Monday, July 4, 2011

அமெரிக்கா ,சுவீடன் வெற்றி

ஜேர்மனியில் நடைபெறும் மகளிர் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் அமெரிக்கா சுவீடன் வெற்றி பெற்றன.
கொலம்பியாவுக்கு எதிரான போட்டியில் 30 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற அமெரிக்க கால் இறுதியில் விளையாடத் தகுதி பெற்றது.
12 ஆவது நிமிடத்தில் அமெரிக்க வீராங்கனையான ரெய்லி கோல் அடித்து உற்சாகம் மூட்டினார். அமெரிக்கா ஒரு கோல் அடித்ததும் கொலம்பியா கோல் அடிக்க பலமுறை முயற்சி செய்தது. 50 ஆவது நிமிடத்தில் அமெரிக்கா வீரங்கனையான ரபினோ கோல் அடித்தார். 57 ஆவது நிமிடத்தில் அமெரிக்க வீராங்கனையான லொயிட் கோல் அடித்தார்.
84 ஆவது நிமிடத்தில் அமெரிக்க வீராங்கனையான வம்பாச்சிக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.
அமெரிக்காவின் விளையாட்டுக்கு ஈடு கொடுக்க முடியாத கொலம்பியா தோல்வியுடன் வெளியேறியது. அமெரிக்க வீராங்கனையான லொயிட் சிறந்த வீராங்கனையாகத் தெரிவு செய்யப்பட்டார்.
சுவீடன் வடகொரியா ஆகியற்வற்றுக்கிடையில் நடைபெற்ற போட்டியில் 1 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற சுவீடன் கால் இறுதிப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றது.
வடகொரியா மிகச் சிறந்த முறையில் விளையாடிய போதும் கோல் அடிப்பதற்குரிய சந்தர்ப்பங்களை சுவீடன் வீராங்கனைகள் முறியடித்தன‌ர். பந்தை தமது கட்டுப்பாட்டினுள் அதிக நேரம் வடகொரிய வீராங்கனைகள் வைத்திருந்தனர்.
64 ஆவது நிமிடத்தில் சுவீடன் வீராங்கனையானஉக்வின்ஸ்கோல் அடித்தார். சிறந்த வீராங்கனையாக சுவீடனைச் சேர்ந்த செகார்தெரிவுசெய்யப்பட்டார்.
ரமணிசூரன்.ஏ.ரவிவர்மாமெட்ரோநியூஸ்

No comments: