தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான இரகசிய பேச்சுவார்த்தைகளையும் மறைமுக பேரம்
பேசல்களையும் திரைமறைவில் அரசியல் கட்சிகள் ஆரம்பித்து விட்டன. கூட்டணி பற்றி இறுதி முடிவு இன்னமும் எடுக்கப்படவில்லை என வீராவேசமாக அறிக்கைகளை விட்டு மக்களை திசை
திருப்புகின்றனர். தமிழக தேர்தல் ஆணையம்
சட்டசபைத் தேர்தலுக்கான பணியை வெளிப்படையாக ஆரம்பித்துவிட்டது. தமிழக வாக்காளர்
பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் 5.79 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களி
ல் 2.88 கோடிஆண்களும் 2.91 கோடி பெண்களும் 4383 திருநங்கைகளும்
உள்ளனர். 12.33 கோடி புதிய வாக்காளர்கள் புதிதாக பதியப்பட்டுள்ளனர். ஆறு இலட்சம்
வாக்காளர்கள் புதியவர்கள். இவர்கள் முதன் முதலாக வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
இந்த வாக்காளர் பட்டியல் மோசடியானது என கருணாநிதி தெரிவித்துள்ளார். ஒரு சட்டமன்றத் தேர்தலுக்கும் அடுத்த சட்ட
மன்றத் தேர்தலுக்கும் இடையே 12 முதல் 10 சதவித
வாக்காளர்களே அதிகரிப்பார்கள் 22 .சதவிதமனவர்கள்
அதிகரித்ததை ஏற்றுக்கொள்ள முடியாது. வாக்காளர் பதிவில் மோசடி நடைபெற்றுள்ளது என
கருணாநிதி குற்றம் சட்டி உள்ளார்.
வாக்களர்களைப்
பதிவு செய்வதில் தேர்தல் ஆணையம் அதிக அக்கறை கட்டியதே வாக்காளர்
அதிகரிக்கக் காரணம். கடந்த ஐந்து
வருடங்களில் பீகார், ஜார்கண்ட் போன்ற வட மாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் அதிகரித்துள்ளனர்.
அவர்களும் தம்மை வாக்காளர்களாகப பதிவு
செய்துள்ளன. வாக்காளர் தொகை அதிகரித்ததற்கு இதுவும் ஒரு காரணம் என தேர்தல் ஆணையம்
அறிவித்துள்ளது. இதனையும் கருணாநிதி ஏற்றுக்கொள்ளவில்லை. தேர்தல் ஆணையம் அறிவித்தது போன்று தொகையான வடமாநில
தொழிலாளர்கள் தமிழகத்தில் இல்லை என கருணாநிதி கூறுகிறார். ஆளும் கட்சியின்
தலையீட்டினால் வாக்காளர் தொகை அதிகரித்ததென கருணாநிதி குற்றம் சாட்டுகிறார்.
ஆண்களை விட
பெண்களே அதிக தொகையில் உள்ளனர். தமிழகத்தில் தலைவிதியை தீர்மானிப்பதில் பெண்களின்
பங்கு மிக முக்கியம். பெண் வாக்களர்களைக் குறி வைத்து இலவசங்களை திராவிட முன்னேற்றக்
கழகம் அறிமுகப்படுத்தியது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் வழியைப் பின்பற்றிய
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் இலவசங்களை அள்ளி வழங்கி ஆட்சியைப் பிடித்தது. திராவிட முன்னேற்றக் கழகம் அரிசி,த்தொலைக்
கட்சிப் பெட்டி என்பனவற்றைக்
கொடுத்தது.அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மிக்சி,கிரைடண்டர், மின்விசிறி
என்பனவற்றைக் கொடுத்து மக்களை மயக்கி ஆட்சியைப் பிடித்தது.
திராவிட முன்னேற்றக் கழகம் அறிமுகப்படுத்திய சில
திட்டங்களை இடைநிறுத்தி விட்டு புதிய பெயரில் அதே திட்டங்களை அண்ணா திராவிட
முன்னேற்றக் கழகம் அறிமுகப்படுத்த்தியது. அட்சியில் இருக்கும் அண்ணா திராவிட
முன்னேற்றக் கழகம் அம்மா உணவகம் ஆரம்பித்து
குறைந்த்த விலையில் பசியை தீர்த்தது.
