தமிழக தேர்தல் கணக்கை தலைவர்கள்
கூட்டிக் கழித்து அடுத்த கட்டத்துக்கு போக பாதையைத் தேடிக் கொண்டிருக்கையில்
சுப்பிரமணியன்சுவாமி கொழுத்திப் போட்ட அரசியல் வெடி திராவிட முன்னேற்றக் கழகதினுள் பூகம்பத்தை
உருவாக்கிவிட்டது. அரசியல் அரங்கில் மக்கள் செல்வாக்கு இல்லாத சுப்பிரமணியன்சுவாமி
மத்திய அரசில் செல்வாக்கு மிக்கவராக
இருக்கிறார். ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக்குவிப்பு , சோனியா ராகுல் ஆகியோருக்கு எதிரான ஊழல் ஆகிய வழக்குகளின் சூத்திரதரியான சுப்பிரமணியன் சுவாமி, திராவிட முன்னேற்றக் கழகப் பிரமுகர்களான
கனிமொழி,ஆர்.ராசா ஆகியோருக்கு எதிரான 2ஜி வழகில் இருவரும் சிறைசெல்வது உறுதி எனக்
கூறுகிறார்.
திராவிட
முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றுக்கு பொது எதிரியான
சுப்பிரமணியன் சுவாமியின் ருவிட்டரால்
கருணாநிதிக்கும் ஸ்டாலினுக்கும் இடையே முறுகல் ஆரம்பித்துள்ளது. முதல்வர்
பதவிக்கான போட்டியில் இருந்து கருணாநிதி விலகி ஸ்டாலினுக்கு வழிவிட வேண்டும்.
ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும். பாரதீய ஜனதாவும், விஜயகாந்தின்
கட்சியும் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைய வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி தனது ருவிட்டரில்
பதிந்துள்ளார். கருணாநிதிக்கும் ஸ்டாலினுக்கும் இடையே சிறிய மனக்கசப்பு உள்ளது.
இந்த ருவிட்டரால் அது மேலும் கூடியுள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது
கரிசனை இல்லாத சுப்பிரமணியன் சுவாமியின் ஆலோசனை நல்லதற்கல்ல என திராவிட
முன்னேற்றக் கழகத்தின் அபிமானிகள் நினைக்கின்றனர்.
கருணாநிதியை
முதல்வராக ஏற்றுக்கொள்ளும் விஜயகாந்த், ஸ்டாலினை முதல்வராக ஏற்றுக்கொள்வார் என்பது
சந்தேகம். சுப்பிரமணியன் சுவாமியின் முதல் கோரிக்கையே தள்ளாடுகிறது. சுபிரமணியன்
சுவாமி பாரதீய ஜனதாவையும் திராவிட முன்னேற்றக் கழகத்தையும் இணைக்க விரும்புகிறாரா
அல்லது அண்ணா திராவிட முனேற்றக் கழகத்தை நோக்கி
பாரதீய ஜனதாவை நகர்த்துகிறாரா எனத்தெரியாது அரசியல் அவதானிகள்
குழம்பியுள்ளனர். பாரதீய ஜனதாவுடன்
இணைவதற்கு விஜயகாந்த் விரும்புகிறார்.
இந்தக் கூட்டணியால் வெற்றி பெற
முடியாது என்பதை சுப்பிரமணியன் சுவாமியும்
நன்கு அறிவார். பலமான ஒரு கூட்டணியில் சேர்ந்தால்தான் வெற்றி பெறலாம் என்பதை உணர்ந்து பாரதீய
ஜனதாவுக்கு சாதகமாக சுப்பிரமணியன் சுவாமி
காய் நகர்த்தி உள்ளார்.
