அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், பட்டாளி மக்கள்
கட்சி ஆகியவற்றைத் தவிர மற்றைய அனைத்துக் கட்சிகளும் விஜயகாந்தின்
வருகைக்காக கதவை அகலத் திறந்து வைத்திருந்தன. திராவிட முன்னேற்றக் கழகம்,
மக்கள் நலக் கூட்டணி, பாரதீய
ஜனதாக் கட்சி ஆகியவற்றுடன் கூட்டணி பேரம் நடத்திய விஜயகாந்த் கடைசியில் அனைத்துத்
தலைவர்களுக்கும் பட்டை நாமம் பூசிவிட்டார். தமிழக சட்ட மன்றத் தேர்தலில் தனித்துப்
போட்டியிடப்போவதாக விஜயகந்த் அறிவித்துள்ளார். விஜயகாந்தை முதல்வராக்க
விரும்புபவர்கள் தம்முடன் இணையலாம் என அவரின் மனைவி பிரேமலதா அழைப்பு
விடுத்துள்ளார்.
திராவிட
முன்னேற்றக் கழகம்,அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றுக்கு மாற்றீடாக புதிய கட்சியை ஆரம்பித்து அரசியலில்
குதித்த விஜயகாந்தின் வாக்கு வங்கி அனுபவத் தலைவர்களை அதிர்ச்சியடையவைத்தது.
விஜயகாந்தின் கட்சி பெற்ற வாக்குகளால் திராவிட முன்னேற்றக் கழகமும், அண்ணா திராவிட
முன்னேற்றக் கழகமும் வெற்றி வாய்ப்பை இழந்தன.
விஜயகாந்தின் அரசியல் பிரவேசத்தால் . திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு பெரும் பதிப்பு ஏற்பட்டது. அவரை வளைத்துப்
போட . திராவிட முன்னேற்றக் கழகம் பெரும் பிரயத்தனப்பட்டது. யாருடனும் கூட்டணி இல்லை. கடவுளுனும் மக்களுடனும் தான்
கூட்டணி என உரத்துச்சொன்ன விஜயகாந்த் ஜெயலலிதாவின் ஆதரவைப்
பெறவேண்டிய பரிதாப நிலை தோன்றியது.
விஜயகாந்த்
தனித்து தேர்தலைச்சந்தித்த போது
அவருக்குக் கிடைத்த வரவேற்பு மற்றைய தலைவர்களைச் சிந்திக்க வைத்தது. தோல்விகண்டு
துவளாமல் தனிவழி சென்ற விஜயகாந்த் கருணாநிதியைப் பழிவாங்குவதற்காக
ஜெயலலிதாவுடன் கூட்டுச்சேர்ந்தார். தனது
திருமண மண்டபத்தை இடித்த கருணாநிதியை வீட்டுக்கு அனுப்பி பெருமைப்பட்டார். ஜெயலலிதாவை
முதல்வராக்கிய விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவரானார். ஜெயலலிதாவின் தலைமையில்
தமிழக சட்ட மன்றம் கூடிய போது எதிர்க்
கட்சித் தலைவரானார். விஜயகாந்தின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை சட்டமன்றம்
கலையும் போது பறித்தர் ஜெயலலிதா
.தமிழக சட்ட
மன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக விஜயகாந்த் முழங்கியுள்ளார்..
விஜயகாந்தை முதல்வராக்க விரும்புபவர்கள் தமது கட்சியில் இணையலாம் என அவரது மனைவி
பிரேமலதா அழைப்புவிடுத்துள்ளார். தேர்தலில் தனித்து போட்டியிடுவதா கூட்டணி சேர்வதா என்ற குழப்பத்தை கணவனும் மனைவியும்
தெளிவுபடுத்தவில்லை. விஜயகாந்தின் முடிவால் திராவிட முன்னேற்றக் கழகம்
கோபமடைந்துள்ளது. அரசியல் சாணக்கியரான கருணாநிதி அதிர்ச்சியடைந்துள்ளார். ஜெயலலிதா
மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளார். கடந்த சட்ட மன்றத் தேர்தலின்போது ஜெயலலிதாவுடன் கூட்டுச்சேர்ந்து அவரை
முதல்வராக்கிய விஜயகாந்த் இம்முறை வெளியில் நின்று ஜெயலலிதாவை முதல்வராக்க பாதை போட்டுள்ளார்.
