Tuesday, July 12, 2011

அரை இறுதியில் சுவீடன்

ஜேர்மனியில் நடைபெறும் மகளிர் உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் அவுஸ்திரேலியாவை தோற்கடித்த சுவீடன் அரையிறுதியில் விளையாட தகுதி பெற்றது.
11 ஆவது நிமிடத்தில் சுவீடன் வீராங்கனையான ஸ்யோகர்ன், 16 ஆவது நிமிடத்தில் டக்விஸ்ன் ஆகியோர் கோல் அடித்ததும் சுவீடன் முன்னிலை பெற்றது. அவுஸ்திரேலிய இளம் வீராங்கனைகள் கோல் அடிக்க மேற்கொண்ட முயற்சிகளை சுவீடன் வீராங்கனைகள் முறியடித்தனர். 40 ஆவது நிமிடத்தில் அவுஸ்திரேலிய வீராங்கனையான ஈபரி கோல் அடித்து ஆறுதல்படுத்தினார்.
முதல் பாதி 2-1 என்ற கோல் கணக்கில் முடிவடைந்தது. இடைவேளையின் பின்னர் 52 ஆவது நிமிடத்தில் சுவீடன் வீராங்கனையான செலின் கோல் அடித்தார். அவுஸ்திரேலிய வீராங்கனைகள் பந்தை தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தனர். அவர்களின் கோல் அடிக்கும் முயற்சிக்கு சுவீடன் வீராங்கனைகள் முட்டுக்கட்டை போட்டனர்.
சிறந்த வீராங்கனையான சுவீடன் சொஸ்ஸின் தேர்வு செய்யப்பட்டார். அரையிறுதியில் ஜப்பானை எதிர்த்து சுவீடன் நாளை விளையாடுகிறது.
பிரேஸில் அமெரிக்கா ஆகியவற்றுக்கிடையேயான பரபரப்பான போட்டியில் பெனால்டி மூலம் 5-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற அமெரிக்கா அரையிறுதியில் விளையாட தகுதி பெற்றது.
போட்டியின் ஆரம்ப நிமிடமும் கடைசி நிமிடமும் பிரேஸிலுக்கு அதிர்ச்சியான கணங்களாக அமைந்து விட்டன. இரண்டாவது நிமிடத்தில் பிரேஸில் வீராங்கனையான டைனர் ஒன் கோல் அடித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார். 10 என்ற கோல் கணக்கில் அமெரிக்க வீராங்கனைகள் மிக உற்சாகமாக விளையாடினார்கள். இடைவேளை வரை 10 என்ற முன்னிலையில் அமெரிக்கா இருந்தது.
68 ஆவது நிமிடத்தில் பிரேஸில் வீராங்கனை ?? ஒரு கோல் அடித்து சமப்படுத்தினார். 65 ஆவது நிமிடத்தில் அமெரிக்க வீராங்கனையான பௌச்லர் சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார். 1-1 என்ற சமநிலையில் போட்டி முடிவுற்றதால் மேலதிக நேரம் வழங்கப்பட்டது. 90 ஆவது நிமிடங்களில் ஆட்டம் முடிவடைந்தது. 92 ஆவது நிமிடத்தில்மாதா கோல் அடித்து நம்பிக்கையூட்டினார். 2-1 என்ற முன்னிலையுடன் பிரேஸில் விளையாடியது. ஆட்டம் முடிவடையும் வேளையில் 120+2 நிமிடங்களில் அமெரிக்கா வீராங்கனை வம்பச் கோல் அடித்து சமப்படுத்தினார். கடைசி வினாடியில் பிரேஸிலின் வெற்றியை அமெரிக்கா பறித்தது. 2-2 என்ற கோல் கணக்கில் போட்டி முடிவடைந்தது. அமெரிக்கா ஐந்து பெனால்டிகளை கோலாக்கியது. பிரேஸில் வீராங்கனைகள் அடித்த நான்காவது பெனால்டியை அமெரிக்கா கோல் கீப்பர் தடுத்து விட்டார்.
அமெரிக்காவின் சோலோ சிறந்த வீராங்கனையாக தெரிவு செய்யப்பட்டார். பிரான்ஸை எதிர்த்து அமெரிக்கா அரையிறுதி போட்டியில் இன்று விளையாடுகிறது.
ரமணி
சூரன்.ஏ.ரவிவர்மா
மெட்ரோநியூஸ்

No comments: