அத்தியாவசியத் தேவைகளில் ஒன்றான
மின்சாரம் தடைப்பட்டதால் கடந்த 13 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இலங்கை இருளில் மூழ்கியது. பிற்பகல் மூன்று
மணிக்கு மின்சாரம் தடைப்பட்டது. சில நேரங்களில் ஏற்படும் வழமையான மின் தடை என
நினைத்த மக்கள் தமது அன்றாடக் கடமைகளை மேற்கொண்டனர். நேரம் செல்லச்செல்ல மின்சாரம்
இல்லாதது பற்றிய செய்திகள் வேகமாகப் பரவத்தொடங்கின. தொலை தூரத்தில் இருக்கும்
உறவினர்களுடனும்,நண்பர்களுடனும் தகவல்களைப் பரிமாறியபோது இலங்கை பூராவும்
மின்சாரம் இல்லை எனத்தெரியவந்தது.
வீதிச் சமிக்ஞைகள்
செயலிழந்ததால் போக்கு வரத்து நெருக்கடி ஏற்பட்டது. ரயில் சேவை தாமதமாகியது.
மின்சாரம் இல்லை என்றால் நகர வாழ்க்கை நரகமாகிவிடும். மின்சாரத்தை நம்பி
வாழ்ந்தவர்கள் பாதிக்கப்பட்டனர். சில இடங்களில்
உள்ள மக்கள் நீர் இன்றித் தவித்தனர். மின் விசிறியை நம்பி வாழ்ந்தவர்கள்
புழுக்கத்தில் வெந்தனர். இரவு இன்பது மணிபோல் கொழும்பு,கண்டி போன்ற பிரதான நகரங்களுக்கு மின்சாரம்
வழங்கப்பட்டது. அதன் பின்னர் படிப்படியாக மற்றைய இடங்களுக்கும் மின்சாரம் வழங்கப்பட்டது. துண்டிக்கப்பட்ட மின் இணைப்பு கிடைத்ததால்
மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். அந்த நிம்மதி விடிந்ததும் கலைந்தது. பியகம
உப மின் நிலையத்தில் உள்ள மின்மாற்றி வெடித்ததால் மின்சாரம் தொடர்ந்து வழங்க
மிடிய்தை என்ற செய்தி மக்களை அதிர்ச்சியடைய வைத்தது.
பியகம உப மின் நிலையே மின் மாற்றி வெடித்ததில் சதி உள்ளது
என்ற செய்தி பரவத் தொடங்கியது. நல்லிணக்க அரசங்கத்தி முடக்குவதற்கு யாரோ
திட்டமிட்டு மின் மாற்றியை வெடிக்கச் செய்திருக்கிறார்கள் என்ற தகவல் எங்கும்
பரவியது. அரசங்கத்தை ஆட்டம் காணச்செய்வதற்கு மக்களை நெருக்கடிக்குத் தள்ளுவதா என்ற
கேள்வி எழுந்தது. பிரதான மின் நிலையங்களுக்கு இராணுவப்பாதுகப்பு வழங்குமாறு
ஜனாதிபதி மைத்திரி உத்தரவிட்டார். உபமின் நிலைய வெடிப்பின் பின்னணியில் உள்ள சதி
பற்றி விசாரணை நடத்தி உண்மையை அறிய
வேண்டும் என பிரதமர் ரணில்
தெரிவித்தார். அரசாங்கத்தின் தகவல்கள்
மூலம் மின்மாற்றி வெடித்ததன் பின்னணியில்
சதி உள்ளதென்ற உண்மை வெளிவந்தது.
நல்லிணக்க அரசாங்கத்தில் ஆளுகையில் கடந்த ஆறு மாதங்களில் மூன்று முறை மின்சாரம் தடைப்பட்டதால் அதற்குப் பொறுப்பேற்று
மின்சார சபைத் தலைவர் தனது இராஜினாமாக் கடிதத்திக் கையளித்தார். அவரின் இராஜினாமாவை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை.மின்
மாற்றி வேடித்ததில்சதி உள்ளதால் மின்சார சபைத் தலைவர் பதவியில் தொடர்ந்தும் இருக்க
வேண்டும் என அரசாங்கம் கருதுகிறது. மின் தடையின் பின்னணியில் உள்ள திக்கு தலைவரை
பலியாக்க அரசாங்கம் விரும்புகிறது எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடு வேறுவிதமாக
உள்ளது. மின்சாரம் தடைப்பட்டதற்கு பொறுப்பேற்று அமைச்சர் பதவி விலக
வேண்டும் என எதிர்க்கட்சியினர் கோஷமிடுகின்றனர். இதே போன்ற பல சம்பவங்கள் முன்னைய
அரசாங்கத்தில் ஏற்பட்ட போது அமைச்சுப் பதவியில் இருந்தவர்கள் இப்போது அமைச்சரை
பதவி விலக கோருகின்றனர்.