காங்கிரஸுக்கு திராவிட முனேற்றக் கழகத்தி விட்டால் வேறு
வழி இல்லை. பாரதீய ஜனதா யாருடனாவது கூட்டணி சேரத்துடிக்கிறது. அதனுடைய முதல்
தெரிவு அண்ணா திராவிட முனேற்றக் கழகத்தின் பக்கமே உள்ளது. நாடாளுமன்றத்தில்
மூன்றாவது பெரிய கட்சியான அண்ணா திராவிட
முனேற்றக் கழகத்துடன் சேர்ந்தால் லோக் சபாவில் பலம் பெறலாம் என்று பாரதீய ஜனதா
கருதுகிறது. அள்ளப் பக்கமும் தலையைக் கட்டும் விஜயகாந்த் உறுதியான முடிவைஎடுக்க
சுபிரமணியன் சுவாமியின் கருத்து வழி காட்டியுள்ளது.
ஆட்சி பீடத்தில்
உள்ள பாரதீய ஜனதாக் கட்சியின் ஆதரவு திராவிட
முனேற்றக் கழகத்துக்கும் அண்ணா திராவிட முனேற்றக் கழகத்துக்கும் தேவையாக உள்ளது.
திராவிட முனேற்றக் கழகத்துக்குக் குடைச்சல் கொடுக்கும் 2ஜி வழக்கும், ஜெயலலிதாவின் தலைவிதியைத்
தீர்மானிக்கும் சொத்துக் குவிப்பு வழக்கும்
நீதிமன்றத்தில் உள்ளதால் தமிழகத்தின்
இரண்டு பெரிய கட்சிகளும் தவிக்கின்றன.
காங்கிரஸுடன் சேர வேண்டும் என கருணாநிதி விரும்புகிறார்.
காங்கிரஸுடனான கூட்டணியை ஸ்டாலின் வெறுக்கிறார். வெற்றி பெறுவதற்காக யாருடனும் சேர
கருணாநிதி துடிக்கிறார். தம்மை மதிக்கும் கட்சியுடன்தான் கூட்டணி அமைக்க வேண்டும் என ஸ்டாலின்
விரும்புகிறார். காங்கிரஸின் இளவல் ராகுல் திராவிட முனேற்றக் கழகத்தை
விரும்பவில்லை. தமிழகத்துக்கு பலமுறை விஜயம் செய்த ராகுல் கருணாநிதியையும் திராவிட
முனேற்றக் கழகத் தலைவர்களைச் சந்திக்கவில்லை. கருணாநிதி இதனை மறந்து விட்டார்.
அவரது வாரிசு மறக்கவில்லை.
பாரதீய ஜனதாவுடன் கூட்டணி சேர ஸ்டாலின் விரும்புகிறார்.
கருணாநிதியின் தெரிவு இதற்கு மாறுபாடாக உள்ளது. கூட்டணி பேச்சு வார்த்தைக்காக
குளம் நபி ஆசாத் தமிழ்கம் வரப்போவதாக செய்தி வெளியான நேரத்தில் சுப்பிரமணியன்
சுவாமியின் குண்டு வெடித்துள்ளது. காங்கிரஸுக்கு
மிக நெருக்கமான காஷ்மீரின்
முன்னாள் முதல்வர் கருணாநிதியை சந்தித்த
நேரம் பார்த்து சுப்பிரமணியன் சுவாமி வெடி கொழுத்திப் போட்டுள்ளார். அவரின்
எதிர்பார்ப்பு ஓரளவு நிறைவேறியுள்ளது.
சுப்பிரமணியன் சுவாமியின் கருத்து கருணாநிதியை ஆத்திரமடையச்
செய்துள்ளது. காங்கிரஸ் கட்சியை கருணாநிதி நெருங்குகையில் வெளியான சுப்பிரமணியன்
சுவாமியின் கருத்தின் உள்நோக்கம் பற்றி அவர் நன்கு அறிந்துள்ளார். திராவிட
முனேற்றக் கழகத்தில் அழகிரி அதிகாரத்தில்
இருந்தபோது அடுத்த தலைவர் பிரச்சினை உச்சக் கட்டத்தில் இருந்தது. கருணாநிதியைத்
தவிர வேறு எவரையும் தலைவர் என்ற இடத்தில் வைத்துப் பார்க்க அழகிரி உடன்படவில்லை.