திராவிட
முன்னேற்றக் கழகத்துடன் விஜயகாந்த் இணையக் கூடாது
என்பதே ஜெயலலிதாவின் விருப்பம். ஜெயலலிதாவின் விருப்பத்தை விஜயகாந்த்
நிறைவேற்றியுள்ளார். விஜயகாந்தின் முடிவால் திராவிட முன்னேற்றக் கழகமும் பாரதீய
ஜனதாவும் தனித்து விடப்பட்டுள்ளன. இப்போது விஜயகாந்தின் முறை கூட்டணிக் கதவை
திறந்து வைத்துள்ளார் விஜயகாந்த். மக்கள் நலக் கூட்டணி அல்லது பாரதீய ஜனதாக் கட்சி
விஜயகாந்துடன் இணையலாம். போக்கிடம் இல்லாத சிறுகட்சிகளும் விஜகந்தின் வலையில்விழ தயாராக
இருக்கின்றன.
மக்கள் நலக்
கூட்டணியுடன் இணைந்தால் வாக்கு வங்கி அதிகரிக்கும் ஆனால்,முதல்வர் கனவு பொசுங்கிவிடும்.விஜயகாந்த் வெற்றி பெறுவார்.
அவரது கட்சியைச் சேர்ந்தவர்களில் எத்தனைபேர் வெற்றி பெறுவார்கள் எனக்கூறமுடியாது.
வைகோவை தேர்தலில் தோற்கடித்ததுபோல திராவிட முன்னேற்றக் கழகமும் அண்ணா திராவிட
முன்னேற்றக் கழகமும் இணைந்து விஜயகாந்தை தோல்வியடையச் செய்யும் சந்தர்பமும்
உள்ளது.
பாரதீய ஜனதாக்
கட்சியுடன் இணைந்தால் மனைவிக்கும் மைத்துனனுக்கும் பெரிய பதவி வேண்டும் என
விஜயகாந்த் கோரிக்கை விடுவார். தனது குடும்பத்தில் உள்ளவர்களுக்கு பதவி வேண்டும் என்பதிலேயே விஜயகாந்த் குறியாக
உள்ளார்.கதாநாயகன் விஜயகாந்தின் வெறிகொண்ட
ரசிகனாக இருந்து அரசியல் தலைவர் விஜயகாந்தின் விசுவாசம் மிக்க தொண்டனாக
மாறியவர்களை விஜயகாந்த் நடுத்தெருவில் விட்டுவிட்டார். அவருடைய பேரன்கள் எவையும்
மக்களைப் பற்றியோ தமிழகத்தைப் பற்றியோ இருக்கவில்லை. எத்தனை தொகுதிகள்,
செலவுக்குப் பணம் அமைச்சரவையில் பங்கு முதலமிச்சர் அல்லது துணை முதல்வர் போன்ற
கோரிக்கைகளையே விஜயகாந்த் முனவைத்தார்.
திராவிட
முன்னேற்றக் கழகத்துடன் விஜயகாந்த் இணைவார்
என்றே அவரது கட்சியினர் நம்பினார்கள். சகல
தேர்தல்களிலும் தோல்வியைச் சந்தித்ததனால் இம்முறையாவது வெற்றி பெற எண்டும்
என விஜயகாந்தின் கட்சி உறுப்பினர்கள் விரும்பினார்கள் அவர்களது விருப்பத்தில் விஜயகாந்த்
மண்ணள்ளிப் போட்டுவிட்டார்.
இழந்தவற்றை திரும்பப்பெறலாம் என நினைத்தவர்கள் துவண்டு போயுள்ளனர்.
விஜயகாந்தின் முடிவை அவரது கட்சியினரே
விரும்பவில்லை. சக்தி மிக்க அவரது கட்சியினரை வலை வீசி பிடிக்கும் வேலையை திராவிட
முன்னேற்றக் கழகம் ஆரம்பிக்கும் என எதிர்பர்க்கப்படுகிறது.. vijaவிஜயகாந்தின்
கட்சியை பலவீனப்படுத்தும் திட்டத்தை திராவிட முன்னேற்றக் கழகம் விரைவில்
ஆரம்பிக்கும்.
வர்மா.
துளியம்.கொம்
2 comments:
POLITICAL SUICIDE BY DMDK
Anonymous Anonymous said...
POLITICAL SUICIDE BY DMDK ///
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
அன்புடன்
வர்மா
Post a Comment