இலவச சைக்கிள்,இலவச லப் டொப் என்பனவற்றை வழங்கி மாணவர்களைக்
கவர்ந்தது. பெண்களையும் மாணவர்களையும் அண்ணா
திராவிட முன்னேற்றக் கழகம் தான் பால் கவர்ந்துள்ளது. இதனை முறியடிப்பதற்கான புதிய திட்டங்களை திராவிட
முன்னேற்றக் கழகம் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில்
இணைக்க வேண்டிய சூழ் நிலை திராவிட
முன்னேற்றக் கழகத்துக்கு ஏற்பட்டுள்ளது. இது தவிர ஆறு இலட்சம் புதிய வாக்காளர்களின்
மனதை தம் வசம் இழுக்கும் திட்டத்தை
இரண்டு பிரதான கட்சிகளும்
வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சோழிங்கநல்லூர் தொகுதி
அதிக வாக்களர்களைக் கொண்ட தொகுதியாக உள்ளது. அங்கு 5.75 இலட்சம் வாக்காளர்கள்
உள்ளனர். 2.91 இலட்சம் ஆண்களும், 2.83 பெண்களும் 45 திருநங்கைகளும் உள்ளனர். 18 _19 வயதுக்குட்பட்ட இளம் வாக்காளர்கள் உள்ள
தொகுதியோகவும் இது விளங்குகிறது. 7214 ஆண்களும் 5583 பெண்களும் உள்ளனர். நாகபட்டணம் மாவட்டத்தில் உள்ள கீழ்வேளூர் தொக்தியில் மிகக்குறைந்த வாக்காளர்கள் உள்ளனர்.
அங்கு 1.63 இலட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.
81031 ஆண்களும் 82151 பெண்களும் வாக்களிக்கத் தகுதி
பெற்றுள்ளனர்
மதுரை மாவட்டத்தில் உள்ள திருமங்கலம் தொகுதியில் இராணுவ வீரர்கள் எல்லைப் பாதுகாப்புப்படை வீரர்கள்
அதிகமாக உள்ளனர். 2402 வாக்காளர்கள்
உள்ளனர். முத்ன் முறையாக 47 வெளிநாட்டு வாக்காளர்கள் பதியப்பட்டுள்ளனர். இடப்பெயர்ச்சி,இறப்பு
இடப்பெயர்வு காரணமாக 3.85 இலட்சம் வாக்காளர்களின் பெயர் நீக்கப்பட்டுள்ளது.
வாக்கு வங்கி கூட்டணி போன்றவை தேர்தல் வெற்றியைத் தீர்மானிக்கும்
காரணிகளாக உள்ளன. பலமான கூட்டணியை அமைக்க கருணாநிதி முயற்சி செய்கிறார். எதிரணிகள்
சிதற வேண்டும் என ஜெயலலிதா நினைக்கிறார். இந்தக் களேபரத்தில் புதிய வாக்களர்களையும் இளம் வாக்களர்களையும் கவர
வேண்டிய தேவை பிரதான கட்சிகளுக்கு உள்ளது. கட்சிசாராத வாக்களர்களையும் தம்பக்கம்
திருப்பவேண்டிய நிலையில் பிரதான கட்சிகள் உள்ளன.
தேர்தல்காலத்தில் வெளியிடப்படும் தேர்தல் விஞ்ஞாபனம் வெற்றியை நெருங்குவதற்கு உதவி செய்யும். கடந்த
தேர்தலின் போது வெளியிட்ட தேர்தல்
விஞ்ஞாபனத்தை மறந்துவிட்டு போலியான வாக்குறுதிகளுடன் புதிய தேர்தல்
விஞ்ஞாபனம் தயாராகும் காலம்
நெருங்குகிறது. தேர்தல் கால வாக்குறுதிகள் பொய்யானவை எனத்தெரிந்து கொண்டும் அடுத்த அரசங்கத்தி அமைக்க மக்கள் தயாராகி விடுவார்கள்.
வர்மா
தமிழ்த்தந்தி
31/01/16
No comments:
Post a Comment