பிரித்தானியாவில் மனித முயற்சியால் உருவாக்கப்பட்டுள்ள காட்டுப் பூக்கள் நிறைந்த புல்லினங்கள், லண்டன் 2012 ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ள ஒலிம்பிக் பூங்காவில் இந்த வாரம் நாட்டப்பட்டுள்ளன
மேற்படி போட்டிகள் தொடங்க இன்னும் 73 நாட்களே இருக்கும் நிலையில் ஒலிம்பிக் விளையாட்டரங்கைச் சுற்றிலும் அவை பொன்னிற மயமாகும் வகையிலேயே இவ்வாறு நாட்டப்பட்டுள்ளனவாம்.
பத்துக்கு @மற்பட்ட கால்பந்தாட்ட மைதானங்களில் கடந்த இரண்டு வருடங்களாக பரீட்சித்துப் பார்க்கப்பட்ட பின்னரே மேற்படி விளையாட்டுகள் இடம்பெறும். விளையாட்டரங்கிற்கு அழகு சேர்க்கும் வகையில் தேன் சிந்தும் காட்டு மலர்ச் செடிகள் நாட்டப்பட்டுள்ளன. இது குறித்து லண்டன் 2012 ஒலிம்பிக் போட்டி ஏற்பாட்டுக் குழுவின் தலைவரான செபஸ்தியன் கோ தெரிவிக்கையில்,
மேற்படி போட்டிகளுக்கான தெரிவு நிகழ்வுகளை வெற்றிகரமாகப் பூர்த்தி செ#த பின்னர் மில்லியன் கணக்கான விளையாட்டு இரசிகர்களின் இதயங்களை இந்தக் கோடை காலத்தில் ஈர்த்தெடுக்கும் நடவடிக்கையில் நாம் தற்போது ஈடுபட்டு வருகின்றோம்.
எதிர்வரும் ஜூலை மாதத்தில் ஒலிம்பிக் விளையாட்டரங்கைச் சுற்றியுள்ள பகுதியெங்கும் இந்தச் செடிகள் பூத்துக் குலுங்கி அதனைப் பொன்னிறமயப்படுத்தும் வகையில் இத்துறைசார் நிபுணர்கள் பகீரத பிரயத்தனத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பொன்மயமான தேன் நாடா
(A Ribbon of Gold) )
ஷெஃபீல்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சர்வதேச வன புஷ்ப நிபுணரும் பேராசிரியருமான நைகல் டனெட் (Nigel Dunnett) ) இனால் வடிவமைக்கப்பட்ட ஆற்றங்கரையோரப் புல்வெளிகள் எதிர்வரும் ஜூலை 27 ஆம் திகதி நடை பெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளின்போது பொன்னிறமாகப் பூத்துக் குலுங்கும் நிலையில் இருக்கப் போகின்றன. இதுபற்றி பேராசிரியர் நைகல் குறிப்பிடுகையில்,
வருடக் கணக்கான பரீட்சார்த்த நடவடிக்கைகள் மற்றும் இரண்டு பயிற்சிகளின் பின்னரே ஒலிம்பிக் விளையாட்டரங்கைச் சுற்றியுள்ள பொன்மயமானதோர் நாடாவைப் போன்று காட்சியளிக்கவுள்ள இந்த இறுதி வடிவம் பெற்ற புல்லினங்களை நாட்டியுள்ளோம். இப்போது வெறும் சேற்று நிலமாகக் காட்சியளிக்கும் இப்பிரதேசங்கள் இன்னும் ஒரு சில வாரங்களில் தேனீக்களும் பட்டாம் பூச்சிகளும் தேன் சிந்தும் மலர்களில் ரீங்காரமிட்டபடி அமர்ந்து தேன் உண்ணும் காட்சிகளை இரசிகர்கள் நேரிலும் தொலைக்காட்சியிலும் கண்டு களிக்கப் போகின்றனர் என்றார்.
மனங்கவர் சிகரம்
ஒலிம்பிக் விநியோக அதிகார சபை ஒலிம்பிக் பூங்காவில் 4,000 மரங்கள் 300,000 ஈர நிலத் தாவரங்கள் மற்றும் 150,000 க்கு மேற்பட்ட வருடம் முழுவதும் பூக்கும் தாவரங்கள் மற்றும் புதர்களையும் இதுவரை நாட்டியுள்ளது. மாரிகாலம் மற்றும் வசந்தகாலம் முழுவதும் தோட்டக் கலை நிபுணர்கள் குழுவினர் பொது அர்ப்பணிப்புடன் தேவையான பூர்வாங்கச் செயற்பாடுகளில் ஈடுபட்டு இதனை இந்தக் கோடை காலத்தில் காண்போரைக் கவர்ந்திழுக்கும் சிகரமாக்கியுள்ளனர் என்றே கூறலாம்.
மேற்படி ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைந்ததும் இந்த பொன் வண்ணமயமான செடிகள் காலப் போக்கில் படிப்படியாக வளர்ந்து எதிர்காலத் தலைமுறையினருக்கான புதியதோர் பூங்காவாகவும் வனவிலங்கு சரணாலயமாகவும் காட்சியளிப்பதில் சந்தேகமில்லை.
மெட்ரோநியூஸ்15/05/12

No comments:
Post a Comment