இலங்கை இசை
வரலாற்றில் பொப் இசைக்குத் தனி அத்தியாயம் உண்டு. கர்நாடக இசை,தமிழ் இசை ஆகியவற்றுக்கு மத்தியில் ஈழத்து மெல்லிசை வளர்ச்சி
கண்டது. மெல்லிசைப் பாடல்கள் மேலெழுந்து வரும்போது பொப் பாடல்கள் ரசிகர்களின்
மத்தியில் பிரபலமாகின. இலங்கை வானொலி ஈழத்து மெல்லிசைப்படல்களுக்கும் பொப்
இசைப்படல்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்ததனால் இலங்கையைத்தாண்டி தமிழகத்திலும்
அப்பாடல்களுக்கு பெரிய வரவேற்பு இருந்தது.
ஏ.ஈ.மனோகரன்,நித்தி
கனகரத்தினம்,அமுதன் அண்ணாமலை,ஸ்ரனி
சிவானந்தன், அனரன் டேவிட். எம்.பக்கியராஜன் போன்றவர்கள் பொப்
பாடல்களினால் பிரபலமனார்கள். சின்ன மாமியே
உன் சின்ன மகளெங்கே அன்றைய பொப்
பாடல்களில் மிகவும் பிரபபமனது. நித்தி கனகரத்தினம் இயற்றி இசை அமைத்து படிய பாடல்
என அன்றைய வானொலியில் ஒலிபரப்பானது. உண்மையில் அப்பாடலை இயற்றி இசை அமைத்து
முதலில் பாடியவர் எம்.எஸ்.கமலநாதன் என்ற உண்மை காலம்பிந்தி வெளியானது.
மாமிக்கும் மருமகனுக்குமிடைஎயியன்
உரையாடலாக இப்பாடல் உள்ள
இப்பாடலைக் கேட்கும்போது
தன்னை . ஆடவேண்டும் போன்ற எண்ணம் ஏற்படும்.
சின்ன மாமியே உன் சின்ன மகளெங்கே
பள்ளிக்கு சென்றாளோ படிக்கச் சென்றாளோ
அட வாடா மருமகா என் ஆழகு மன்மதா
பள்ளிக்கு தான் சென்றாள் படிக்கத் தான்
சென்றாள்
ஐயோ மாமி அவளை அங்கே விடாதே
அவளை என்னும் படிக்கவென்று கெடாதே
ஊர் சுழளும் பொடியளெல்லாம்
கன்னியரைக்
கண்டவுடன் கண்ணடிக்குக்
காலமல்லவோ சின்ன மாமியே
தனது மச்சாள் மீது அதிக அன்பு கொண்டவர்
அவள் எங்கே என மாமியிடம் கேட்பது போலவும் அதற்கு மாமி பதிலளிப்பது போலவும் நகைச்சுவையுடன் பாடல்
எழுதப்பட்டுள்ளது.
சின்ன மாமியிம் அவளது சின்ன மகள் எங்கே
என மருமகன் கேட்ட போது அவள் படிப்பதற்காக பள்ளிக்குச்சென்றதாக மாமி கூறுக்கிறாள்.
வேலை இல்லாமல் உள்ள இளைஞர்கள்
அவளை தம் வசம் திருப்பி விடுவார்களோ என்ற அச்சமவனுக்கு இருக்கிறது. அதனை மாமியிடம்
தெரிவிக்கிறான். ஊர் சுழளும் பொடியள் என்ற யழ் மண்ணின் சொல்லை கச்சிதமாக அந்த
இடத்தில் பொருத்தி உள்ளார்.
ஐயோ தம்பி அவளை ஒன்றும் சொல்லாதே
அவள் வந்தால் உதைத்திடுவாள் நில்லாதே
அடக்கமில்லா பெண்ணிவள் என்றா
என் மகளை நினைத்து
விட்டாய்
இடுப்பொடிய தந்திடுவேனே சின்ன மாமியே
தன் மகளைப்பற்றி அவதூறு எதுவும் சொல்ல
வேண்டாம் என அன்பாக கடிந்து கொண்ட சின்ன மாமி மகளுக்கு தெரிந்தால்
உதைப்பாள். என் மகள் அடக்கமில்லாதவள் அல்ல கனக்க கதைத்தால்
இடுப்பை ஓடிச்சுப்போடுவன் என மண்ணின்
மனத்தை பாடல் வரியில் கோர்த்துள்ளார்.
ஏனணை மாமி மேலே மேலே துள்ளுகிறாய்
பாரணை மாமி படு குழியில் தள்ளுறியே
தேனணை மாமி அவள் எனக்கு தெவிட்டதவள் எனக்கு
பாரணை மாமி கட்டுறேன் தாலியே சின்ன மாமியே
கொஞ்சம் கனக்க கதைத்தால் துள்ளாதை
என்பார்கள் அதனால் மாமியை . துள்ள வேண்டாம் என மருமகன் கூறுக்கிறான்.
பின்னர் இறங்கி வந்து அவளுக்கு
தான் தாலி கட்டப் போவதாக தெரிவிக்கிறான்.
தமிழ் உச்சரிப்பு கிராமிய வாடையுடன்
வருகிறது. அன்றைய பிரபல
பொப் இசைப் பாடகரான பொலி பஸ்ரியனின் தாக்கம் இப்பாடலில் உள்ளது.
1965களில் பொப் பாடல்கள்
பிரபலமாகத் தொடங்கின. 1962 ஆம் ஆண்டு இபாடல் கமலனதனின் கிராமமான வதிரியில் பிரபலமாகியது. .க.கமலாகரன்,
வ. இராஜேஸ்வரன்,க.பாலச்சந்திரன்,மு.பக்கியராஜன் ஐ.சாந்தகுமார்,ச.குணசேகரன் போறவர்கள் தாம் படித்த பாடசாலைகளில் இப்பாடலைப் பாடினார்கள்.
யாழ்ப்பாணம்,கொழும்பு,வவுனியா,மட்டக்களப்பு,அம்பாறை ஆகிய இடங்களில் இப்பாடல்
பலரால் பாடப்பட்டது.
யாழ்ப்பணத்தில் அன்று பிரபலமாக இருந்த இரட்டையர்,கண்ணன்,
அருணா,ரங்கன்,ராஜன்
இசைக் கோஷ்டிகள் பொப் பாடல்களை படி வரவேற்பைப் பெற்றன.
ரமணி
மேட்றோநியூஸ்
05/02/16
No comments:
Post a Comment