Tuesday, July 19, 2011

வரலாறு படைத்தது ஜப்பான்

ஜேர்மனியில் நடைபெற்ற மகளிர் உலகக் கிண்ண உதைப்பந்தாட்டப் போட்டியில் பலம் வாய்ந்த அமெரிக்க மகளிர் அணியை வீழ்த்தி ஜப்பான் சம்பியனானது. ஐரோப்பா, அமெரிக்கா, லத்தீன் அமெரிக்க நாடுகள் உதைப்பந்தாட்டத்தில் சம்பியனாகும் என்ற விதியை முதன் முதலாக முறியடித்த ஜப்பான் உதைப்பந்தாட்டத்தில் ஆசியாவும் சளைத்ததல்ல என்று நிரூபித்துள்ளது.
குழு சீயில் இடம்பிடித்த ஜப்பான் 2 -1 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்தையும் 4- 0 என்ற கோல் கணக்கில் மெக்ஸிக்கோவையும் வீழ்த்தியது. 2 -0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்திடம் தோல்வியடைந்தது.
கால் இறுதியில் ஜேர்மனியை 1- 0 என்ற கோல் கணக்கில் வென்றது. அரையிறுதியில் 3 -1 என்ற கோல் கணக்கில் சுவீடனை வென்றது.
குழு சீ யில் இடம்பிடித்த அமெரிக்கா, 2 -0 என்ற கோல் கணக்கில் வட கொரியாவையும் 3- 0 என்ற கோல் கணக்கில் கொலம்பியாவையும் தோற்கடித்தது. சுவீடனுடனான போட்டியில் 2 -1 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.
பிரேசிலுடன் கால் இறுதியில் மோதிய அமெரிக்கா 5- 3 என்ற கோல் கணக்கில் பெனால்டி முறையில் வெற்றி பெற்றது.
அரையிறுதியில் 3 -1 என்ற கோல் கணக்கில் பிரான்ஸை தோற்கடித்தது.
மகளிர் உலகக் கிண்ண வரலாற்றில் அமெரிக்காவின் ஆதிக்கம் அதிகமானது. 1991, 1999 ஆண்டுகளில் அமெரிக்கா சம்பியனானது. 1995, 2003, 2007 ஆம் ஆண்டுகளில் மூன்றாமிடத்தைப் பெற்றது.
போட்டி ஆரம்பமானது முதல் அமெரிக்கா தனது ஆதிக்கத்தை வெளிக்õகட்டியது. 17 நிமிடங்கள்வரை ஜப்பானின் கோல் பகுதியை அமெரிக்கா ஆக்கிரமித்தது.
ஆட்டத்தின் முதல் பகுதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 69 ஆவது நிமிடத்தில் அமெரிக்க வீராங்கனையான மோர்கன் கோல் அடித்தார். 81 ஆவது நிமிடத்தில் ஜப்பான் வீராங்கனையான மியாமா கோல் அடித்து சமப்படுத்தினார்.
சமநிலையில் போட்டி முடிவடைந்ததனால் மேலதிக நேரம் வழங்கப்பட்டது. 104ஆவது நிமிடத்தில் அமெரிக்க வீராங்கனை வம்பச் கோல் அடித்தார். 117 ஆவது நிமிடத்தில் ஜப்பான் வீராங்கனை சவா கோல் அடித்து சமப்படுத்தினார். இரண்டாவது பாதி ஆட்டமும் சமநிலையில் முடிவடைந்ததனால் பெனால்டி மூலம் சம்பியன் தெரிவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
அமெரிக்க வீராங்கனைகள் அடித்த முதல் இரண்டு பெனால்டிகளும் கோல் கம்பத்துக்கு வெளியே போயின. மூன்றாவது பெனால்டியை கோல் கீப்பர் தடுத்து விட்டார். நான்காவது பெனால்டி கோலாகியது. அமெரிக்கா அடித்த முதலாவது பெனாட்டி கோலாக்கியது. இரண்டாவது கோல் கீப்பர் தடுத்து விட்டார். மூன்றாவது, நான்காவது பெனால்டி கோலானகின.
2- 0 என்ற கோல் கணக்கில் ஜப்பான் முன்னிலைவகித்து. ஜப்பான் மூன்றாவது கோலை அடித்தது. அமெரிக்கா அடித்த ஒரு பெனால்டி கோலானது 3- 1 என்ற கோல் கணக்கில் ஜப்பான் சம்பியனானது.

ரமணிசூரன்.ஏ.ரவிவர்மாமெட்ரோநியூஸ்

No comments: