Sunday, July 17, 2011

மூன்றாவது இடத்தில் சுவீடன்

ஜேர்மனியில் நடைபெறும் மகளிர் உலகக் கிண்ணக் கால்பந்தாட்டப் போட்டியில் பிரான்ஸுக்கு எதிரான போட்டியில் 2,1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற சுவீடன் மூன்றாவது இடத்தைப் பிடித்தது.
அரையிறுதியில் தோல்வியடைந்த பிரான்ஸ் சுவீடன் ஆகியன மூன்றாம் இடத்தைப் பிடிப்பதற்காக மோதின.
மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் ஆரம்பம் முதல் இறுதிவரை பிரான்ஸ் ஆதிக்கம் செலுத்தியது. ஆனாலும் சுவீடனின் சாதுரியமான விளையாட்டினால் பிரான்ஸ் தோல்வியடைந்தது.
29 ஆவது நிமிடத்தில் சுவீடனின் வீராங்கனையானசெலினி ஒரு கோல் அடித்தார். 56 ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் வீராங்கனை தோமிஸ் கோல் அடித்து சமப்படுத்தினார். 68 ஆவது நிமிடத்தில் சுவீடன் வீராங்கனை கியூவிஸ் சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார்.
82 ஆவது நிமிடத்தில் சுவீடன் வீராங்கனையான ஹம்மரிஸ் ரொம் கோல் அடித்தார்.
பிரான்ஸ் 19 முறையும் சுவீடன் 10 முறையும் எதிரணியின் கோல் கம்பத்தை நோக்கி அடித்தன. பிரான்ஸ் கோல் அடிப்பதற்கு எட்டு முறை சந்தர்ப்பம் கிட்டியது. சுவீடன் வீராங்கனைகள் அதனைத் தடுத்துவிட்டனர்.
சுவீடன் நான்கு தடவை கோல் அடிக்க மேற்கொண்ட முயற்சிகளை பிரான்ஸ் தடுத்தது. சிறந்த வீராங்கனையாக சுவீடனைச் சேர்ந்த சாரா லார் சச‌ன் செய்யப்பட்டார்.
2003 ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் ஜேர்மனியிடம் தோல்வியடைந்தது சுவீடன். 1991 ஆம் ஆண்டு ஜேர்மனியைத் தோற்கடித்து மூன்றாவது இடத்தைப் பெற்றது.
ரமணி
சூரன்.ஏ.ரவிவர்மா
மெட்ரோநியூஸ்

No comments: