனியில் நடைபெறும் மகளிர் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் ஜப்பான், இங்கிலாந்து ஆகியன வெற்றி பெற்றன.
ஜப்பான், மெக்ஸிக்கோ ஆகியவற்றுக்கிடையேயான போட்டியில் 4- 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஜப்பான் அணித்தலைவி சவா மூன்று கோல்களையும் ஹேனோ ஒரு கோலையும் அடித்தனர். 13 ஆவது நிமிடத்தில் அணித் தலைவி சவா கோல் அடித்தார். 15 ஆவது நிமிடத்தில் ஹேனோ கோல் அடித்தார். ஜப்பான் இரண்டு கோல்கள் அடித்ததனால் சுதாகரித்த மெக்ஸிக்கோ 19 ஆவது நிமிடத்தில் கோல் அடிக்க முயற்சி செய்தது. ஜப்பான் கோல் காப்பாளர் அதனைத் தடுத்துவிட்டார். 25 ஆவது நிமிடத்தில் மெக்ஸிக்கோ கோல் அடித்தது. ஆனால் அது ஓப்சைட் கோல் என்பதால் சோர்ந்து போனது. 39 ஆவது நிமிடத்தில் ஜப்பானுக்கு கிடைத்த கோணர் கிக்கை தலைவி சவா கோலாக்கினார். 50 ஆவது நிமிடத்தில் மெக்ஸிக்கோவும் 55 ஆவது நிமிடத்தில் ஜப்பானும் கோல் அடிக்க முயற்சி செய்தன. இரண்டும் ஓப் சைட் என்பதனால் 80 ஆவது நிமிடத்தில் தலைவி சவா கோல் அடித்தார்.
ஜப்பான் மெக்ஸிக்கோ ஆகிய இரண்டு அணி வீராங்கனைகளும் கோல் அடிப்பதற்கு மேற்கொண்ட முயற்சிகள் எதிரணியால் தடுக்கப்பட்டன. ஐந்தாவது மகளிர் உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடும் ஜப்பான் முதன் முதலாக காலிறுதிக்கு விளையாடத் தகுதி பெற்றது. சவா சிறந்த வீராங்கனையாகத் தெரிவு செய்யப்பட்டார்.
இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகியவற்றுக்கிடையே நடைபெற்ற போட்டியில் 2- 1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.
18 ஆவது நிமிடத்தில் நியூசிலாந்து கோல் அடித்து இங்கிலாந்துக்கு அதிர்ச்சியளித்தது. இடைவேளை வரை இங்கிலாந்து கோல் அடிப்பதற்கு மேற்கொண்ட முயற்சிகளை நியூசிலாந்து வீராங்கனைகள் முறியடித்தனர்.
63 ஆவது நிமிடத்தில் இங்கிலாந்து வீராங்கனை ஸ்கொட் கோல் அடித்தார். அதன் பின்னர் போட்டியில் பரபரப்புக் கூடியது. 81 ஆவது நிமிடத்தில் இங்கிலாந்து வீராங்கனை கிளாச் கோல் அடிக்க இங்கிலாந்து முன்னிலை பெற்றது. 88 ஆவது நிமிடத்தில் இங்கிலாந்து வீராங்கனை அடித்த கோல் நியூசிலாந்து கோல் காப்பாளரால் தடுக்கப்பட்டது.
சிறந்த வீராங்கனையாக இங்கிலாந்தைச் சேர்ந்த அலெக்ஸ் ஸ்கொட் தேர்வு செய்யப்பட்டார்.
ரமணி
சூரன்.ஏ.ரவிவர்மா
மெட்ரோநியூஸ்
No comments:
Post a Comment