Tuesday, May 8, 2012

திரைக்குவராதசங்கதி36

துரை இயக்கிய "அவளும்பெண்தானே'படம் பெருவெற்றி பெற்றது. தமிழில் பெற்றஅதே வெற்றியை கன்னடத்திலும் பெறவேண்டும் என விரும்பிய துரை அதேகதையை "முகியதசுரா' என்ற பெயரில்இயக்கினார். தமிழில் துரையால் அறிமுகப்படுத்தப்பட்டு நல்ல நடிகை எனப் பெயர்பெற்ற சுமித்ராதான் கதாநாயகி. கன்னட நடிகர் ராஜேஸ்சுதா நாயகனாக நடித்தார். தமிழில் கிடைத்த வெற்றி கன்னடத்தில் கிடைக்கவில்லை.கன்னடப் பட இயக்குனர் புட்டண்ணா ஒருபடத்தில் மூன்று வித்தியாசமான கதைகளைக்கூறியிருந்தார். அந்த மூன்று கதைகளில்ஒரு கதையில் ரஜினி நடித்தார். கன்னடரசிகர்களிடையே அந்தக் கதை மூலம் ரஜினிபிரபல்யமானார். ரஜினியின் புகழ் ஏறிக்கொண்டிருந்தபோது அவரை வைத்து ஒருபடமாவது இயக்க வேண்டும் என்று துரைவிரும்பினார். அவரின் ஆசை தீர சதுரங்கம் பாவத்தின்சம்பளம் ரகுபதிராகவராஜாராம் ஆயிரம் ஜென்மங்கள் ஆகிய நான்குபடங்களை ரஜினியை வைத்து இயக்கினார்துரை.
சதுரங்கம் படத்தில் அப்பாவி வேஷம். பாவத்தின் சம்பளத்தின் கதை ரஜினியிலிருந்துஆரம்பமாகும். யக்ஷகானம் என்ற மலையாளப் படத்தையே ஆயிரம் ஜென்மங்கள்என்ற பெயரில் இயக்கினார் துரை.ஆயிரம் ஜென்மங்கள் படத்தில் மிக முக்கியமான பாத்திரத்தில் நடித்தார் ரஜினி. அப்படத்தில் லதாநடித்தால் நன்றாகஇருக்கும் எனநினைத்தார்துரை. உலகம்சுற்றும் வாலிபனில்எம்.ஜி. ஆரால் அறிமுகப்படுத்தப்பட்டவர்லதா. எம்.ஜி.ஆர். முதல்வரானதும் லதாநடிக்க மாட்டார் என்று பலர் நினைத்தார்கள்.லதாவைச் சந்தித்து நடிப்பதற்கு முடியுமாஎனக் கேட்டார் துரை. எந்தவிதமான தயக்கமும் இன்றி ஒப்புக் கொண்டார் லதா. அதன்பின்னர் பல நடிகர்களுடன் இணைந்து நடித்தார் லதா.ஸ்ரீப்ரியா தயாரித்த நீயா படத்தை துரைஇயக்கினார். அந்தப் படம் அவருக்கு பெரிய வெற்றியைத் தேடிக் கொடுத்தது.இயக்குனர் துரைக்கு அகில இந்திய அளவில்பெரும் வரவேற்பைக் கொடுத்த படம்"பசி'.
 "பசி' படத்தின் கதை துரையின் மனதில்மிக நீண்ட நாட்களாக இருந்தது. தனக்குசந்தர்ப்பம் கிடைத்த வேளைகளில் எல்லாம்அந்தக் கதையை பலருக்கும் கூறினார்.சிறந்த கதை எனக் கூறினார்களே தவிர அதனைப் படமாக்க எவரும் முன்வரவில்லை.குறைந்த பட்ஜட்டில் தயாரான துரையின்படங்கள் எல்லாம் 50 நாட்களைத்தாண்டிஓடும் என்றதால் துரையிடம் கதை கேட்கபலர் ஆவலாக இருந்தார்கள்.பசி கதையில் நம்பிக்கை கொண்ட துரைஅதனை தானே தயாரிக்க முடிவு செய்தார்.ஷோபாவின் நடிப்பு கதைக்கு உயிர் கொடுத்துவருவதால் ஷோபாவையே கதாநாயகியாக்க முடிவு செய்தார். புதிய நடிகர்கள்நடித்தால்தான் பசியின் தாக்கத்தை ரசிகர்கள்உணர்வார்கள் என்பதால் புது முகங்களைத்தேடினார்.பிரவீணா செந்தில் சத்யாநாராயணன்ஆகியோர் துரையின் கண்டுபிடிப்புகள். பிரவீணா சிறந்த நடிகை. பின்னர் பாக்யராஜைமணந்து கொண்டு சினிமாவுக்கு முழுக்குப்போட்டு விட்டார்.செந்திலைப் பற்றிசொல்லவே வேண்டா