ஞாயிற்றுக் கிழமை பியகமவில் நடந்த உபமின்நிலைய
வெடிப்புச் சம்பவத்துக்கும் வெள்ளிக்கிழமை
கொட்டுகொட உபமின்நிலையத்தில் நடைபெற்ற வெடிப்புச் சம்பவத்துக்கும் ஒற்றுமையுள்ளதாக
மின்சக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இரண்டு மின்மாற்றிகளிலிலும் மர்மமான முறையில் ஆனால் ஒரே
மாதிரியே வெடிப்புச் சம்பவம் ஏற்பட்டுள்ளதாக மின்சக்தித் துறை அமைச்சின் செயலாளர்
சுரேன் பட்டகொட தெரிவித்துள்ளார். இந்த வெடிப்புச் சம்பவங்கள் குறித்து
பொறியியலாளர்கள் ஆராய்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இரண்டு இடங்களிலும் பாதுகாப்பில் இராணுவத்தினர்
ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அவர்இ இரண்டு இடத்திலும் எவ்வாறு ஒரேமாதிரி
வெடிப்புச் சம்பவம் ஏற்பட்டிருக்கும்? என இத்துறையில் ஐம்பது வருடங்கள் அனுபவம் மிக்க
பொறியியலாளர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர் எனவும் தெரிவித்தார்.
உலகெங்கிலும் இப்படியான சம்பவங்கள் இதுவரை
நடைபெறவில்லையெனவும் கொக்கொடுவ மின்மாற்றியின் திருத்தவேலைகள் முடியும்வரை
நீர்கொழும்புப் பகுதிக்கு அடிக்கடி மின்சாரம் தடைப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கொக்கொடுவ பகுதியில் இலங்கை விமானப்படையினரே பாதுகாப்புப்
பணியில் ஈடுபட்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் மின்சார விநியோகம் சீர்பட்டுள்ளது என
அறிவிக்கப்பட்ட நிலையில் மினுவாங்கொட பகுதியில் அடுத்த மின்மாற்றி மர்மமான
முறையில் வெடித்துள்ளது.
நுரைச்சோலை அனல் மின் நிலைய மின்மாற்றியில் வெடிப்பு
நடைபெற்று திருத்தவேலைகள் நடந்துகொண்டிருந்த நிலையில் இன்றுவரை சரியாக மின்சாரம்
வழங்கப்படவில்லை.
கடந்த வெள்ளிக்கிழமை
மதியம் மின்சாரத்துறை அனைத்து வேலைகளும் நிறைவடைந்துவிட்டன. இனிவரும்
காலங்களில் சீராக மின்சாரம் கிடைக்கும் என அறிவித்திருந்த நிலையில் மினுவாங்கொட
பகுதியில் உள்ள உப மின்வழங்கும் நிலையத்தில் மின்மாற்றியொன்று மர்மமான முறையில்
வெடித்துள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர் தீயை
அணைத்தனர். ஈடுபட்டுள்ளனர். இதனால் நீர்கொழும்பில் சில இடங்களில் மின்சாரம்
தடைப்பட்டது.
மின்சார விநியோகக் கட்டமைப்பை சீர்குலைக்கும் வகையில்
சதிவேலைகள் நடைபெற்று வருகின்றது எனும் சந்தேகத்தின் பேரில் அனைத்து
மின்நிலையங்களிலும் இராணுவத்தினரைப் பாதுகாப்பிற்கு ஈடுபடுத்தியுள்ள
நிலையிலேயே உபமின்மாற்றியொன்று வெடித்துள்ளது
குறிப்பிடத்தக்கது.
மின்சாரம் வழமைக்குத் திரும்பிவிட்டது இனி மின் தடை இருக்காது என
அறிவிக்கப்பட்டபின்னர் ஜாஎல கொட்டு
கொடவில் உள்ள மின் மாற்றி வெடித்தது. பியகம,
ஜாஎல ஆகிய இரண்டு இடங்களிலும் உள்ள
மின்மாற்றிகள் ஒரேமாதிரி வெடித்தது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த
அரசாங்கத்துக்கு விசுவாசமான அதிகாரிகளின்
வேலை என்றே கருத வேண்டி உள்ளது. அரசங்கத்தி சீர் குலைப்பதற்கு மக்களுடன்
விளையாடும் அதிகாரிகள் களை எடுக்கப்பட வேண்டும். கடந்த காலங்களில் மின் தடி ஏற்பட்டதற்கும்
சதி இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட வேண்டும்.
வானதி
சுடர் ஒளி
மார்ச் 22/மார்ச் 28
No comments:
Post a Comment