முதியவர் ஒருவர் இரண்டாம் தாரமாகத் திருமணம் செய்வதற்குப் பக்கத்து வீட்டு இளைஞனையும் அழைத்துக் கொண்டு பெண் பார்க்கச் செல்கிறார். முதியவருடன் வந்த இளைஞனின் அழகில் மனதைப் பறிகொடுத்த பெண் இளைஞன் தான் மணமகன் என நினைத்து சந்தோஷக் கனவில் மிதக்கிறõள். தன்னைப் பெண் பார்க்க வந்தது முதியவர் என்பதை மண மேடையில் அறிந்து அதிர்ச்சியடைகிறாள். இளைஞனை மனதில் நினைத்துக் கொண்டு முதியவரின் தாலியைக் கழுத்த்தில் சுமக்கும் இளம் பெண் ணின் கதை தான் தாலி பாக்கியம்.
எம்.ஜி.ஆரின் பக்கத்து வீட்டில் சரோஜாதேவி வசிக்கிறார். சிறு வயது முதலே பழகும் எம்.ஜி. ஆரும் சரோஜாதேவியும் பருவ வயதை அடைந்ததும் காதல் வலையில் வீழ்கிறார்கள். சரோஜாதேவியின் தகப்பன் மறுமணம் செய்வதற்காகப் பெண் பார்க்கப் போகும் போது எம்.ஜி. ஆரையும் அழைத்துச் செல்கிறார். மணமகளான எம்.என். ராஜம் தனது எதிர்காலக் கணவன் எம்.ஜி.ஆர் எனத் தவறாக நினைத்து மனதைப் பறிகொடுக்கிறாள். எஸ்.வி. சுப்பையாவுக்கு எம்.என். ராஜத்தைப் பிடித்து விடுகிறது. ஆகையால் திருமணத்துக்குச் சம்மதம் தெரிவிக்கிறார் எம்.ஜி.ஆர். தான் தனது கணவன் என்ற கனவில் மிதக்கும் எம்.என். ராஜம் திருமண நாளை எதிர்பார்க்கிறாள்.மணமேடையில் எஸ்.வி. சுப்பையாவைக் கண்ட எம்.என். ராஜம் அதிர்ச்சியடைகிறாள். சந்தர்ப்ப சூழ்நிலையினால் எஸ்.வி. சுப்பையாவுக்கு மனைவியாகிறாள் எம்.என். ராஜத்தின் மனதில் எம்.ஜி. அதன் உருவம் ஆழமாகப் பதிந்ததனால் எம்.ஜி. ஆரை மறக்க முடியாது தடுமாறுகிறார் எம்.என். ராஜம். தன் மனதில் உள்ள ஆசையை ஒருநாள் எம்.ஜி.ஆரிடம் கூறுகிறார் எம்.என். ராஜம். எம்.என்.ராஜத்தின் விபரீத ஆசை தவறெனக் கூறுகிறார் எம்.ஜி.ஆர். எம்.என். ராஜத்துக்கும் புத்திமதி கூறி அனுப்புகிறார். இவர்கள் பேசியதை மறைந்திருந்து கேட்ட நம்பியார் தனது குள்ளநரித்தனத்தால் எம்.ஜி. ஆரின் குடும்பத்துக்கும் எஸ்.வி. சுப்பையாவின் குடும்பத்துக்கும் இடையில் பூசலை உருவாக்குகிறார். நம்பியாரின் மிரட்டலுக்குப் பணிந்த எம்.என். ராஜமும் இதற்கு உடந்தையாகச் செயற்படுகிறார்.
குடும்பப் பிரச்சினை விஸ்வரூபமானதால் எம்.ஜி.ஆ.ரின் மீதான சரோஜாதேவியின் காதலுக்குத் தடை ஏற்படுகிறது. சரோஜா தேவியின் கழுத்தில் தாலி கட்டுவேன் என்று எம்.ஜி.ஆர். சவால் விடுகிறார். சரோஜாதேவியின் கழுத்தில் எம்.என். ராஜம் தாலியைக் கட்டி விட்டு எம்.ஜி.ஆர். திருட்டுத் தாலி கட்டி விட்டதாகக் கூறுகிறார். இந்தப் பிரச்சினையை விசாரித்த ஊர்ப் பஞ்சாயம் எம்.ஜி.ஆரை ஊரைவிட்டு விலக்கி வைக்கிறது. தான் குற்றமற்றவன் என்பதை இறுதியில் நிரூபிக்க எம்.ஜி.ஆர். சரோஜாதேவியை கரம் பிடிக்கிறார்.
எம்.ஜி.ஆர். சரோஜாதேவி, எஸ்.வி. சுப்பையா எம்.என். நம்பியார், வி. நாகையா நாகேஷ், மனோரமா ஆகியோர் நடித்தனர். புளுவாரூர்சுந்தராமவின் மூலக் கதைக்கு ஆருர்தாஸ் வசனம் எழுதினார். பாடல்கள் வாலி, இசை கே.வி. மகாதேவன். அன்னை இல்லாமல் பிறந்தவர் யார், கண் பட்டது நெஞ்சம் புண்பட்டது நெஞ்சம், உள்ளம் ஒரு கோயில், இதயத்தை அந்த இறைவன் படைத்து வைத்தான் ஆகிய பாடல்கள் கதைக்கு வலுச் சேர்த்தன.
வரலஷ்மி நிறுவனத்தின் பெயரில் கண்ணாம்பா தயாரித்த இப்படத்தை அவரது கணவன் கே.பி. நாகபூஷணம் இயக்கினார்.
ரமணி
மித்திரன்13/05/12

No comments:
Post a Comment