தினகரன் பத்திரிக்கை நடத்திய கருத்துக் கணிப்பில் ஸ்டாலின்
முதலிடம் பெற்று அழகிரி பின்தள்ளப்பட்டதால்
கொதித்தெழுந்த அழகிரியின் ஆதரவளர்கள் மதுரையில் பத்திரிக்கை அலுவலகத்தை
எரித்ததால் மூவர் உயிரிழந்தனர். கருணாநிதியை யாரும் மிஞ்சக் கூடாது என்பது திராவிட
முனேற்றக் கழகத்தில் எழுதப்படாத சட்டம். கருணாநிதி வழி விட்டு ஸ்டாலினை
முதல்வராக்க வேண்டும் என்பதை திராவிட முனேற்றக் கழகத்தவர்கள் வெளிப்படையாக ஒப்புக்
கொள்ளமாட்டார்கள். ஸ்டாலின் தான் முதல்வர்
என கருணாநிதி கையை காட்டினால் திராவிட முனேற்றக் கழகத்தவர்கள் மறுக்காமல் ஒப்புக்
கொள்வார்கள். வேறு கட்சிக்காரர்கள் கூறினால் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
சுப்பிரமணியன் சுவாமியின் கருத்துக்கு ஸ்டாலின் எதுவித
பதிலும் தெரிவிக்கவில்லை. ஜெயலளிதவ்க்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்குக்காக
சுப்பிரமணியன் சுவாமியை ஸ்டாலின் பாராட்டினர். அந்தப் பாராட்டுக்குக் உபகாரமாக அவர் ஸ்டாலினுக்கு சிக்கலைக்
கொடுத்துள்ளார். கடந்த சட்ட சபைத் தேர்தலில் ஸ்டாலினின் ஆதிக்கம் அதிகமாக்
இருந்தது. இம்முறை ஸ்டாலினின் ஆதிக்கம்
அதிகரிக்க வாய்ப்பில்லை.வேட்பாளர் தெரிவில் ஸ்டாலினின் செலவாக்கு கடந்த முறை
உச்சத்தில் இருந்தது. இம்முறை கருணாநிதி தனது அதிகாரத்தை விரிவுபடுத்தும்
சந்தர்ப்பம் உள்ளது. வேட்பாளர் தெரிவில் கருணாநிதியின் கை ஓங்கும்.
கட்சிக்குவிசுவசம் இல்லாதவர்களுக்கு போட்டியிட சந்தர்ப்பம் கொடுத்தால் கடந்த முறை திராவிட
முனேற்றக் கழகம் தோல்வியடைதது. என்ற குற்றச்சாட்டு உள்ளது. இம்முறை அப்படி ஒரு
குற்றச்சாட்டு வெளி வருவதற்கு கருணாநிதி விரும்பமாட்டார். தமிழக சட்ட சபைத்
தேர்தலுக்க்கான அறிவிப்பு இம்மாதம் வெளிவர உள்ளது. அப்போது கூட்டணி பேரம்
உறுதியாகிவிடும்.
கருணாநிதி சுப்பிரமணியன் சுவாமி ஆகிய இரண்டு அரசியல் சாணக்
கியர்களும் முட்டி மோதத்தயாராகிவிட்டனர்.
பலியாகப் போவது யாரென்பது தேர்தல் நெருங்கும் சமயம் தெரிந்து விடும்.
வர்மா
தமிழ்த்தந்தி
14/02/16
2 comments:
இவ்வளவு சொன்ன நீங்கள் ஒன்றை மறந்து விட்டீர்களே.சுப்பிரமணிய சாமியின் இந்த டிவிட்டர் அதிமுக அதிபர் ஜெயலலிதாவிற்கு விடுத்த எச்சரிக்கை. நீங்கள் எங்களோடு கூட்டு சேராவிட்டால் திமுக வோடு சேர்ந்து சொத்து குவிப்பு வழக்கில் உங்களை தொலைத்து விடுவோம்.ஜாக்கிரதை. என்பதே அந்த மறைமுக எச்சரிக்கை.
தங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.தாங்கள் கூறியது முற்றிலும் உண்மை.
அன்புடன்
வர்மா
Post a Comment