ம். செந்தில்என்ற பெயரைக்கேட்டால் சிரிப்புத்தான்வரும். சத்யாவும் நாராயணனும்பசி சத்தியா பசி நாராயணன் என்றேஅழைக்கப்படுகின்றனர்."பசி' படத்தில்பிராமணப் பெண்ணாகஷோபா நடித்ததனால் பிராமணப் பெண்களின் நடை உடை பாவனைகளைக் கவனிக்கச் செய்தார்.படப்பிடிப்பு முழுவதும் சேரியிலே நடந்ததால்சேரி வாழ்க்கை பற்றியும் ஷோபா அறிவதற்குரிய ஏற்பாடுகளைச் செய்தார்.
டெல்லிகணேஷ் ரிக்ஷா ஓட்டுபவராக நடித்தார். அதற்காக புது ரிக்ஷா ஒன்று வாங்கி ரிக்ஷாவைஎப்படி ஓட்டுவது என்று டெல்லிகணேஷ் பழகுவதற்கும் ஏற்பாடு செய்தார்துரை.படப்பிடிப்பு ஒத்திகையை ஸ்ரூடியோவில்நடத்திய பின்பு சேரியில் உண்மையானபடப் பிடிப்பு நடைபெறும். சேரியில் படப்பிடிப்பு நடைபெறுகிறது என்பது தெரியாதவகையில் மிகவும் யதார்த்தமாகப் படப்பிடிப்பை நடத்தினார் துரை.மேக்கப் இல்லை. பாட்டு இல்லை. டான்ஸ்இல்லை. ரசிகர்களைக் கவரும் எவையுமேஇல்லாமல் 22 நாட்களில் படப்பிடிப்புமுடிந்தது. படப்பிடிப்பு முடிந்து விநியோகஸ்தர்களுக்குப் போட்டுக் காட்டினார்.பார்த்தவர்கள் பாராட்டினார்கள். விநியோகிக்க யாருமே முன்வரவில்லை. சற்றும்சளைக்காத துரை எழுத்தாளர்களையும் தயாரிப்பாளர்களையும் எல்லா மொழிஇயக்குனர்களையும் அழைத்து படத்தைக்காட்டினார். அனைவரும் பாராட்டினார்களேதவிர படத்தை வாங்க முன்வரவில்லை.பசி படத்தை துரை வெளியிட்டார். ஓடாதுஎன விநியோகஸ்ர்களால் ஒதுக்கப்பட்ட பசிஓகோ என ஓடியதுடன் விருதுகளையும்அள்ளிக் குவித்தது. பசி படத்தைப் பார்த்தபெண்கள் கண்ணீர் விட்டு அழுதார்கள்.அகில இந்திய சிறந்த நடிகைக்கான "ஊர்வசி' விருதை ஷோபா பெற்றார். சிறந்த மாநில மொழிப் படத்துக்கான மத்திய அரசின்விருது. தமிழக அரசின் விருது. மாநில மொழிப் படத்தின் சிறந்த இயக்குனர் துரை எனபல விருதுகளை "பசி' பெற்றது.
ரஷ்யாவின் தாஷ்கண்ட் நகரில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவிலும் "பசி' திரையிடப்பட்டு பாராட்டுதல்களைப் பெற்றது.
"பசி' படத்தின் வெற்றி விழா சென்னையில்நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.வெற்றி விழா நடைபெறும் தினத்தில்தான்ஷோபா தற்கொலை செய்தார். வெற்றிவிழாவை ரத்துச் செய்து ஷோபாவுக்குஇறுதி அஞ்சலி செலுத்தினார் துரை.
ரமணி
மித்திரன்19.11.2006

No comments: