பசி' திரைப்படத்தின் வெற்றி துரையைதிரை உலகில் பிசியாக்கியது. 1979 ஆம்ஆண்டு ஒன்பது படங்களை இயக்கினார்துரை. பசி'யைத் தொடர்ந்து கிளிஞ்சல்கள்என்ற படம் வியாபார ரீதியில் துரையைஉயர்த்தியது. மோகன் கதாநாயகனாகநடித்த கிளிஞ்சல்கள் படத்தின் மூலம் பூர்ணிமா ஜெயராம் தமிழில் கதாநாயகியாகஅறிமுகமானார்.பிரபல ஹிந்தி நடிகையான ஹேமமாலினியின் தாயாரான ஜெயா சக்கவர்த்திதான்பூர்ணிமாவைப் பற்றி துரைக்குக்கூறினார். பூர்ணிமாவை சென்னைக்குஅழைத்து புகைப்படமெடுத்துப் பார்த்தார் துரை. பூர்ணிமாவின் அழகு துரையை வெகுவாகக் கவர்ந்து விட்டது.
மஞ்சில் விரிங்ச பூக்கள் என்ற மலையாளப் படத்தின் மூலம் தான் பூர்ணிமாமுதன் முதலில் திரைப்படத்தில் அறிமுகமானார். அந்தப் படத்தின் மூலம் அவருக்கு பெரும்புகழ் கிடைத்தது. அந்தப்புகழை விட அதிகமான புகழை கிளிஞ்சல்கள் பெற்றுக் கொடுத்தது.கிளிஞ்சல்கள் படம் 250 நாட்களைக் கடந்துஓடி வெற்றிப்பட இயக்குநர் என்ற பெயரைதுரையின் மீது அழுத்தமாக பதித்தது. ரூபிமைடார் லிங் என்றபெயரில் கிளிஞ்சல்கள் மலையாளத்தில்வெளியானது. துரைதான் அப்படத்தையும்இயக்கினார். மலையாளப் படமும் வெற்றிபெற்றது.
மலையாளத்தில்இருந்துபிரேமக்கோபாதாபிஷேகம் என்றபெயரில்தெலுங்கில்டப் செய்யப்பட்டது. அங்கும் 100 நாட்கள் ஓடியது.கிளிஞ்சல்களின் தொடர் வெற்றிதுரையை ஹிந்தித் திரை உலகுக்கு அழைத்துச்சென்றது. பிரபல ஹிந்தித் தயாரிப்பாளரான மதன்லால் துரையைச் சந்தித்து கிளிஞ்சல்களை ஹிந்தியில் தயாரிக்க அனுமதிகேட்டார். துரையும் சம்மதம் தெரிவித்தார்.பிரபல ஹிந்திப் பட இயக்குனரும் தயாரிப்பாளருமான மனோஜ் குமாரின் மகன்குணால் கோஸ்வாழி கதாநாயகனாகவும்மனீஷா என்ற புதுமுகம் கதாநாயகியாகவும்நடித்தனர். தோகுலாப் என்ற ஹிந்திப் படம்கிளிஞ்சல்கள் போன்றே வெள்ளி விழாக்கொண்டாடியது.
நடிகர் சரத்குமாரை திரை உலகுக்கு அறிமுகப்படுத்தியவர் துரை. சமாஜ முலோஸ்ரீஎன்ற தெலுங்கு படத்தின்மூலம் சரத்குமார் திரை உலகில் நுழைந்தார்.எம்.ஜி.ஆருடன் அவரதுராமாவதார தோட்டத்தில்துரை ஒரு நாள் கதைத்துக்கொண்டிருந்தபோது தான்முதலமைச்சரானதால் துரையின் இயக்கத்தில் நடிக்கமுடியவில்லை என்று கூறினார். எம்.ஜி.ஆர். துரையின்பசி என்ற படம் எம்.ஜிஆரை வெகுவாகக் கவர்ந்துவிட்டது.சிவாஜியை வைத்து துரைஒரு படத்தை இயக்க வேண்டுமென எம்.ஜி.ஆர். வேண்டுகோள் விடுத்தார். அதனைக் கேட்ட துரைநெகிழ்ந்து போனார். எம்.ஜி.ஆரின் விருப்பத்தை சிவாஜிகணேசனிடம் துரை கூறியபோது அவர் முதலில் நம்பவில்லை.மக்கள் திலகத்தின் சிபாரிசில்நடிகர் திலகத்தைத் தேடி துரைவந்ததை அறிந்த நடிகர் திலகம்சந்தோஷப்பட்டதுடன் நடிப்பதற்கும் ஒப்புதல் வழங்னார்.
சிவாஜிக்காகவே துணை என்றகதையை உருவாக்கினார் துரை.எம்.ஜி. ஆரின் படங்கள் உருவான சத்யாஸ் ஸ்டூடியோவுக்குநடிகர் திலகம் சென்றார். துரையின் வேண்டுகோளின் படிதனது மேக்கப் அறையை சிவாஜிக்குபாவிக்க எம்.ஜி.ஆர். அனுமதியளித்தார். சிவாஜியை இயக்குவதை நினைத்துதுரை பதற்றப்பட்டார். துரையின் பதற்றத்தைஉணர்ந்த நடிகர் திலகம் அவருக்குதைரியம் கொடுத்தார்.துரை படத்தின் படப்பிடிப்பு ஓடும் ரெயிலில் நடிக்க வேண்டி இருந்ததால் மின்சாரரயில் ஒன்றை வாடகைக்குப் பெற்று படப்பிடிப்பை நடத்தினார் துரை.அதிர்ச்சியான செய்தியை கேட்டால் நடிகர்
திலகத்துக்கு காக்கா வலிப்பு வந்து விடும்.அன்றைய காட்சியை விபரித்தபோது ஒரேஷொட்டில் நடிச்சிடுவேன். அப்புறம் மிடில்ஷொட் குளோசப் ஷொட் என்று குழப்பம்செய்யக்கூடாது என்ற நடிகர் திலகம் கூறினார்.அப்படியானால் ஒரு மணி நேர அவகாசம்தரும்படியும் அதன் பின்னரே படப்பிடிப்புநடத்த முடியும் என துரை கூறினார்.எதற்காக ஒரு மணி நேரம் என்று நடிகர் திலகம் கேட்டபோது இன்னும் இரண்டு கமராக்கள்வேண்டும் என துரை விளக்கினார்.
துரை கூறியது போன்றே ஒரு மணித்தியாலயத்தின் பின்னர் நடிகர் திலகத்தை வைத்துஅந்தக் காட்சியைப் படமாக்கினார்.துணைபடம் வெற்றிப் படமானது.நடிகர் திலகத்துடன் சகல இளம் நடிகர்களும் நடித்து விட்டனர். விஜயகாந்த் மட்டும்நடிக்கவில்லை என்று நினைத்த துரை நடிகர்திலகத்துடன் விஜயகாந்தை இணைத்து வீரபாண்டி என்ற படத்தைத் தயாரித்தார். அப்படம் வியாபார ரீதியில் வெற்றி பெற்றது.
ரமணி
மித்திரன்26..11.2006
96
No comments:
Post a Comment